நேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு சிக்கி 60 பேர் பலி

காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் ஏராளமான இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 60 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 41 பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையால் மியாக்தி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் நிலச்சரிவுகளில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

கொரோனா வைரஸ் பாதிப்பு : பாகிஸ்தானில் மேலும் 2521 பேர் பாதிப்பு

இஸ்லாமாபாத் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பலரையும் பலி வருகிறது. இந்த கொடூர கொரோனா பாகிஸ்தானிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் மேலும் 2,521 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு நாடு முழுவதும் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,48,872 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இதுவரை மொத்தம் 5,197 …

Read More

உலகம் முழுவதும் உச்சம் தொடும் கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை பாதிப்பு 1.3 கோடியை தாண்டியது

லண்டன் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 13,034,955 உயர்ந்துள்ளது. இதில் 7,581,525 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 58,928 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த 571,518 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். இந்நிலைரயில், கடந்த  24 மணி நேரத்தில் 230,370 அதிகரித்துள்ளது இதில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் மிகப்பெரிய அதிகரிப்பு உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் 2 வது இடத்தில் உள்ள பிரேசில் …

Read More

கொரோனா பாதிப்பு : பிரேசிலில் ஒரே நாளில் 968 பேர் பலி

பியூனஸ் அயர்ஸ், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் வல்லரசு நாடான அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள பிரேசிலில் 24 மணி நேரத்தில் 968  பேரின் உயிரை இந்த வைரஸ் பறித்துள்ளது. இதனால் அந்த நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 71,492  ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், பிரேசிலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  18,40,812- ஆக உயர்ந்துள்ளது.

Read More

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு : ஐ.நா செய்தி தொடர்பாளர் கருத்து

ஜெனீவா, தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடை திறந்து வைத்ததாக கூறி கைது செய்யப்பட்ட நிலையில், ஜெயிலில் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில், 10 போலீசாரை கைது செய்தனர். மேலும், சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாத்தான்குளம் போலீஸ் நிலையம், அரசு மருத்துவமனை, கோவில்பட்டி ஜெயிலில் விசாரணை நடத்தி பல்வேறு ஆவணங்களை சேகரித்தனர். தற்போது, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு சர்வதேச  …

Read More

கொரோனா பாதிப்பு : ரஷ்யாவில் பலி எண்ணிக்கை 11335 ஆக அதிகரிப்பு

மாஸ்கோ, சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா பாதிப்பில், வல்லரசு நாடான அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  தொடர்ந்து பிரேசில் 2வது இடத்திலும், இந்தியா 3வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில், 4வது இடத்தில் உள்ள ரஷ்யாவிலும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  இதில் , கடந்த 24 மணிநேரத்தில் 130 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 335 ஆக உயர்ந்து உள்ளது.  …

Read More

யாழ் மாவட்ட ராணுவ கட்டளைத் தளபதி தெரிவித்துள்ள பிரத்யேக தகவல்

இப்போது பயங்கரவாதம் மற்றும் கொரோனாவை விட மிகவும் ஆபத்தானது இந்த பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு என இலங்கையில் யாழ் மாவட்ட ராணுவ கட்டளைத் தளபதி மேஜர் வணிகசூரிய கூறியிருக்கிறார். இன்று ராணுவத்தினரால் யாழ் குடாநாடெங்கும் பொலிதின் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கழிவகற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டது. அந்த நிகழ்விற்கு பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

முக்கிய பிரதேசத்தில் காவல்துறையின் பிடியில் சிக்கிய சட்டவிரோத கும்பல்

இலங்கையில் வாழைச்சேனை காவல் பிரிவில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட ஏழு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன தெரிவித்துள்ளார். இதன்படி புலிபாய்ந்தகல் மற்றும் மூக்கரையன்கல் ஆகிய இரண்டு பிரதேசங்களிலும் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நிலையில் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏழு உழவு இயந்திரங்களும் பறிமுதல் செய்யபட்டுள்ளது. சட்டவிரோத மண் அகழ்வு நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகலையடுத்து வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுனவின் தலைமையில் , இரண்டு குழுக்கள் நடாத்திய தேடுதலின் போதே …

Read More

முக்கிய மாகாணத்தை சுத்தப்படுத்தும் இலங்கை ராணுவம்

இலங்கையில் யாழ். பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் நெறிப்படுத்தலின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற சமூக செயற்பாட்டு சேவைகளின் ஒன்றாக, பொலித்தீன் பயன்பாடு முற்றிலுமாக அகற்றுவோம் என்ற தொனி பொருளில் நகரை சுத்தம் ஆக்கும் நடவடிக்கை இன்று யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த விதத்தில் யாழ். பாதுகாப்பு படைத்தலைமையக கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் ரூவான் வணிகசூரியவின் தலைமையின் கீழ் 512 ஆவது, 55 ஆவது, 513 ஆவது ஆகிய படைப்பிரிவின் ராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் பொலித்தீன் பயன்பாடு முற்றிலுமாக அகற்றுவோம் என்னும் சமூக செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

Read More

இலங்கையில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்படலாம் என தகவல்

இலங்கையில் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பரவும் கொரோனாவால் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க கூறியுள்ளார் . தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இன்று பங்கேற்று கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இப்படி கூறியுள்ளார். தொடர்ந்து கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

Read More