ஊத்தங்கரை அருகே பைக் திருடிய வாலிபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த திருப்பதி (37). இவர் அரசு பேருந்து கண்டக்டர். கடந்த 25-ம் தேதி எம்.எஸ்.எம்.தோட்டம் அருகே பைக்கை நிறுத்திவிட்டு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இவர் பைக்கை போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(27) என்பவர் திருடி செல்லும் போது அவரை பிடித்து ஊத்தங்கரை போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Read More