முக்கிய கட்சிகளுக்கு மார்ச் 12 இயக்கம் விடுத்துள்ள அழைப்பு

இலங்கையில் தூய்மையான அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தி வைக்கும் மார்ச் 12 இயக்கத்தின் லட்சியத்தை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அந்த இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் ரோஹன ஹெட்டியாராய்ச்சி கூறினார். மார்ச் 12 இயக்கத்தின் 6 வருட பூர்த்தியை குறிக்கும் விதமாக அடுத்துவரும் வியாழக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு கட்சிகளை அழைக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று மருதானை சமூக சமய கேந்திர மத்திய நிலையத்தில் நடைபெற்ற போதே அவர் இந்த விஷயத்தை தெரிவித்தார்.

Read More

முக்கிய அமைப்பின் தலைமைக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது

இலங்கையில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் அதிகாரப் பூர்வ தேர்தல் பிரசார தலைமை அலுவலகம் நேற்று சர்வமத தலைவர்களின் ஆசியுடன் திறந்து வைக்கப்பட்டது. ஆதரவாளர்களின் வெற்றிக்கோஷத்துடன் சஜித் பிரேமதாச பத்தரமுல்லை – எதுல் கோட்டையில் தலைமை அலுவலகத்தை காலை 9.34 மணியளவில் சஜித் பிரேமதாச திறந்து வைத்தார்.

Read More

ஒளவையாரை போற்றும் விதமாக நடைபெற்ற கோலாகல நிகழ்வு

தமிழ் வளர்த்த அன்னை என போற்றப்படும் ஒளவையாருக்கு இலங்கை மட்டக்களப்பில் நேற்று மாலை கோலாகலமான விழா நடத்தப்பட்டது. வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையுடன் கதிரவன் பட்டிமன்ற பேரவையினால் ஒளவை விழா சிறப்பாக நடந்துள்ளது . நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா,மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் கலாரஞ்சினி கணேசலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டதுடன் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Read More

முக்கிய பகுதியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி மாநாடு

இலங்கையில் வவுனியாவில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட மாநாடு ‘மக்கள் சக்தியை கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது. வன்னி மாவட்ட அமைப்பாளரும் வவுனியா தெற்கு பிரதேசசபை உறுப்பினருமான உப்பாலி சமரசங்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மக்கள் மத்தியில் சிறந்த சக்தியை கட்டியெழுப்பும் செயற்பாடுகள், இலங்கையில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள், ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

Read More

பிரதான கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று கிளிநொச்சியில் உள்ள அந்த கட்சியின் மாவட்ட கிளைக்காரியாலயமான அறிவகத்தில் நடைபெறுகிறது. அவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறுகின்ற இந்த கூட்டத்தில், ஜெனீவா தீர்மானத்திலிருந்து அரசாங்கம் முழுமையாக வெளியேறுகின்றமை மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முகங்கொடுப்பது குறித்து ஆராயப்படவிருக்கிறது.

Read More

முக்கிய இடத்தில் நடைபெறும் நூலக நிறுவன ஆவணப்படுத்தல், ஓலைச்சுவடிகள் கண்காட்சி

மரபுரிமைகளைத் தேடி எனும் தொனிப் பொருளில் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மற்றும் ஓலைச்சுவடிகள் கண்காட்சியும் கலந்துரையாடலும் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கிறது . இன்று சனி மற்றும் ஞாயிறு திங்கட் கிழமைகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மேல்மாடியில் அமைந்துள்ள பிரார்த்தனை மண்டபத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை என இரண்டு தினங்கள் நடைபெறவிருக்கிறது . இந்த கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு நூலக நிறுவனத்தினரால் யாழ் ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

Read More

முக்கிய பிரேதசத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களிற்கு கல்விக்கான உபகரணங்கள் அளிக்கப்பட்டது

இலங்கையில் தமிழீழ விடுதலை கழகத்தின் செயலதிபர் உமாமகேஸ்வரனது 72 வது பிறந்த தினத்தை முன்னிட்டு உமாமகேஸ்வரன் பவுண்டேசன் அமைப்பினால் 74மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது. நேற்று காலை 11மணியளவில் செட்டிக்குளம் பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

Read More

ஜெர்மன் தொழிநுட்ப கல்லூரிக்கு விஜயம் செய்த அமைச்சர்

இலங்கையில் கிளிநொச்சி, ஜெர்மன் தொழிநுட்ப கல்லூரிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். கிளிநொச்சி, அறிவியல் நகரில் அமைந்துள்ள ஜேர்மன் தொழிநுட்ப கல்லூரி மாணவர்களால் அங்கு நிலவும் குறைகள் தொடர்பாக அமைச்சருக்கு தொடர்ச்சியாக புகார்கள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக தெரியவருகிறது. இவ்வாறான நிலையில் குறித்த புகார்களை அடிப்படையாக வைத்து அமைச்சரின் இந்த விஜயம் அமைந்திருந்தாக கூறப்படுகிறது.

Read More

ரெலோவின் 50ஆவது நிறைவு விழாவில் பேசிய செல்வம் எம்.பி

இலங்கையில் தமிழீழ விடுதலை இயக்கமோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்போ எமது மக்களின் உரிமைகளை யாருக்கும் அடமானம் வைக்காது என்பதை நான் உறுதியாக கூறுகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார் . வவுனியாவில் இன்று நடைபெற்ற ரெலோவின் 50ஆவது நிறைவு விழா நிகழ்வில் பங்கேற்று கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விசயத்தை தெரிவித்தார்.

Read More

தனி வீடமைப்புக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

இந்திய அரசாங்கத்தால் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவிருக்கும் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அடிக்கல் நாட்டும் வைபவம் முதற்கட்டமாக இன்று இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் – வெலிஓயா தோட்டம் மேற்பிரிவில் நடைபெற்றுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் 50 வீடுகளை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

Read More