தென்னிந்திய நடிகை சுகன்யாவிற்கு இன்று பிறந்ததினம்

தமிழ் சினிமாவில் 1991ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சுகன்யா. இதையடுத்து கமலுடன் மகாநதி, இந்தியன் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகை என்று பெயர் எடுத்தார். விஜய்காந்துடன் இவர் நடித்த சின்னக்கவுண்டர் திரைப்படம் வெளியாகி 250நாட்களுக்கு மேல் ஓடி சூப்பர் நடிகை என்ற பெயரை இவருக்கு பெற்றுத்தந்தது. வித்தியாசமான கதாபாத்திரம், பல விருதுகள் என முன்னணி நாயகியாக வலம் வந்த சுகன்யா இன்று தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி கொண்டு …

Read More

நடிகை ரேவதிக்கு இன்று பிறந்த தினம் ; வாழ்த்து தெரிவித்து வரும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணியில் இருந்தவர் நடிகை ரேவதி. அப்போது ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்தி, பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் நன்றாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து பெற்று வரும் ரேவதிக்கு இன்று பிறந்தநாள் . ஜூலை 8 ம் தேதியான இன்று இவர் தனது 54வது பிறந்த நாளை குடும்பத்தாருடன் மிக மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார். இவரது பிறந்த நாளுக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், நண்பர்கள் என பலரும் …

Read More

நடிகை மஞ்சுளா விஜயகுமாருக்கு நேற்று பிறந்த தினம் – உருக்கத்துடன் வாழ்த்து சொன்ன மகள் மற்றும் பேத்தி

கடந்த 2013ம் ஆண்டு மறைந்த நடிகை மஞ்சுளா விஜயகுமாருக்கு நேற்று பிறந்தநாள். ‘விஜயகுமார் வீட்டின் மிகவும் அழகான மஞ்சும்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று மகள் ப்ரீத்தா ஹரியும், ‘உங்களுடன் கழித்த ஒரு மாதத்தை மறக்க முடியாது அம்மம்மா’ என்று மூத்த பெண் வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமாரும் தங்கள் இன்ஸ்டாவில் பாசத்தையும், இளமைக்காலம் முதலான மஞ்சுளாவின் புகைப்படங்களையும் ஷேர் செய்திருக்கிறார்கள்.

Read More

பிரபல டிவியின் நீயாநானா புகழ் கோபிநாத்துக்கு இன்று பிறந்ததினம்

அதிகம் வரவேற்பை பெற்ற நீயா நானா என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர் கோபிநாத் . இந்த நிகழ்ச்சி தொகுப்பாளராக மட்டுமல்லாமல் சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்து கொண்டு வருகிறார். இவரின் பல மேடைப்பேச்சுக்கள் பல இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இன்றும் விளங்கி வருகிறது. டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான கோபிநாத், வாமனன், தோனி, நிமிர்ந்து நில் மற்றும் திருநாள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் இன்று தனது 45வது பிறந்தநாளை தனது குடும்பத்தாருடன் இணைந்து விமரிசையாக கொண்டாடி வருகிறார்.

Read More

தயாரிப்பாளர் கே.இ ஞானவேல்ராஜாவுக்கு இன்று பிறந்ததினம்

தமிழ் சினிமாவில் சில்லுனு ஒரு காதல், மெட்ராஸ், பருத்திவீரன், நான் மகன் அல்ல, அட்டகத்தி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற எண்ணற்ற படங்கள் தயாரித்து பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்து வசூல் சாதனையை செய்து வருகிறார் கே.இ ஞானவேல்ராஜா. ஜூன் 30ம் தேதியான இன்று தனது பிறந்தநாளை சந்தோஷத்துடன் கொண்டாடி வருகிறார். இவர் பிறந்தநாளையொட்டி பல நடிகர்-நடிகைகள் மற்றும் நண்பர்கள், திரைப்படதுறையை சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Read More

ராதிகா சரத்குமார் மகன் ராகுலுக்கு நேற்று பிறந்தநாள்

தமிழ் சினிமா தம்பதிகளான சரத்குமார் – ராதிகாவின் செல்லப் பிள்ளை ராகுல் இப்போது வளர்ந்து அம்மாவே அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு பெரிய ஆளாகி விட்டார் . ராதிகா சரத்குமார் மகன் ராகுல். ராகுலுக்கு நேற்று பிறந்தநாள். அப்போது அவருடைய அம்மாவான ராதிகா சரத்குமார் அண்ணாந்து பார்த்து தான் கேக் ஊட்டியுள்ளார் .

Read More

தென்னிந்திய சினிமாவை கலக்கிய லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்திக்கு இன்று பிறந்தநாள்

90களில் வெளிவந்து ஹிட்டான வைஜயந்தி ஐபிஎஸ், போலீஸ் லாக்கப், ராஜஸ்தான் போன்ற படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் பெயரை பெற்றவர் விஜயசாந்தி. இவர் தமிழில் ரஜினியுடன் மன்னன் படத்தில் மிகவும் சூப்பரான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஜூன் 24 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பட ரசிகர்கள், நண்பர்கள், திரைத்துறை நண்பர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Read More

தமிழ் சினிமாவில் தித்திக்கும் பாடல்களை தந்த கண்ணதாசனுக்கு இன்று பிறந்தநாள்

தமிழ் சினிமாவில் ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என பாடிய கவிஞர் கண்ணதசன், இன்றும் அழியாமல் நம் மனங்களில் நிலைத்து கொண்டிருக்கிறார். முத்தையாவாக பிறந்து முத்து முத்தான கவிதைகளை எழுதி கண்ணதாசனாக காலத்தை வென்ற காவியத் தாயின் இளைய மகனுக்கு இன்று 93வது பிறந்தநாள் ஆகும் .

Read More

பாடலாசிரியர் மற்றும் பிக்பாஸ் பிரபலமுமான சினேகனுக்கு இன்று பிறந்த நாள்

தமிழ் சினிமாவில் இயக்குனர் சேரன் இயக்கிய குடும்ப படமான பாண்டவர் பூமி படத்தில் இடம்பெறும் , “தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்” மற்றும் “அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம்” பாடலையும் எழுதி பிரபலமானவர் சினேகன் . பாடலாசிரியராகவும், நடிகராகவும் வந்து நம் அனைவரின் மனங்களையும் கொள்ளையடித்த சினேகன் பின்னர் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அவருக்கு இன்று பிறந்தநாள். ஜூன் 23 ம் தேதியான இன்று தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வரும் சினேகன் அவர்களுக்கு அவரது நண்பர்கள், ரசிகர்கள் …

Read More

கில்லி படத்தில் விஜய்யின் அப்பாவாக நடித்த ஆஷிஷ் வித்யார்த்திக்கு இன்று பிறந்ததினம்

தமிழ் சினிமாவில் தில், கில்லி, ஆறு, குருவி, பீமா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் ஆஷிஷ் வித்யார்த்தி. பல முன்னணி நடிகர்களுடன் வில்லனாகவும், கில்லி படத்தில் ரசிக்கவைக்கும் அப்பாவாகவும் வந்து நம் அனைவரையும் நெகிழ வைத்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் இன்று தனது 57வது பிறந்தநாளை தனது குடும்பத்தாருடன் கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்.

Read More