கொரோனா வைரஸ் : மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் 55411 பேர் பாதிப்பு
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 55411 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 43 ஆயிரத்து 951 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 லட்சத்து 36 ஆயிரத்து 682 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் இன்று 309 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆயிரத்து 638 ஆக அதிகரித்துள்ளது.
Read More