தெலுங்கானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்த 3 வயது சிறுவனை மீட்பதற்க்கு முயற்சி

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தை சேர்ந்தவர் கோவர்தன். இவர் தனது மனைவி மற்றும் 3 வயது மகனுடன் போச்சன்பள்ளி கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு விடுமுறைக்காக சென்றுள்ளார். கோவர்தனின் தந்தை விவசாய நிலத்தில் கடந்த வாரம் 3 ஆழ்துளை கிணறுகளை தோண்டியுள்ளார். அதில் தண்ணீர் கிடைக்காததால் அதை மூடிவிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த கோவர்தனின் 3 வயது மகன் 120 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான். இதனால் பதறிய சிறுவனின் குடும்பத்தினர் போலீசாருக்கும், தீயணைப்புத் …

Read More

பாட்னாவில் கட்டுமான பணியின்போது சிலாப் விழுந்து 3 குழந்தைகள் பலி

பாட்னா: பீகார் மாநில தலைநகரான பாட்னாவில் ஜவகர்லால் நேரு மார்க் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நேற்று காலை கட்டுமான பணியின்போது சிலாப் திடீரென இடிந்து விழுந்தது. சிலாப்பின் கீழே 3 குழந்தைகள் சிக்கிக் கொண்டனர். உடனடியாக அந்த குழந்தைகளை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 3 குழந்தைகளும் பரிதாபமாக பலியாகினர் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Read More

கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது : முதல்-மந்திரி தகவல்

திருவனந்தபுரம்: கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநிலத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,003 ஆக உயர்ந்துள்ளது. இதில், வெளிநாடுகளில் இருந்து வந்த 37 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

Read More

அரியானா மாநிலத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

சண்டிகர்: கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் சில கட்டுப்பாட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரியானா மாநிலத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோல், பொது இடங்களில் எச்சில் துப்பினாலும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Read More

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57 ஆயிரத்தை நெருங்குகிறது

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 2190 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 56,948 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 105 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1897 ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.

Read More

கொரோனா தடுப்பு நடவடிக்கை – மகிந்த ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் சிறப்பான உரையாடல் நடந்தது. பாராளுமன்றத்தில் அவர் 50 ஆண்டுகளை கடந்து வந்ததற்கு வாழ்த்து தெரிவித்தேன். மேலும், கொரோனாவை எதிர்த்துப் போராடி வரும் அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா எப்போதும் தனது ஆதரவை அளிக்கும். தேவையான உதவிகளை அளிக்கும் என பதிவிட்டுள்ளார்.

Read More

கொரோனா வைரஸ் பாதிப்பு : மராட்டியத்தில் பலி எண்ணிக்கை 1,897 ஆக உயர்வு

மும்பை, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மராட்டியத்தில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் இன்று மேலும் 2,190 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56,948 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல மாநிலத்தில் ஒரேநாளில் 105 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். மராட்டியத்தில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,897 ஆக உயர்ந்து …

Read More

கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 42.4 சதவீதம் : மத்திய அரசு தகவல்

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 42.4 சதவீதமாக உள்ளதாக மத்திய சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதராத்துறை அமைச்சகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட தகவலின்படி,இந்தியாவில் மொத்தம் 1,51,767 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 64,426 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 42.4 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் இறப்பு விகிதம் 2.86 சதவீதமாக உள்ளது. அதுவே உலகளவில் 6.36 சதவீதமாக உள்ளது. நாட்டில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் 624 ஆக …

Read More

மனித சமூகம் இதுவரை இப்படியொரு வைரஸை நேரிட்டது கிடையாது

நேரலையில் பேராசிரியர் ஆஷிஷ் ஜா, ராகுல் காந்தி உடன் பேசும்போது, “வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் நாட்டில் ஊரடங்கு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸை மனித சமூகம் இதுவரை பார்த்தது இல்லை. ஆகவே , நாம் எல்லாவருமே இந்த வைரஸால் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. ஊரடங்கின் மூலம் வைரஸ் பரவலின் வேகத்தைக் குறைக்கலாம். ஆனால், இது பெரும் பொருளாதார ரீதியிலான பாதிப்புகளை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

Read More

துயரமான வேளையில் , கட்டாய க்வாரன்டீனில் கண்ணீர் விட்டு கதறிய மகன்

துபாயில் வேலை பார்த்து வந்த உ.பி-யைச் சேர்ந்த அமீர்கான், தன் தாயின் உடல்நிலை மோசமானதாக அறிந்த செய்தியால் வேலையை ராஜினாமா பண்ணி விட்டு இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார். இந்நிலையில் கடந்த மே 13-ம் தேதி டெல்லிக்கு வந்த அமீர் கான், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தன் தாய் உயிரிழந்த செய்தியைக் கேட்டு அமீர் தனிமை முகாமிலேயே கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

Read More