• June 16, 2019

நேபாளத்தில் கட்டிடம் இடிந்த விபத்தில் 3 இந்தியர்கள் பலி

காத்மாண்டு: நேபாளம் நாட்டின் டாங் மாவட்டத்தில் பிரபல சிமெண்ட் தொழிற்சாலையில் ஆறாம் மாடி பகுதியை விரிவாக்கம் செய்வதற்கான கட்டுமான பணிகள நடைபெற்று வருகின்றன. வழக்கம்போல் இன்று கட்டுமான பணிகள் நடைபெற்ற போது கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. தகவலறிந்து விரைந்து …

கேரளாவில் பட்டப் பகலில் பெண் காவலர் எரித்துக் கொலை

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் மாவேலிக்காரா மாவட்டத்திற்குட்பட்ட வல்லிகுன்னம் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வந்த சவுமியா. இவர் இன்று பிற்பகல் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து காரில் வந்த ஒருவர் பெண் காவலர் …

டாஸ்மாக் பாரில் ஊழியர் மீது கொதிக்கும் எண்ணை ஊற்றிய 3 பேருக்கு வலைவீச்சு

மதுரை: மதுரை செல்லூரில் உள்ள பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் கனிராஜ் (வயது 33). இவர், கைலாசபுரம் தத்தனேரி மெயின் சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் சிவகாமி நகரைச் சேர்ந்த ஜெயசூர்யா, அசோக்நகரைச் சேர்ந்த மீன் முள் முத்துப்பாண்டி …

குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்த 5 பேர் கைது- 154 மது பாட்டில்கள் பறிமுதல்

நாகர்கோவில்: மார்த்தாண்டம் போலீசார் கழுவந்திட்டை சந்திப்பில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு அனுமதியின்றி மது விற்பனை செய்த ராஜகோபால் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 71 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். கோட்டார் போலீசார் வடலிவிளை வயல் …

ராயக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வியாபாரி பலி

ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் மணிகண்டன் (வயது 27). இவர் ஒடையாண்ட அள்ளி பேருந்து நிறுத்தம் அருகே பழைய பொருட்களை வாங்கி விற்கும் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி கலைவாணி …

நெல்லை அருகே குடும்ப தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை- போலீசார் விசாரணை

நெல்லை: பாளை, கக்கன்நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெபராஜ். இவரது மனைவி முத்து லட்சுமி (38). ஜெபராஜ் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் அவரது மனைவி முத்து லட்சுமி கணவரை சத்தம் போட்டார். ஆனால் ஜெபராஜ் மனைவியை தாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த …

நெல்லை அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை- போலீசார் விசாரணை

நெல்லை: நெல்லை அருகே உள்ள மானூர் பகுதியை அடுத்த மேலபிள்ளையார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது47). இவர் அடிக்கடி மது குடித்ததால் வயிற்று வலி ஏற்பட்டது. இது தொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த நாராயணன் நேற்று விஷம் குடித்தார். …

உடுமலை அருகே பழைய டயர்களில் மறைத்து ரூ.15 கோடி சந்தன மரம் கடத்தல்

உடுமலை: கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் சொயாப் என்ற குஞ்சப்பு (வயது 36). இவர் உடுமலை அருகே உள்ள தமிழக, கேரள எல்லையான இடுக்கி மாவட்டம் மறையூர் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.15 கோடி சந்தன கட்டைகளை கடத்தியதாக மறையூர் …

“நாளைய போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டும்”- பாகிஸ்தான் கேப்டனின் தாய்மாமா விருப்பம்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் பரபரப்பான போட்டி நாளை மான்ஸ்செஸ்டர் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டன. இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி என்பதால் டிக்கெட் விற்பனை …

குரோம்பேட்டை பகுதியில் செல்போன் பறித்த வாலிபர் கைது- போலீசார் விசாரணை

சென்னை: கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் பிரபாகர். இவர் நேற்று முன்தினம் மாலை குரோம்பேட்டையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் ஜேம்ஸ் பிரபாகரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பினார். இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் விசாரணை வழக்கு …