அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் – அதிகமானோர் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் அம்மாநிலத்தின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக , லக்கிம்பூர், தீமாஜி, தில்ப்ரூகர்க், தரங் மற்றும் கோல்பாரா மாவட்டங்களில் உள்ள 128 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் இருந்து 9,000 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Read More

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்த 97 பேர்

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒருநாள் மட்டும் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களில் 97 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. மற்ற நாட்களை ஒப்பிடுகையில் இது மிகவும் அதிகம் என கூறப்படுகிறது. இதனால், அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,792 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,758 ஆக உயர்ந்துள்ளது.

Read More

இந்தியாவில் உச்சத்தை தொடும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,45,380-லிருந்து 1,51,767 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது. அதேபோல், இந்தப் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 60,491-இல் இருந்து 64,426 ஆகவும் உயர்ந்துள்ளது . மேலும், நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,167-லிருந்து 4,337 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

ஊரடங்கு சமயத்தில் கழிவறை வளாகத்தில் தங்கும் தொழிலாளர்கள்

இப்போது மத்தியப் பிரதேசத்தில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கழிப்பறை வளாகத்தில் தங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . இதனிடையே ஷிவ்புரி பகுதியின் ஆட்சியர் பலோடியா, “புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கவைக்க இடம் உள்ளது. அவர்கள் ஏன் கழிப்பறை பகுதிகளில் தஞ்சமடைந்தார்கள் என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது இதுதொடர்பான முறையான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

Read More

ஊரடங்கு குறித்து ராகுல்காந்தி கருத்துக்கு மத்திய அமைச்சர் பதிலடி

புதுடெல்லி, ஊரடங்கு தோல்வியடைந்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு, சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,, “ ஊரடங்கு அமலாக்கப்பட்டபோது பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக மூன்று நாட்கள் மட்டுமே ஆனது. ஆனால் தற்போது 13 நாட்கள் ஆகின்றன. இதுவே இந்த ஊரடங்கின் வெற்றி. மேலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று கூறிய காங்கிரஸ் கட்சி, தற்போது ஊரடங்கை தளர்த்தும்போது அதையும் எதிர்க்கிறார்கள். ஒட்டுமொத்த உலகமே இந்தியாவைப் பாராட்டினாலும், காங்கிரஸ் …

Read More

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா : தினமும் 1.1 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்வதாக தகவல்

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தினமும் 1 லட்சத்து ஓராயிரம் எண்ணிக்கையிலான ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த கவுன்சில்  இயக்குனரான மருத்துவர் பல்ராம் பார்கவா கூறுகையில், கடந்த சில மாதங்களாக  கொரோனா பரிசோதனை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளார். தற்போது  612 ஆய்வகங்களில் சோதனை நடப்பதாகவும், இதில் 182 தனியார் ஆய்வகங்களும் அடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை  கடுமையான நிபந்தனைகளின் …

Read More

கொரோனா வைரஸ் பாதிப்பு : மராட்டியத்தில் ஒரே நாளில் 97 பேர் பலி

மும்பை, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் மராட்டியத்தில் இன்று மேலும் 2,091 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,758 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலியனவர்களின் எண்ணிக்கை 1,792 ஆக உயர்ந்துள்ளதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Read More

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரம் : மத்திய அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி, புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலை குறித்து பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த உச்ச நீதிமன்றம், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போதுமான உதவிகளை செய்யவில்லை என உச்சநீதிமன்றம்  கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து வந்தாலும், அவை போதுமானதாக இல்லை என அதிருப்தி தெரிவித்தது.  இன்னமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து வருவதாக கூறிய  நீதிமன்றம்,  தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, உறைவிடம், பயண ஏற்பாடு என …

Read More

மும்பை தாராவியில் புதிதாக 38 பேருக்கு கொரோனா பாதிப்பு

மும்பை, கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலவரப்படி மராட்டியத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 54 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இன்று ஒரே நாளில் புதிதாக 38 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,621 …

Read More

லாக்டெளன் சமயத்தில் நடைபெற்ற காதல் திருமணம்

இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் எண்ணற்ற திருமணங்கள் நடந்திருந்தாலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் நடைபெற்ற திருமணம் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது. இது சாலையில் வசிக்கும் ஒரு ஆதரவற்ற பெண்ணிற்கும், ஓட்டுநருக்கும் நிகழ்ந்த திருமணம். ஊரடங்கில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கியபோது ஓட்டுநர் அனில், ஆதரவற்ற பெண்ணான நீலம் மீது காதல் வயப்பட்டுள்ளார். அதன் பிறகு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் .

Read More