History – Dinaseithigal

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள இத சாப்பிடலாம்

வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை பார்ஸ்லே கீரையை எடுத்துக் கொண்டால் உடல் எடையை கட்டுப்படுத்தி, சர்க்கரை அளவை குறைக்கவும் உதவும். இதில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் செரிமானப் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். கொத்தமல்லி இலையில் மெக்னீசியம், வைட்டமின் பி மற்றும் ஃபோலிக் ஆசிட் உள்ளிட்டவை நிரம்பியுள்ளது. உடல் எடையை குறைக்கும் விஷயத்தில் அற்புதமான மாற்றங்களை தரக் கூடியது. ரோஸ்மேரி நிறைவான ஆண்டி ஆக்ஸிடண்ட் சத்துக்கள் நிறைந்த இந்த இலையானது நம் செல்களை …

Read More

உடல் எடையை குறைக்கும் வெங்காயம்

வெங்காயத்தில் காணப்படும் கரையக்கூடிய பிசுபிசுப்பான நார்ச்சத்து திருப்தியை மேம்படுத்த உதவுகிறது மற்றும் எடை இழப்பு பயணத்தின் போது அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க உதவுகிறது வெங்காயத்தில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. 1 கப் நறுக்கிய வெங்காயம் 64 கலோரிகளை மட்டுமே எடுத்துச் செல்கிறது. எனவே எடை இழப்பு பயணத்தின் போது அதன் நுகர்வு பாதுகாப்பானது.வெங்காயத்தில் குவெர்செடின் என்ற தாவர கலவையும் நிறைந்துள்ளது. இது ஒரு ஃபிளாவனாய்டு ஆகும். இது உடல் பருமனைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் உடலுக்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

Read More

ஆகஸ்ட் 17, இன்றைய தினத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

309 – திருத்தந்தை யுசேபியசு உரோமைப் பேரரசர் மாக்செந்தியசினால் சிசிலிக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு வர் உயிரிழந்தார். 1498 – திருத்தந்தை ஆறாம் அலெக்சாந்தரின் மகன் சேசார் போர்கியா வரலாற்றில் முதலாவது நபராக தனது கர்தினால் பதவியைத் துறந்தார். இதே நாளில் பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னர் அவரை வலெந்தினோயிசின் கோமகனாக அறிவித்தார். 1560 – இசுக்கொட்லாந்தில் கத்தோலிக்கத்துக்குப் பதிலாக சீர்திருத்த கிறித்தவம் தேசிய சமயமாக்கப்பட்டது. 1585 – எண்பதாண்டுப் போர்: ஆண்ட்வெர்ப் எசுப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து அங்கிருந்த சீர்திருத்தக் கிறித்தவர்கள் வெளியேறப் பணிக்கப்பட்டனர். இதனால் அங்கிருந்த 100,000 பேரில் அரைவாசி மக்கள் வடக்கு மாகாணங்களுக்கு சென்றனர்.

Read More

டென்மார்க், சுவீடன் நாடுகளுக்கிடையே பெரும் கடற்படைப் போர் ஆகஸ்ட் 17

1585 – வால்ட்டர் ரேலியினால் அனுப்பப்பட்ட முதல் தொகுதிக் குடியேறிகள் புதிய உலகத்தில் உரோனோக் தீவில் (இன்றைய வட கரொலைனாவில்) தரையிறங்கினர். 1668 – உதுமானியாவின் அனத்தோலியாவில் 8.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 8,000 பேர் வரை உயிரிழந்தன்ர். 1712 – டென்மார்க், சுவீடன் நாடுகளுக்கிடையே பெரும் கடற்படைப் போர் இடம்பெற்றது. 1717 – ஒரு மாத முற்றுகையின் பின்னர் ஆத்திரியப் படைகள் பெல்கிரேட் நகரை  உதுமானியர்களிடம் இருந்து கைப்பற்றின. 1740 – பன்னிரண்டாம் கிளெமெண்டுக்குப் பின்னர் பதினான்காம் பெனடிக்டு 247-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Read More

அமெரிக்க இந்தியப் போர்கள் முக்கிய நிகழ்வுகள் ஆகஸ்ட் 17

1807 – இராபர்ட் புல்டனின் நோர்த் ரிவர் நீராவிக் கப்பல் நியூயோர்க் நகரில் இருந்து ஆல்பெனி  நோக்கி அட்சன் ஆற்றில் தனது பயணத்தைத் தொடங்கியது. இதுவே உலகின் முதலாவது நீராவிக் கப்பல் பயணிகள் சேவை ஆகும். 1836 – ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் பிறப்பு, திருமண, இறப்புப் பதிவுகளை சட்டபூர்வமாக்கியது. 1862 – அமெரிக்க இந்தியப் போர்கள்; லக்கோட்டா பழங்குடியினர் அமெரிக்காவின்  மினசோட்டாவில் வெள்ளையினக் குடியேற்றவாதிகள் மீது தாக்குதலைத் தொடுத்தனர். 1918 – போல்செவிக் புரட்சித் தலைவர் மொயிசேய் யுரீத்ஸ்கி படுகொலை செய்யப்பட்டார்.

Read More

இரண்டாம் உலகப் போர் முக்கிய நிகழ்வுகள் ஆகஸ்ட் 17

1943 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் எட்டாவது வான்படையினர்  செருமனியில் தமது 60 குண்டுவீச்சு விமானங்களை இழந்தனர். 1943 – இரண்டாம் உலகப் போர்: வின்ஸ்டன் சர்ச்சில், பிராங்க்ளின் ரூசவெல்ட், கனடா பிரதமர் வில்லியம் லயன் மக்கென்சி கிங் ஆகியோர் கலந்து கொண்ட கியூபெக் மாநாடு ஆரம்பமானது. 1945 – சுகர்ணோ இந்தோனேசியாவின் விடுதலையை அறிவித்தது. இடச்சுப் பேரரசுக்கு எதிரான இந்தோனேசிய தேசியப் புரட்சி ஆரம்பமானது. 1947 – இந்தியாவையும் பாக்கித்தானையும் பிரிக்கும் ராட்கிளிஃப் கோடு வெளியிடப்பட்டது. 1958 – அமெரிக்காவின் சந்திரனைச் சுற்றும் முதலாவது திட்டம் பயனியர் 0 விண்ணுக்கு ஏவப்பட்டு 77 செக்கன்களில் அழிந்தது.

Read More

வெனேரா 7 விண்கலம் ஏவப்பட்ட நாள் ஆகஸ்ட் 17

1959 – மொன்ட்டானாவில் இடம்பெற்ற 7/5 அளவு நிலநடுக்கத்தினால் குவேக் ஏரி அமைக்கப்பட்டது. 1960 – காபொன் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது. 1962 – கிழக்கு ஜெர்மனியில் இருந்து பெர்லின் சுவரைக் கடந்து தப்பித்துச் செல்ல முயன்ற 18-வயது பேட்டர் ஃபெக்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சுவரைக் கடந்து செல்ல முயன்று இறந்த முதலாவது நபர் இவராவார். 1969 – மிசிசிப்பியில் இடம்பெற்ற தரம் 5 சூறாவளியில் 256 பேர் உயிரிழந்தனர். 1970 – வெனேரா 7 விண்கலம் ஏவப்பட்டது. வேறொரு கோளில் இருந்து (வெள்ளி) வெற்றிகரமாகத் தகவல்களை அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

Read More

வடமேற்கு துருக்கியில் 7.6 ரிக்டர் நிலநடுக்கம் ஆகஸ்ட் 17

1977 – சோவியத் ஒன்றியத்தின் ஆர்க்திக்கா வடதுருவத்தை அடைந்த முதலாவது தரைக்கப்பல் ஆகும். 1988 – பாக்கித்தான் அரசுத்தலைவர் சியா-உல்-ஹக் மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஆர்னல்ட் ராஃபெல் ஆகியோர் விமான விபத்தில் கொல்லப்பட்டனர். 1991 – சிட்னியின் புறநகர்ப் பகுதியான ஸ்ட்ராத்ஃபீல்ட் என்னும் இடத்தில் வேட் பிராங்கம் என்பவன் சுட்டதில் 7 பேர் கொல்லப்பட்டு 6 பேர் காயமடைந்தனர். 1999 – வடமேற்கு துருக்கியில் 7.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 2005 – காசாக்கரையில் இருந்து இசுரேலியர்களின் கட்டாய வெளியேற்றம் ஆரம்பமானது.

Read More

வங்கதேசத்தில் 300 இடங்களில் தீவிரவாத வெடிகுண்டு தாக்குதல் ஆகஸ்ட் 17

2005 – வங்காளதேசத்தின் 64 மாவட்டங்களில் 300 இடங்களில் ஐநூறுக்கும் அதிகமான குண்டுகள் தீவிரவாதிகளினால் வெடிக்க வைக்கப்பட்டன. 2008 – அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் ஃபெல்ப்ஸ் ஒரே ஒலிம்பிக் போட்டியில் அதிகமான எட்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். 2009 – உருசியா, அக்காசியாவில் அணை ஒன்று உடைந்ததில் 75 பேர் உயிரிழந்தனர். 2015 – பேங்காக், பிரம்மன் கோயிலில் குண்டு வெடித்ததில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர், 123 பேர் காயமடைந்தனர்.

Read More

ஆகஸ்ட் 17, இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்

1607 – பியேர் டி பெர்மா, பிரான்சியக் கணிதவியலாளர் (இ. 1665) 1761 – வில்லியம் கேரி, ஆங்கில புரட்டஸ்தாந்து மதகுரு (இ. 1834) 1874 – வேதநாயகம் சாமுவேல் அசரியா, ஆங்கிலிக்கத் திருச்சபையின் முதல் இந்திய ஆயர் (இ. 1945) 1882 – ராம்நாத் சோப்ரா, இந்திய மருந்தியலாளர் (இ. 1973) 1920 – அ. வரதராசன், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி (இ. 2009) 1926 – யான் சமீன், சீனாவின் 5வது அரசுத்தலைவர்

Read More