திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 54). இவரது மகன் விக்னேஷ் (20). கண்ணன் தனது மகன் விக்னேசுடன் காக்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை விக்னேஷ் ஓட்டினார். திருவள்ளூரை அடுத்த காக்களூர் பாதாள விநாயகர் கோவில் அருகே சென்ற போது, எதிரே ஆவடியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய தந்தை, மகன் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இந்த …

Read More

கந்தர்வகோட்டை அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை- போலீசார் விசாரணை

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை அருகே உள்ள நரியன்குடிப்பட்டி பகுதியை சேர்ந்த ரெங்கசாமியின் மகன் சாமிநாதன்(வயது 30). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சாமிநாதன், திருமணம் ஆகாத ஏக்கத்தில் தனது விவசாய நிலத்திற்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்டவர்கள் அவரை மீட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இது குறித்து ரெங்கசாமி அளித்த புகாரின்பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி …

Read More

ஆலங்குடி அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

ஆலங்குடி: ஆலங்குடி போலீசார் அப்பகுதியில் உள்ள திருவள்ளுவர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற வாலிபரை, போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர், தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகா குருவிக்கரம்பையை சேர்ந்த மதியழகனின் மகன் ஆனந்தன்(வயது 23) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Read More

டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை

கோவை: கோவையில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த கோவை மாநகராட்சி சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 38-வது வார்டு பாரதி பூங்காவில் நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தலா ரூ.1000 மதிப்புள்ள நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

Read More

ராமநாதபுரம் அருகே தலைக்கவசம் அணியாத 494 பேர் மீது வழக்கு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில் போலீசார் ராமநாதபுரம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 36 பேர் மீதும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்ற ஒருவர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 414 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 80 பேர் மீதும், ஓட்டுனர் உரிமம் இல்லாத 34 …

Read More

சாயல்குடி அருகே மது விற்பனை செய்தவர் கைது

சாயல்குடி: சாயல்குடி அருகே கன்னிராஜபுரம்-செவல்பட்டி சாலையில் சாயல்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வைத்து மது விற்றதாக கன்னிராஜபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(வயது 51) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 111 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

வடமதுரை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

வடமதுரை: அய்யலூர் அருகே உள்ள குப்பாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 27), பட்டதாரி. இவர் விவசாயம் செய்து வருகிறார். புத்தூரை சேர்ந்தவர் முருகேஸ்வரி (20). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இருவரும் பக்கத்து ஊர்களை சேர்ந்தவர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. முருகேஸ்வரியின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு நேற்று முன்தினம் வெளியேறினர். பின்னர் அவர்கள் வீரப்பூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து …

Read More

அழிக்காலில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் ஊருக்குள் புகுந்த கடல்நீர்

ராஜாக்கமங்கலம்: வெள்ளிச்சந்தை அருகே உள்ள அழிக்கால் மீனவர் கிராமம். இங்கு 600-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் கடல் சீற்றம் அடிக்கடி ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே கடல் சீற்றமாக இருந்தது. அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை ஊருக்குள் புகுந்தது. இந்த கடல் நீர் அங்குள்ள சுமார் 50 வீடுகளுக்குள் புகுந்ததில் டி.வி. உள்ளிட்ட பொருட்கள் நாசமானது. இந்த திடீர் சீற்றத்தால் மீனவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அவர்கள் கடும் …

Read More

நாகர்கோவில் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை- போலீசார் விசாரணை

நாகர்கோவில்: நாகர்கோவில் வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் கோபாலன். இவர் அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சந்திரிகா (வயது 54). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் தூங்கச் சென்றனர். பின்னர் காலையில் எழுந்து பார்த்த போது சந்திரிகா அங்குள்ள 50 அடி ஆழம் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சந்திரிகா உடலை …

Read More

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 47 ஆயிரம் பேர்- மாவட்டவாரியாக தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 89 ஆயிரத்து 532 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 68 …

Read More