கொரோனா தொற்றுக்கு பயந்து வித்தியாசமான உடையணிந்த தம்பதி

ரியோ டி ஜெனிரோ: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் பிரேசில் நாட்டை புரட்டி எடுத்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 18 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரை சேர்ந்த டெரிகோ ஹிலாடினோ (66) மற்றும் அல்சியா லிமா (65) தம்பதிகள் தங்களை கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வித்தியாசமான முயற்சியாக விண்வெளி வீரர்கள் பயன்படுத்தும் ஸ்பேஸ் சூட் எனப்படும் …

Read More

நேபாளத்தில் கனமழைக்கு 27 பேர் பலி

காத்மண்டு, இந்தியாவின் அண்டை நாடான நேபாள நாட்டின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தொடங்கியதன் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த  கனமழையால், நேபாளத்தின் மேற்கே மியாக்தி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த கனமழைக்கு இதுவரை 27 பேர் பலியாகி உள்ளனர்.  பலர் வீடுகளை இழந்துள்ளனர்.  இதனால் அவர்களில் நூற்றுக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து உள்ளனர். அவர்கள் பள்ளி கூடங்கள் மற்றும் சமூக நல மையங்களில் அகதிகளாக தங்க …

Read More

அமெரிக்காவில் கொரோனா பார்ட்டியில் கலந்து கொண்ட இளைஞர் பலி

கொரோனாவால் அதிக பாதிப்புகளைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை, 33.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1.35 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் கொரோனாவிற்கு ‘மாஸ்க் அணிவதால் பயனில்லை என்றும், கொரோனா வைரஸ் ஒரு ஏமாற்று வேலை எல்லாம் வதந்தி என, அமெரிக்காவில் ஒரு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் தற்போது, அமெரிக்காவில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில், ‘கொரோனா பார்ட்டி’ நடத்தும் அபாயகரமான பழக்கம் திடீரென தொற்றி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரைச் சேர்ந்த இளைஞர் …

Read More

முககவசம் அணிய மறுத்தவர் கொரோனாவால் பலி

வாஷிங்டன்: ஒஹையோவைச் சேர்ந்த ரிச்சர்டு ரோஸ் (37), ஒரு தீவிர டிரம்ப் ரசிகர். முன்னாள் ராணுவ வீரரான ரிச்சர்டு, சமூக ஊடகங்களில் கொரோனா என்பது வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட், என்று கூறிவந்தார். சமூக ஊடக பிரியரான ரிச்சர்டு, ஏப்ரல் 28 அன்று பேஸ்புக்கில் வெளியிட்டிருந்த பதிவு ஒன்றில், நான் மாஸ்க் எல்லாம் வாங்க மாட்டேன், கொரோனா என்பது வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்று எழுதியிருந்தார். ஆனால், ஜூலை 1ஆம் தேதி அன்று அவருக்கு உடல் நலமில்லாமல் போகவே, பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். பரிசோதனையின் முடிவுகள் அவருக்கு …

Read More

உலக அளவில் கொரோனாவில் இருந்து 75 லட்சம் பேர் மீண்டனர்

ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 75 லட்சத்தைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.30 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5.60 லட்சத்தைக் கடந்துள்ளது.

Read More

அந்தமான் நிகோபரில் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

போர்ட்பிளேர்: அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் ஒன்றான டிகிலிபூரில் இன்று அதிகாலை 2.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகாக பதிவாகியிருந்தது என இந்திய புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

Read More

சாத்தான்குளம் வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும்- ஐ.நா. வலியுறுத்தல்

ஜெனீவா: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடை திறந்து வைத்ததாக கூறி போலீசார் அழைத்து சென்று தாக்கினார்கள். பின்னர் கோவில்பட்டி ஜெயிலில் அடைக்கப்பட்ட 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. நியூயார்க்கில் ஐ.நா. தலைமை அலுவகலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக்கிடம் சாத்தான்குளம் சம்பவம் குறித்து …

Read More

அமெரிக்க கடற்படையில் போர் விமானத்தை இயக்கும் முதல் கருப்பின பெண்

வாஷிங்டன்: அமெரிக்க கடற்படையில் போர் விமானத்தை இயக்கும் விமானியாக வரலாற்றில் முதல் முறையாக கருப்பினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேட்லைன் ஸ்வெகிள் என்ற அந்தபெண் அமெரிக்க கடற்படை விமானப்பள்ளியில் தனது பயிற்சியை வெற்றிகரமாக முடித்து போர் விமானத்தின் விமானியாக உள்ளார். அவர் இந்த மாத இறுதியில் “தங்கத்தின் சிறகுகள்” என்று அழைக்கப்படும் விமான அதிகாரி அடையாளத்தை பெறுவார் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

Read More

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பீஜிங்: சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹூபெய் மாகாணத்தின் டாங்க்சன் நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டாங்க்சன் நகரின் கேய் மாவட்டத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவானது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தலைநகர் பீஜிங் உள்பட டாங்க்சன் நகருக்கு அருகே உள்ள பல்வேறு நகரங்களிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி அதிகாலை 6.38 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுமார் அரை மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து 2 …

Read More

ரஷ்யாவில் 6,615 பேருக்கு கொரோனா பாதிப்பு

மாஸ்கோ : உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் வல்லரசு நாடான அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் 4வது இடத்தில் உள்ள ரஷ்யாவிலும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதுபற்றி அந்நாட்டின் கொரோனா வைரஸ் நெருக்கடி சேவை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் 130 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 335 ஆக உயர்ந்துள்ளது. 6,615 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கையானது 7 லட்சத்து …

Read More