• August 17, 2019

மழைநீர் சேகரிப்பில் சாதனை செய்யும் நிறுவனம்

தற்போது கிரண்ஃபோஸ் என்ற குழாய்கள் தயாரிக்கும் நிறுவனம் 2018-ம் ஆண்டு சேமித்த மழைநீரின் அளவு 8,00,000 லிட்டர்கள் என தெரியவந்துள்ளது . சேமிப்புக் கிணறுகள், கால்வாய்கள், மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் போன்றவற்றை அமைத்து, அவற்றை சேகரித்து வைத்ததோடு, மீதி மழைநீரை நிலத்தடி நீர் …

தன்னுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக புகாரளித்த பெண்

இலங்கையில் தலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தலைமன்னார் காவல் நிலையத்தில் பணி யாற்றும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக நேற்று மாலை மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். தன்னுடன் தவறாக நடந்து கொள்ள …

இலங்கையில் மருத்துவமனை கழிவகற்றல் குறித்து வெளியான உத்தரவு

மருத்துவமனை கழிவுகளை புதைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி கருப்பையா ஜீவராணி நேற்று உத்தரவிட்டார். அதனையடுத்து மருத்துவமனை பணிப்புறக்கனிப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இலங்கையில் மட்டு போதனா மருத்துவமனையின் கழிவுகளை புதைப்பதற்காக பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட நிலமான செங்கலடி வேப்பைவெட்டுவான் பகுதியில் ஒதுக்கப்பட்டு அங்கு …

பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள தாழிறக்கம் காரணமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் ஹட்டனிலிருந்து போடைஸ் வழியாக டயகம செல்லும் பிரதான சாலையில் அக்கரபத்தனை எல்பியன் பகுதியில் பிரதான சாலையில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக போக்குவரத்து ஒருவழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமீப காலமாக மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் …

இலங்கையில் முக்கிய பகுதியில் கைக்குண்டு மீட்பு

இலங்கையில் அம்பாறை , சம்மாந்துறை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . நேற்று மாலை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு சம்மாந்துறை பழைய திரையரங்கிற்கு அருகிலுள்ள நிலம் ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாதவர்களால் கைவிடப்பட்டிருந்த …

பிரசித்திமிக்க ஆலயத்தில் பாதுகாப்பு சோதனைகளுக்காக புதிய கருவிகள்

இலங்கையில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பாதுகாப்பு சோதனைகளுக்காக புதிய ஸ்கேனர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆலய திருவிழாவை முன்னிட்டு இந்த முறை ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கேற்றவாறு ஆலயத்திறகு வருபவர்களிடம் பிரத்யேக சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இலங்கையில் புர்கா தடை தொடர்பாக நடைபெறவிருக்கும் ஆலோசனை

இலங்கையில் புர்காவுக்கு முழுவதுமாக தடையை ஏற்படுத்தாமல் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான வேளைகளில் அதனை தடைசெய்யும் வகையில் சட்டமியற்ற நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக சட்டமா அதிபர் துறையினரிடம் நீதி அமைச்சகம் ஆலோசனை கோரியுள்ளது. நாட்டில் அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பை …

இலங்கையில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிப்பு

இலங்கையில் சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் மேல் மாகாணங்களில் பல முறை மழை பெய்யும் எனவும் வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அவ்வாறு வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில …

பயங்கர விபத்தில் இரு பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு ; மேலும் இருவர் காயம்

இலங்கையில் தம்புள்ளை – ஹபரணை சாலையில் நடைபெற்ற பயங்கர விபத்தில் 3 பேர் பலியானதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். தம்புள்ளை – ஹபரணை வீதியில் மெஹஸ்வெவ என்ற பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் பலியானதுடன் …

ரகசிய வாக்குமூலம் அளித்துள்ள பயங்கரவாதியின் மனைவி

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஷங்ரில்லா ஹோட்டலில் குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்திய தற்கொலை பயங்கரவாதிகளில் ஒருவரான தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவன், பயங்கரவாதி சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா நேற்று கோட்டை நீதிமன்றத்தில் ரகசிய வாக்கு மூலம் …

மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றில் சிக்கி 6 வயது சிறுமி பலி

இலங்கையில் புத்தளம் கற்பிட்டி அம்மா தோட்டம் 31 வது கட்டை பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வாகன விபத்தில் பள்ளிவாசல்துறை, முசல்பிட்டியைச் சேர்ந்த பாத்திமா றுஸ்னா என்ற 6 வயது சிறுமி பலியானார். கற்பிட்டி பகுதியை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று …

முக்கிய சாலையை மறித்து பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

இலங்கையில் ஹட்டனிலிருந்து எபோட்ஸ்லி வரையான கிட்டத்தக்க ஆறு கிலோ மீட்டர் பாதையை புனரமைப்பு செய்து தரும்படி கோரிக்கை விடுத்து பொதுமக்கள் நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஏறத்தாழ 200 பேர் லெதன்டி தோட்டத்தின் மார்பரோ பிரிவில் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அதிகபட்சமாக 25 …

இலங்கை தலைநகரில் இருவர் வெட்டிக் கொலை

இலங்கை தலைநகர் கொழும்புவில் மாதம்பிட்டிய பகுதியில் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணங்களாக மீட்கப்பட்டுள்ளனர் . இதில் வெட்டிக்கொலை செய்யப்பட்டவரில் ஒருவர் பாதாள உலகக்குழு உறுப்பினர் என காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொழும்பு, கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் இருந்தே இந்த இருவரின் …

பள்ளி மாணவர்களை கொண்டு வந்த பஸ் 6 வாகனங்களுடன் மோதி பயங்கர விபத்தில் சிக்கியது

இலங்கையில் நிட்டம்புவ பகுதியில் பாலர் பள்ளிக்கூட மாணவர்களை கொண்டு வந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டையிழந்து எதிர்திசையில் வந்த 6 வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானது . கொழும்பு – கண்டி பிரதான சாலையில் நிட்டம்புவ பகுதியில் நேற்று காலை 7.45 மணியளவிலே இந்த விபத்து …

முக்கியமான இடத்தில் கேரள கஞ்சாவுடன் பிடிபட்ட ஆசாமி

இலங்கை யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக இலங்கை கடற்படை தகவல் கூறியுள்ளது . நேற்று அதிகாலை கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போதே இந்த ஆசாமி கேரள கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட ஆசாமியிடமிருந்து 8.7 கிலோ கிராம் …