உங்கள் எடை குறையாமல் இருப்பதற்கு என்ன காரணம்

பணிபுரியும் பெண்கள், காலையிலிருந்து வேலை செய்த அலுப்பினால் வீட்டுக்கு வந்தவுடன் அப்படியே சோபாவில் சாய்நது டிவி பார்த்துவிட்டு பொறுமையாக இரவு பத்து மணிக்கு மேல் சாப்பிட்டால் செரிப்பதற்கு சிரமமாவதுடன் வளர்சிதை மாற்றம் குறைந்து உடலில் கொழுப்பு அதிகம் சேரும். இரவு சீக்கிரமாக தூங்காமல் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் போன்றவற்றில் மூழ்கி விட்டு தாமதமாக தூங்கி சரியான நேரத்துக்கு எழாமல் இருந்தால் எடைக்கூடும். சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு பசியைத்தூண்டும் ஹார்மோன்கள் சீராக இயங்காமல், கிடைத்ததையெல்லாம் சாப்பிடச்செய்து எடையை அதிகரித்து விடக்கூடும். வேகவேகமாக சாப்பிடும் போது வயிறு …

Read More

சருமத்தின் மேற்பரப்பில் மறையாத தழும்புகள் மறைய சுலபமான வழிகள்

ஆடைகளை இறுக்கமாக அணிவதால் ஏற்படும் தழும்புகள், அம்மை தழும்புகள், பிரசவ தழும்புகள், முகப்பரு தழும்புகள், அறுவை சிகிச்சை தழும்புகள், தீக்காயத்தழும்புகள் என சருமத்தின் மேற்பரப்பில் மறையாத அடையாளமாக ஒரு சிலருக்கு இருக்கலாம். அவற்றை பக்க விளைவுகள் இல்லாமல் இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி அகற்ற பல தீர்வுகள் உள்ளன. தினமும் முகத்தில் ஆலிவ் எண்ணெய்யை தேய்த்து நீராவியை முகத்தில் சிறிது நேரம் படிய விடலாம். நாளடைவில் முகத்தில் உள்ள துளைகளும், தழும்புகளும் மறையத்தொடங்கும். சந்தன பவுடரை ரோஸ்வாட்டர் அல்லது பாலுடன் கலந்து முகத்தில் பூசி ஒரு …

Read More

தவறான ஆண்களுடன் உருவாக்கிக்கொள்ளும் ஒழுக்கமற்ற வாழ்க்கை பெண்களை சிறைக்குள் தள்ளும்

தப்பான காதலும், தடம்புரளும் வாழ்க்கையும் பெண்களை நினைத்துப் பார்க்க முடியாத சோகத்திற்குள் கொண்டுபோய் தள்ளிவிடும். அதன் பிறகு தப்பை உணர்ந்து அவர்கள் அழுதோ, அரற்றியோ பலனில்லை. சட்டத்தின் பிடியில் சிக்கி, மீண்டு வரமுடியாமல் மீதமுள்ள காலத்தை ஜெயில் கம்பிகளுக்குள் செலவிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும். பெண்கள் தடம் புரளாமல் ஒழுக்கமாக வாழ வேண்டும். அதற்கு சமூகமும் துணைபுரியவேண்டும். தவறான ஆண்களுடன் உருவாக்கிக்கொள்ளும் ஒழுக்கமற்ற வாழ்க்கை பெண்களை சிறைக்குள் தள்ளி, அவர்களது தலைமுறையினரின் எதிர்காலத்தையும் சிதைத்துவிடுகிறது.

Read More

கோடையில் உடலுக்கு நலம் தரும் உணவுகள்

நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த கொளுத்தும் வெயிலை சமாளிக்க மக்கள் தர்பூசணி, கிருணிப் பழ ஜூஸ் என்று படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். கோடைக் காலம் என்றாலே பலரும் தயிரை எடுத்துக்கொண்டால் குளிர்ச்சி தரும் என்பதுதான். தயிர் குளிர்ச்சியான உணவு இல்லை. உணவு செரிமானத்தில் மந்தத்தை ஏற்படுத்தி, உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்துவிடும். தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் மோர் உடலுக்கு குளிர்ச்சி. கோடையில் மோரை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். புதினா டீ, புதினா துவையல், சட்னி என ஏதாவது …

Read More

ஸ்மார்ட் போன் பழக்கத்தால் குழந்தைக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் எவை

குழந்தையின் பேச்சு ஆற்றல் விருத்தியடையும் காலத்தில் அவர்கள் விளையாடுவதற்கு ஸ்மார்ட் போனை கொடுத்தால் அவர்களின் பேச்சு ஆற்றல் விருத்தியடைவது தாமதம் அடையும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதே போல அவர்களது எழுத்து ஆற்றலும் பாதிக்கப்படும். ஸ்மார்ட் போனில் ஆர்வம் கொண்டு அதில் நேரத்தை செலவழிக்கும் குழந்தைகள் தூங்கும் நேரம் குறைந்துவிடுகிறதாம். அண்மைய ஆய்வு முடிவுகளின்படி குழந்தை ஒரு மணிநேரம் ஸ்மார்ட் போனில் செலவிட்டால் 15 நிமிடங்கள் தூக்கம் குறைகிறதாம். ஸ்மார்ட் போனில் இருந்து நீலக் கதிர் வீச்சு ஏற்படுகிறது. நீலக் கதிர்களால் உடற்கடிகார இயங்கங்களில் மாற்றங்கள் …

Read More

பெண்களுக்கு அழகான உடலமைப்பை அளிக்கும் உடற்பயிற்சி

உடற்பயிற்சி பெண்களுக்கு, நிச்சயமாக அழகான உடலமைப்பை அளிக்கிறது என்றே சொல்லலாம். உடற்பயிற்சியின் போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன. அதனால் உடலுக்கு நலமும் பலமும் மிகுதியாக கிடைக்கிறது. பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். ஊளைச் சதையை ஒழிப்பது போலவே ஒல்லியாய் இருப்பவரின் உடலில் போதுமான தசைகள் அமைய உடற்பயிற்சி உறுதுணை செய்யும். உடல் எடை அளவோடு அமையும். எப்போதுமே ‘ பாஸிடிவ் அப்ரோச்’ தான் எல்லாவற்றிலும் நல்ல பலனை அளிக்கும். …

Read More

கூந்தலை பாதுகாக்கும் வழிமுறைகள்

உங்கள் கூந்தலை வெப்பத்திலிருந்து பாதுகாப்பதன் மூலம் சிக்கை குறைக்கலாம். ஆண்டி-ஃபிரிஸ் தயாரிப்புகளை பயன்படுத்துங்கள். ஷாம்பூ, கண்டிஷனர், சீரம் அல்லது லீவ்-இன் கண்டிஷனர் சேர்த்து பயன்படுத்துங்கள். அடிக்கடி கூந்தலை அலசாதீர்கள், இதனால் கூந்தலில் உள்ள இயற்கை எண் ணெய் அகற்றப்படும். கூந்தலை உரசி தேய்க்காதீர்கள், டவலால் மென்மை யாகத் துடையுங்கள். வெப்பம்தான் கூந்த லின் முதல் எதிரி. அது கூந்தலின் கியூட்டிகிள்களை திறக்கிறது. எனவே, கூந்தலை அலசும் கடைசி முறையாவது, குளிர்ந்த நீரால் அலசவும். கூந்தலை முடிந்தவரை காற்றிலேயே உலர வைக்கவும். டிரையரை ‘கூல்’ செட்டிங்கில் வைத்து …

Read More

அன்றாட வாழ்விற்கு தேவையான ஹெல்த் டிப்ஸ்

காலை வேளையில் 15 நிமிடம் சூரிய வெளிச்சம் படவேண்டும் என்று ஃபெமினா ஆரோக்கிய வல்லுனர்கள் வலியுறுத்து கின்றனர். இது வைட்டமின் டி உதவும். இந்த வைட்டமின் குறைபாடு தசை, எலும்புகளில் பலவீனத்தை உண்டாக்கி, இதய நோய் உள்ளிட்ட அபாயத்தை உண்டாக்கும். தினசரி கலோரியில் பாதியை காலையில் உட்கொள்வது கருவுறும் தன்மையை அதிகரிப்பதாக கிளினிக்கல் சயன்ஸ் மருத்துவ சஞ்சிகையில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது. இதனால்தான் திடமான காலை உணவை பரிந் துரைக்கின்றனர். பால், பழங்களுடன் சேர்த்து சாப்பிடுவது சிறந்த காலை உணவு.

Read More

மூலிகையும் அதன் பயன்களும்

துளசி: மன அழுத்தம், நீரிழிவு, சுவாச சிக்கல் களை சரிசெய்யும். தக் காளி சாஸ், ஸ்பாகெட்டி அல்லது பிட்சாவில் சேர்த்து சாப்பிடலாம். பிரிஞ்சி இலை: பூண்டு, வெங்காயம், காரட், குடை மிளகாயுடன் பிரிஞ்சி இலைகளை சேர்த்து சாப்பிடுவதால் மைக்ரேன் தலைவலி, அதிக ரத்த சர்க்கரை போன்றவற்றை சரிசெய்யலாம். கொத்தமல்லி: கொஞ்சம் கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம் சேர்த்து சாப்பிடுவதால் முகப்பரு, நீரிழிவு சிக்கல்களை சரிசெய்யலாம். சமைக்காமல் சாப்பிடுவது நல்லது.

Read More

கேல் கீரை தரும் நன்மைகள்

கேல் (ஒரு வகை கீரை) வைட்டமின்கள் நிறைந்த ஒரு வகை கீரையாகும், வைட்டமின் சி, ஏ மற்றும் கே இதில் நிறைந்திருக்கின்றன.. நேரடியாக சருமத்தில் பூசும்போது, இது கருத்துப்போவதையும், வெயிலால் ஏற்படும் மங்குதல்களையும், சருமத்தில் வயதாவதன் அறிகுறிகளையும் சரிசெய்கிறது. உங்களுக்கு கருவளையங்களும் வறண்ட சருமமும் இருந்தாலும், கைப்பிடியளவு கேல் உங்கள் சருமத்திற்கு ஏற்ற பலன்களைத் தரும்.

Read More