• August 19, 2019

உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள்

1 காளான் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று காளான். இந்த காளானை உணவில் அதிகம் சேர்ந்து வந்தால், இதில் உள்ள குறைவான கலோரி மற்றும் கொழுப்புக்களால், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். 2 முட்டையின் வெள்ளைக்கரு முட்டையின் …

நவ்தீப் சைனி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு

இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசியதால் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. 2019 சீசனில் சிறப்பாக பந்து வீசினார். குறிப்பாக சராசரியாக 140 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் …

ஆஷஸ் தொடர் நடைபெறுவதாலேயே டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் அழியாமல் உள்ளது – கங்குலி

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்ற பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். இந்த தொடரானது 5 டெஸ்ட் போட்டிகளை கொண்டது. இதுவரை நடைபெற்றுள்ள 70 தொடர்களில் 33 முறை ஆஸ்திரேலியா அணியும், 32 …

ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் – விராட் கோலி

சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை கோலிக்கு கிடைத்துள்ளது. ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் அவருக்கு தலா 3 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அடுத்த இடம் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்துள்ளது (3.1 கோடி, 2.8 …

ஆளில்லா விமானத்தின் மூலம் பொருட்களை டெலிவரி செய்யப்போகிறோம் – அமேசான்

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் ‘‘விரைவில் ஆளில்லா விமானத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை டெலிவரி செய்யப்போகிறோம்’’ என்று கெத்தாக அறிவித்திருக்கிறது. இந்த ஆளில்லா விமானங்கள் மிகச் சிறிய அளவுடையவை. சுமார் 15 கிலோ மீட்டர் எல்லைக்குள் 2.3 கிலோ கிராம் எடையுள்ள …

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி, தனி நபரை பயங்கரவாதியாக அறிவிக்கச் செய்யும் வகையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக பயங்கரவாத தடுப்பு மசோதா என அழைக்கப்படுகிற இந்த மசோதா, ஜூலை 24-ந் தேதி நாடாளுமன்ற மக்களவையிலும், இந்த மாதம் 2ம் …

தங்கத்தின் இறக்குமதி வரியை குறைப்பது சாத்தியமற்றது: நிர்மலா சீதாராமன்

அமதாபாத், தொடர்ந்து உயர்நிலையில் உள்ள ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு சுமார் ரூ.29 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தங்கத்துக்கான இறக்குமதி விலையை குறைக்க வேண்டும் என வியாபாரிகள் மத்திய அரசை வலியுறுத்தி உள்ள நிலையில், இறக்குமதி வரியில் எந்த மாற்றமும் செய்ய முடியாது …

உடல்நிலை மோசமான நிலையில் அருண்ஜெட்லி : உயிர்காக்கும் கருவி பொருத்தம்

புதுடெல்லி, முன்னாள் மத்திய நிதி அமைச்ர் அருண் ஜெட்லி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் தற்போது, கடும் உடல்நலக்குறைவால் கடந்த 9-ந் தேதி டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் அவருக்கு பல்வேறு …

இயல்பு நிலைக்கு திரும்பும் காஷ்மீர் : இணையதள சேவை தொடங்கியது

ஸ்ரீநகர், காஷ்மீரின் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் மற்றும் அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது என மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டது. இந்த நடவடிக்கைகளால், பாதுகாப்பு கருதி கடந்த 5-ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, …

காங்கிரஸ் கட்சிக்கு காந்தி குடும்பம் அடையாளம் : ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

கொல்கத்தா காங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பம் ஒரு அடையாளம் என பாராளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், வலிமையான கொள்கைகள் உள்ள காங்கிரஸ் போன்ற ஒரு கட்சியால் தான் மதவெறி …

தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை : உச்சக்கட்ட பாதுகாப்பில் கர்நாடகம்

பெங்களூர் கர்நாடகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் முடிவடைந்த போதிலும் பெங்களூர் உள்பட பல முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் மாலையில் பெங்களூரில் போடப்பட்ட உச்சகட்ட பாதுகாப்பு குறித்து பேசிய பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ்‘இந்தியாவின் முக்கிய …

ஒடிசாவில் மனைவியுடன் தற்கொலை : தமிழக பேராசிரியரின் உருக்கமான கடிதம்

புவனேஸ்வர் ஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை செய்து சொண்ட விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயபாலன் (38). …

சபையிலிருந்து கன்னியாஸ்திரி நீக்கப்பட்ட விவகாரத்தில் மேல் முறையீடு

கொச்சி கேரளாவில் உள்ள பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில் லூசி கலப்புரா என்பவர் கன்னியாஸ்திரியாக இருந்து வந்தார். இந்நிலையில் மற்றொரு கன்னியாஸ்திரி ஒருவரை ஜலந்தர் பேராயர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பேராயருக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து இவர் கலந்துகொண்டார். …

காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் நவ்ஷெரா செக்டாரில் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர் இந்திய படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் …

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென தீவிபத்து

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் எனப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் இன்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மருத்துவமனையின் முதல் மற்றும் இரண்டாவது தளம் முழுவதும் வேகமாக பரவியது. தகவலறிந்த …