காஞ்சீபுரத்தில் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை – போலீசார் விசாரணை

காஞ்சீபுரம்: காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவரது மனைவி கீதா. இவர்களது மகள் ரக்சனா (14), மகன் தர்மேஷ் (12). இவர்களில் ரக்சனா காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்த அவர் வீட்டில் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

மத்திய அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து சங்கரன்கோவில் பகுதியில் நகைக்கடை, பட்டறைகள் அடைப்பு

மத்திய அரசு கடந்த மாதம் 15-ந்தேதி முதல் கட்டாய ஹால்மார்க் சட்டத்தை அமல்படுத்தியது. இந்த பிஐஎஸ் கட்டாய ஹால்மார்க் திட்டத்தை நகை வியாபாரிகள் வரவேற்றுள்ள நிலையில் நகைகளுக்கு முத்திரைபெறும் முறையில் பி.ஐ.எஸ்.-60 என்ற முறை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இது நடைமுறைக்கு குழப்பம் விளைவிக்கும் குறைபாடுகள் கொண்ட தொழில்நுட்பமான எச்.யூ.ஐ.டி. செயல்பாட்டை கொண்டு உள்ளதாக நகை வியாபாரிகள் கூறுகின்றனர். இந்த நடைமுறையால் சிறு நகை வியாபாரிகள் வியாபாரம் செய்வது மிகுந்த சிரமமாகும் என அவர்கள் கருதுகின்றனர். எனவே இந்த புதிய எச்.யூ.ஐ.டி. நடைமுறையை மத்திய அரசு …

Read More

பிரேசில் அதிபரின் கொரோனா தொற்று குறித்த வீடியோ நீக்கம்

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைநது வரும் நிலையில், கொரோனா குறித்து சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும் கொரோனா தொடர்பாக பல்வேறு நாடுகளின் முக்கியப் பிரமுகர்களும் கூட ஆதாரமற்ற தகவல்களை பகிரும் நிலையில் தவறான தகவல்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தானது கொரோனா பாதிப்பை தடுக்கவல்லது என பிரேசில் அதிபர் பேசிய வீடியோவை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது. விதிகளுக்கு எதிராக அவரின் வீடியோ இருப்பதால் நீக்கயதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனாவை …

Read More

ஷங்கர் படத்தில் இணையும் ராஷ்மிகா

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், தற்போது  தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு பிரம்மாண்ட பட்ஜெட்டில்  தயாரிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராம்சரணுக்கு இரட்டை வேடம் எனவும். ஒருவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒரு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு நாயகனுக்கு ஜோடியான நடிக்க ராஷ்மிகா மந்தனாவை ஒப்பந்தம்  செய்ய …

Read More

சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் நடிக்கப்போவது யார்?

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளி தினத்தில் ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றபடம் ‘சூரரைப்போற்று’. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கி இருந்தார்.  சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். தற்போது சூரரைப் போற்று திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதன் இந்தி பதிப்பையும் சுதா கொங்கரா தான் இயக்க உள்ளார். மேலும் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்க …

Read More

அரண்மனை 3 எப்போது வெளியாகும்?

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை மற்றும் அரண்மை 2 படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் 3-ம் பாகத்தை இயக்கியுள்ளார்.  முதல்பாகத்தில் வினய் 2-வது பாகத்தில் சித்தார்த் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், 3-வது பாகத்தில் ஆர்யா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் விவேக், யோகிபாபு ஆகியோர் காமெடி வேடங்களில் வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் …

Read More

பாத வெடிப்பை தடுக்கும் மருத்துவம்

இரவில் கற்றாழையைப் பாதங்களில் தடவி, காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்து பாதங்களை கழுவவும். தொடர்ந்து 4-5 நாட்கள் இப்படி செய்து வர, வறண்ட பாதங்கள் மிருதுவாகும். சருமம் மிருதுவாக சமையல் சோடா உதவும். சமையல் சோடா கலந்த வெந்நீரில் 15 நிமிடங்கள் பாதங்களை ஊறவிடவும். பிறகு, நுரைக்கல் கொண்டு பாதங்களை தேய்த்து சுத்தமான நீரில் கழுவவும்.

Read More

ஜூலை 20, இன்றைய தினத்தில் இறந்த முக்கிய பிரமுகர்கள்

1296 – ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜி, தில்லி சுல்தான் 1866 – பேர்னாட் ரீமன், செருமன் கணிதவியலாளர் (பி. 1826) 1903 – பதின்மூன்றாம் லியோ (திருத்தந்தை) (பி. 1810) 1920 – சாரதா தேவி, ஆன்மிகவாதியும், இராமகிருஷ்ணரின் மனைவி (பி. 1853) 1937 – மார்க்கோனி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய இயற்பியலாளர் (பி. 1874) 1951 – ஜோர்தானின் முதலாம் அப்துல்லா (பி. 1882) 1965 – பதுகேஷ்வர் தத், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1910) 1972 – கீதா தத், இந்திய நடிகை, பாடகி (பி. 1930) 1973 – புரூசு லீ, அமெரிக்க நடிகர் (பி. 1940) 1997 – எம். ஈ. எச். மகரூப், இலங்கை அரசியலாவதி (பி. 1939) 2014 – தண்டபாணி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் 2020 – கர்ணன், தமிழக எழுத்தாளர் (பி. 1938)

Read More

பச்சை காய்கறிகளின் ஊட்டச்சத்தை அறிந்துகொள்வோம்

பச்சை காய்கறிகளின் ஊட்டச்சத்தை முழுமையாகப் பெறுவதற்கு, ஃபிரெஷான பொருள்களை சரியான முறையில் ஸ்டோர் செய்து வைக்க வேண்டும். பச்சைக் காய்கறிகள் வாங்கும்போது இருக்கும் அளவைவிட, சமைத்தப் பின்பு அளவு குறைந்துவிடும் என்பதை மறக்க வேண்டாம். அரை கிலோ வெந்தயக் கீரை அல்லது பசலைக் கீரை, சமைத்த பின்பு ஒரு கப் அளவுக்கே வரும். நல்ல பச்சை நிறத்தில் இருக்கும் இலைகளைத் தேர்வு செய்யவும். மஞ்சள் நிறம் முற்றிய இலையைக் குறிக்கும்.  கீரைகளை சேமித்து வைக்க, அவற்றை ஈரமான பேப்பர் டவலால் சுற்றி, துளையிட்ட பிளாஸ்டிக் …

Read More

அறிமுகப்போட்டியில் அசத்தல் : இஷான் கிஷான் சாதனை

கொழும்பு: இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்தது.  இதனையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி  36.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் என்ற இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய இந்தியாவின் …

Read More