• August 19, 2019

உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள்

1 காளான் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று காளான். இந்த காளானை உணவில் அதிகம் சேர்ந்து வந்தால், இதில் உள்ள குறைவான கலோரி மற்றும் கொழுப்புக்களால், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். 2 முட்டையின் வெள்ளைக்கரு முட்டையின் …

நவ்தீப் சைனி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு

இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசியதால் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. 2019 சீசனில் சிறப்பாக பந்து வீசினார். குறிப்பாக சராசரியாக 140 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் …

ஆஷஸ் தொடர் நடைபெறுவதாலேயே டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் அழியாமல் உள்ளது – கங்குலி

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்ற பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். இந்த தொடரானது 5 டெஸ்ட் போட்டிகளை கொண்டது. இதுவரை நடைபெற்றுள்ள 70 தொடர்களில் 33 முறை ஆஸ்திரேலியா அணியும், 32 …

ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் – விராட் கோலி

சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை கோலிக்கு கிடைத்துள்ளது. ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் அவருக்கு தலா 3 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அடுத்த இடம் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்துள்ளது (3.1 கோடி, 2.8 …

ஆளில்லா விமானத்தின் மூலம் பொருட்களை டெலிவரி செய்யப்போகிறோம் – அமேசான்

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் ‘‘விரைவில் ஆளில்லா விமானத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை டெலிவரி செய்யப்போகிறோம்’’ என்று கெத்தாக அறிவித்திருக்கிறது. இந்த ஆளில்லா விமானங்கள் மிகச் சிறிய அளவுடையவை. சுமார் 15 கிலோ மீட்டர் எல்லைக்குள் 2.3 கிலோ கிராம் எடையுள்ள …

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

ஈரான் நாட்டின் எண்ணெய் கப்பல் ‘கிரேஸ்-1’ ஜூலை 4-ம் தேதி இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்ரால்டர் கடல் பகுதியில் சென்றபோது சிறைபிடிக்கப்பட்டது. ஐரோப்பிய கூட்டமைப்பின் பொருளாதார தடையை மீறி சிரியாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுவதாக கூறி அந்த கப்பல் சிறைபிடிக்கப்பட்டது.இந்த விவகாரத்தில் …

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஐ.நா. பொதுச் செயலரை சந்திக்கிறார்

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நியூயார்க் நகரில் நாளை மாலை 3 மணி அளவில்   நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அமெரிக்க நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ கலந்து கொள்ள உள்ளார். கூட்டத்தின் இடையே ஐ.நா பொதுச் செயலர் ஆன்டோனியோ குட்டெரசை சந்தித்து …

அமெரிக்கா-சீனா வர்த்தகங்களை பாதிக்கும் ஹாங்காங் போராட்டம்

ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற மசோதாவை முழுமையாக ரத்து செய்யுமாறு பல நாட்களாக அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் …

ஜி-7 மாநாட்டில் ஐரோப்பிய ஆணைய தலைவர் பங்கேற்க மாட்டார்

45வது ஜி-7 மாநாடு பிரான்ஸ் நாட்டின் பையாரிட்ஸ் நகரில் ஆகஸ்ட் 24-26 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாட்டின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.இந்நிலையில், இம்மாநாட்டில் ஐரோப்பிய ஆணைய தலைவர் ஜீன் …

ஆப்கானிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில்  50க்கும் மேற்பட்டோர்  காயமடைந்தனர். ஜலாலாபாத், கிழக்கு நங்கார்கர் பகுதி உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுவெப்பு  நடந்தது.  

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் புகலிடங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும் – பிரதமர் அஷ்ரப் கனி !!

நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபூல் நகரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில், மேடையருகே வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறி, 63 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு காரணம், ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய உள்ளூர் அமைப்புதான் என கண்டறியப்பட்டது. இதுபற்றி இதுகுறித்து …

ஹாங்காங் விவகாரத்தில் சீன அரசு வன்முறையை கையாண்டால் அமெரிக்கா-சீன வர்த்தகம் கடுமையாக பாதிக்கும் – டிரம்ப்

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் கைதிகள் பரிமாற்ற மசோதாவை முழுமையாக ரத்து செய்ய பல நாட்களாக அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது இதுபற்றி அமெரிக்கா அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், “சீன அதிபர் ஜி ஜின்பிங் மிகவும் …

அமெரிக்கா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஐ.நா பொது செயலாளரை நாளை சந்திக்க உள்ளார் !!

நியூயார்க் நகரில் நாளை மாலை 3 மணி அளவில் நடைபெற உள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்கூட்டத்தில் அமெரிக்க நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ கலந்து கொள்ள உள்ளார். அப்போது, அவர் ஐ.நா பொதுச் செயலர் ஆன்டோனியோ குட்டெரசை சந்தித்து பேச உள்ளார். …

தான்சானியா நாட்டில் டேங்கர் லாரி கவிழ்ந்து தீப்பிடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு !!

தான்சானியா நாட்டில் டொடோமா நகருக்கு 160 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள மொரகரோ நகர் பகுதியில் கடந்த 10-ம் தேதி பெட்ரோல் ஏற்றி சென்ற லாரி திடீரென சாலையில் கவிழ்ந்து, எரிபொருள் தரையில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனை அந்த பகுதியில் வசித்து வந்த …

நோயாளி ஒருவர் சக நோயாளிகளை தாக்கியதில் 4 பேர் பலி

ருமேனியா நாட்டின்  தென்கிழக்கில் உள்ள புஜாயு கவுன்ட்டியில் நரம்பியல் மனநல மருத்துவமனையில்  பலநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று காலை போதைக்கு அடிமையான நபர் திடீரென குளுக்கோஸ் ஏற்ற பயன்படுத்தப்படும் இரும்பு கம்பியை எடுத்து சக நோயாளிகளை சரமாரியாக தாக்கினார். இதில் நான்கு  …