செங்கல்பட்டு மாவட்டத்தில் 162 பேருக்கு கொரோனா பாதிப்பு

செங்கல்பட்டு: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 89,532 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,966-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 8,120 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 162 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,282 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 158 பேர் உயிரிழந்துள்ளனர்.

Read More

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 45 ரேசன் கடைகள் மூடல்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை 2,772 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 209 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,981 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்று வேலூர் மாவட்டத்தில் 45 ரேசன் கடைகள் மூடப்பட்டது. ரேசன் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டதால் கடைகள் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

Read More

மதுரையில் 336 பேருக்கு கொரோனா பாதிப்பு

மதுரை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 6,078 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 336 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,414 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,590 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

Read More

3 தொகுதி இடைத்தேர்தல் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை- தலைமைத்தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, திருவொற்றியூர் மற்றும் குடியாத்தகம் தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் குறித்து தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியதாவது, 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேதி முடிவு செய்யவில்லை என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்வது குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை செய்யப்பட்டது.

Read More

சாத்தூர் அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை

சாத்தூர்: சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலபதி (வயது 48), விறகு வெட்டும் கூலித்தொழிலாளி. இவரும், அதே ஊரைச் சேர்ந்த முனியசாமி (50) என்பவரும் விறகு வெட்டும் கூலித்தொழில் செய்து வந்தனர். விறகு வெட்டும் தொழிலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் முனியசாமி குடிபோதையில் முனியசாமியின் வீட்டு வாசலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த வெங்கடாசலபதியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். உடனே அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவியும், …

Read More

தூத்துக்குடி கொரோனா வார்டில் நொண்டி விளையாட்டு

தூத்துக்குடி: தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் கொரானாவால் பாதிக்கப்படுவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அரசு மருத்துவமனை விளையாட்டு திடலாக மாறிப்போய் இருக்கிறது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றாக சேர்ந்து மருத்துவமனை வளாகத்தில் நொண்டி விளையாடுகின்றனர். இதனால் அவர்களின் மன அழுத்தம் குறைவதாக கூறப்படுகிறது.

Read More

நெல்லை மாவட்டத்தில் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 1,758 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 836 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 53 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,811-ஆக உயர்ந்துள்ளது.

Read More

வேலூரில் மேலும் 209 பேருக்கு கொரோனா பாதிப்பு

வேலூர்: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 2,772 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 209 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,981 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,038 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

Read More

அரசு ஊழியர்கள் குறித்த நேரத்துக்குள் பணிக்கு வர வேண்டும்

சென்னை: தமிழக அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்கள். அரசு ஊழியர்கள் இன்று முதல் காலை 10.30 மணிக்குள் அலுவலகங்களுக்குள் வந்திருக்க வேண்டும். நிலுவையில் உள்ள கோப்புகளுக்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அரசு பணியாளர்கள் வருவதை அறிக்கை தயார் செய்து தினமும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறைக்கு அனுப்ப வேண்டும் என்று அனைத்து அலுவலகங்களுக்கும் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா உத்தரவிட்டுள்ளார்.

Read More

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 54). இவரது மகன் விக்னேஷ் (20). கண்ணன் தனது மகன் விக்னேசுடன் காக்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை விக்னேஷ் ஓட்டினார். திருவள்ளூரை அடுத்த காக்களூர் பாதாள விநாயகர் கோவில் அருகே சென்ற போது, எதிரே ஆவடியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய தந்தை, மகன் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இந்த …

Read More