கடவுள் ராமர் நேபாள நாட்டை சேர்ந்தவர் – நேபாள பிரதமர் பேச்சு

நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- ‘உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை, நேபாளத்தில் தான் உள்ளது. கடவுள் ராமர் ஒரு நேபாளி அவர் இந்தியர் அல்ல’ என பிரதமர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கொரோனா வைரஸ் பாதிப்பு : உலகநாடுகள் வரிசையில் பாகிஸ்தானுக்கு 12-வது இடம்

இஸ்லாமாபாத்: சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்டு தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது.  பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.50 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,51,695 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் நேற்று மேலும் 2 ஆயிரத்து 753 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்துள்ளதால், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,266 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 1.61 லட்சத்துக்கும் …

Read More

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது

ஜெனீவா, சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுது்தலை ஏற்படுத்தி வருகிறது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5.75 லட்சத்தை நெருங்குகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.32 கோடியை தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோரின் …

Read More

அமெரிக்க போர் கப்பலில் திடீர் தீ : 17 மாலுமிகள் உட்பட 21 பேர் படுகாயம்

வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாண்டியாகோ நகரில் அந்த நாட்டின் மிகப்பெரிய 2-வது கடற்படைத் தளம் உள்ளது. இங்கு அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஏராளமான போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 1,000 மாலுமிகள் வரை தாங்கும் திறன் கொண்ட அந்தக் கப்பலில் 160 மாலுமிகள் வழக்கமான பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக கப்பலின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கப்பல் முழுவதிலும் பரவியது. இதனால் கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்குமாக …

Read More

மாலி அதிபருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை : 11 பேர் பலியானதாக தகவல்

பமாகோ, மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் வடக்கு பகுதிகளை கடந்த  2012-ம் ஆண்டு துவாரெக் பயங்கரவாதிகள் ஆக்கிரமித்தனர். இதனால் மாலியில் தற்போதுவரை அமைதியற்ற சூழல் நிலவி வரும் நிலையில், பொருளாதார சரிவும் ஏற்பட்டது. பயங்கரவாதிகள் தாக்குதல், மற்றும் பொருளாதார வீழ்ச்சியை காரணம் காட்டி அந்த நாட்டின் அதிபர் இப்ராஹிம் பவ்பக்கர் கெய்தாவுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் அமைதியாக நடந்த இந்த போராட்டத்தில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தலைநகர் பமாகோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே …

Read More

தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மகள் மரணம்

ஜோகன்னஸ்பர்க், தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் நெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்ஸி மண்டேலா.  1985ம் ஆண்டுக்கு பிறகு இவர் சர்வதேச முக்கியத்துவம் பெற்ற நபராக மாறினார். ஏனெனில் அப்போதுதான், வெள்ளை சிறுபான்மை அரசாங்கம் நெல்சன் மண்டேலாவை சிறையில் இருந்து விடுவிக்க முன்வந்தது. ஆனால் போராட்டத்தை கைவிட கேட்டுக் கொண்டதால் மண்டேலா விடுதலையாக சம்மதம் தெரிவிக்கவில்லை. தனது தந்தையின் இந்த முடிவை ஊடகங்களுக்கு வாசித்துக் காட்டியவர் ஜிண்ட்ஸி. இதன் மூலம் அவர் சர்வதேச அளவில் கவனம் பெற்றார். ஜிண்ட்ஸி மண்டேலா கடந்த 2015-ம் ஆண்டு முதல் …

Read More

கொரோனா வைரஸ் பாதிப்பு : பாகிஸ்தானில் மேலும் 2521 பேர் பாதிப்பு

இஸ்லாமாபாத் : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன.  உலகையே அச்சுறுத்தி வரும் கொடூர கொரோனா பாகிஸ்தானிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் மேலும் 2,521 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு நாடு முழுவதும் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,48,872 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் …

Read More

கொரோனா வைரஸ் பாதிப்பு : ரஷ்யாவில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்தது

மாஸ்கோ: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன.   உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் வல்லரசு நாடான அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  தொடர்ந்து பிரேசில் 2வது இடத்திலும், இந்தியா 3வது இடத்திலும் உள்ளன. இதேபோன்று 4வது இடத்தில் உள்ள ரஷ்யாவிலும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  இதில் கடந்த 24 மணிநேரத்தில் 130 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து …

Read More

கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த உலகின் முதல் நாடு ரஷ்யா

மாஸ்கோ: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த வைரசுக்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து, அதனை மனிதர்கள் மீது செலுத்தி வெற்றியடைந்துள்ளதாக ரஷியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தடுப்பு மருந்து பரிசோதனையில் வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது. இதுபற்றி ரஷிய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் அதிகாரப்பூர்வ செய்தியில், …

Read More

மாஸ்க் அணிய மறுத்தவர் கொரோனா தாக்கி பலி

வாஷிங்டன்: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பேரிழப்பை ஏற்படுத்தி வரும் நிலையில்,, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.30 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 75.79 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் கொரோனா நம்மை தாக்காமல் இருக்க ஒரே வழி சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், முககவசம் அணிவதும் மட்டுமே.  இதனை உலக சுகாதார மையம் வலியுறுத்திய நிலையிலும் ஒஹையோவைச் சேர்ந்த ரிச்சர்டு ரோஸ் …

Read More