தற்போது நஷ்ட ஈடு கேட்டு கடிதம் அனுப்பிய சுமந்திரன்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மகளிர் அணியின் முன்னாள் செயலாளர் சி.விமலேஸ்வரியிடம் 1000 கோடி ரூபா மான நஷ்டம் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கடிதம் அனுப்பியிருக்கிறார். கரவெட்டியில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் 14 நாட்களுக்குள் அவரிடம் இருந்து பதில் கிடைக்கப் பெறாத பட்சத்தில் உயர்நீதிமன்றில் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Read More

சஜித் பிரேமதாச உறுதியுடன் தெரிவித்த தகவல்

இலங்கையில் நான் பிரதமரானால் போதைப்பொருள் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய எல்லாவருக்கும் நிச்சயம் மரண தண்டனையை செயற்படுத்துவேன் என சஜித் பிரேமதாச கூறியுள்ளார் . மேலும் மது மற்றும் புகைத்தலை சமூகத்திலிருந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் . குருணாகலில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே இந்த விஷயத்தை குறிப்பிட்டுள்ளார்.

Read More

நாடு திரும்ப காத்திருக்கும் மக்களுக்கு கிளம்பியுள்ள அதிர்ச்சி தகவல்

தற்போது வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பேஜ் இந்த தகவலை நேற்று வெளியிட்டுள்ளார். அவ்வாறு நாடு திரும்பும் நடவடிக்கை ஜூலை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று தெரிவித்தார் . அதேசமயம் இங்கிலாந்திலிருந்து 234 பயணிகளும் ஆஸ்திரேலியாவிலிருந்து 229 பயணிகளும் நேற்று தீவை அடைந்தனர்.

Read More

இலங்கையில் பேருந்து ஓட்டுனர்களுக்கும் நடத்தப்படும் கொரோனா தொற்று பரிசோதனை

இலங்கையில் கம்பஹாவில் பேருந்து ஓட்டுனர்களுக்கு COVID-19 க்கான பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியை கம்பஹா பொலிசார் நேற்று ஏற்பாடு செய்திருந்தனர். இதில் தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் ஓட்டுநர்கள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

Read More

முக்கிய பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானதாக தகவல்

இலங்கையில் மன்னார் – வங்காலை கிராமத்தில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 7 மீனவர்களின் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில் அவர்களுக்கு தொற்று உறுதியாகவில்லை என அந்த மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ரீ.வினோதன் கூறியிருக்கிறார் . இந்த மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுப்பட்டிருந்த போது இந்திய மீனவர் ஒருவரின் படகு பழுதடைந்துள்ள நிலையில் அவருக்கு உதவி வழங்கியுள்ளனர். அதற்கேற்றவாறு அவர்கள் 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார் . இந்தநிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று கிடைத்துள்ளதாக மன்னார் மாவட்ட …

Read More

இலங்கையில் கொரோனா தொற்று தொடர்பாக ராணுவத் தளபதி விடுத்துள்ள சிறப்பு கோரிக்கை

இலங்கையில் கொவிட் – 19 வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் என்று ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நோய் சமூகமயப்படுதலைத் தடுக்க அவசியமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நோய்த்தொற்று தொடர்பாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வழங்கும் செய்திகளை மட்டுமே நம்புமாறும் ராணுவத் தளபதி மக்களைக் கேட்டு கொண்டுள்ளார்.

Read More

முக்கிய விமான நிலையத்தில் மூன்று ஆண்டுகளில் ஏற்படவிருக்கும் மாற்றம்

இலங்கையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் ஜப்பானிய நிறுவனத்தால் ரூ .108 பில்லியன் செலவில் கட்டப்பட இருப்பதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி கூறியுள்ளார் . இந்த திட்டத்தை மூன்று ஆண்டுகளில் நிறைவு செய்ய அவர்கள் நினைப்பதாகவும், இந்த நிதி ஜப்பானிய சர்வதேச கோப்பரேஷன் முகவரமைப்பின் மூலமாக (ஜிகா) கடனாக வரும் என்றும் அவர் தெரிவித்தார் . மேலும் ஜப்பானிய நிறுவனங்கள் ஆலோசகர்கள் மற்றும் கட்டுமானதாரிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Read More

வேகமாக பரவும் கொரோனா தொற்று காரணமாக ஏராளமான கைதிகளுக்கு விடுதலை

தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து 8,000க்கும் அதிகமான கைதிகளை விடுதலை செய்ய உள்ளதாக கலிபோர்னிய அரசு கூறியுள்ளது . இதுகுறித்து கலிபோர்னிய சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “கலிபோர்னியாவில் 8,000க்கும் அதிகமான சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கான தகுதியுடன் இருக்கின்றனர் . கொரோனா நெருக்கடி காலத்தில் முன்னர் எடுத்த நடவடிக்கைகளின்படியே இதுவும் மேற்கொள்ளப்படவுள்ளது. சிறையில் அடைபட்டுள்ள நபர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” என்று கூறியுள்ளனர்.

Read More

இப்போது மாஸ்க் அணிந்து வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

சமீப காலமாக அமெரிக்கா கொரோனா வைரஸால் மிகவும் பெரியளவில் பாதிப்படைந்துள்ளது. இந்த கொரோனா பாதிப்பு தொடங்கிய நாள் முதலே அந்நாட்டின் அதிபர் ட்ரம்ப் மாஸ்க் அணியாமல் பொது இடங்களில் நடமாடியிருந்தார் . மேலும் மாஸ்க் அணிவது தனிப்பட்ட விருப்பம் என்றும் சொல்லி வந்தார். இந்த நிலையில், ராணுவ மருத்துவ மையம் ஒன்றுக்கு வருகை தந்த அதிபர் ட்ரம்ப் மாஸ்க் அணிந்து வந்துள்ளார். இது பலரையும் வியக்க செய்துள்ளது .

Read More

குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் : 8 போராளிகள் பலியானதாக தகவல்

பாக்தாத், துருக்கி, ஈராக், ஈரான், சிரியா மற்றும் அர்மீனியா போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் மலைப்பாங்கான இடங்களில் வசிப்போர் தான் குர்துக்கள். இவர்கள் தங்களுக்கென்று குர்திஸ்தான் என்று அழைக்கப்படும் தாயகத்தை உருவாக்குவதற்கு பாடுபட்டு வருகிறார்கள். ஆனால் குர்துகளை பயங்கரவாதிகளாக கருதும் சிரியாவின் அண்டை நாடான துருக்கி அவ்வப்போது அவர்களை தாக்கி வருகிறது. இந்நிலையில் ஈராக் எல்லையில் ஹாப்தியன் பிரந்தியத்தில் உள்ள குர்து போராளிகளின் நிலைகளை குறிவைத்து துருக்கி ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது. இதில் குர்து போராளிகள் 8 பேர் கொல்லப்பட்டதாக துருக்கி ராணுவம் …

Read More