வத்தலக்குண்டு அருகே புதருக்குள் மூட்டை மூட்டையாக சிக்கிய குட்கா பொருட்கள்

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே ஆடுசாபட்டியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வத்தலக்குண்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள புதருக்குள் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவை எங்கிருந்து வந்தது? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read More

தஞ்சையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் – போலீசார் விசாரணை

தஞ்சாவூர்: தஞ்சை பாலாஜி நகர் பஸ் நிறுத்தம் அருகே 60 வயது ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து தஞ்சை தெற்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர். ஆனால் இறந்தவர் யார்? என்ற விபரம் தெரியவில்லை. இதையடுத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

குளச்சல் அரசு மருத்துவமனையில் ரூ.10 லட்சம் செலவில் ஹைடெக் மருத்துவ உபகரணங்கள்

குளச்சல்: குளச்சல் அரசு மருத்துவமனை சுகாதார பணியாளர்கள், செவிலியர் மற்றும் பணியாளர்களுக்கு முக கவசங்கள் மற்றும் உள் நோயாளிகளுக்கு ரொட்டி, பால் வழங்கும் நிகழ்ச்சி மருத்துவமனையில் நடந்தது. தொடர்ந்து பிரின்ஸ் எம்.எல்.ஏ., மருத்துவ அலுவலரிடம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மருத்துவமனைக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் பிரின்ஸ் எம்.எல்.ஏ., குளச்சல் அரசு மருத்துவமனையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஹைடெக் ஆய்வுக்கூடம் அமைப்பது, இ.சி.ஜி. வெண்டிலேட்டர் உள்பட ஐ.சி.யு. வார்டுக்கு தேவையான அனைத்து உபகரணங்கள் வாங்கப்படும் என தெரிவித்தார்.

Read More

ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்லுங்கள் – போலீசார் வேண்டுகோள்

நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தை தற்போது வடசேரி பஸ் நிலையத்தில் செயல்பட்டு வருகிறது. மார்க்கெட்டில் போலீசார் காலை முதலே கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இன்றும் காய்கறிகள் வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். இதனால் போலீசார் பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலமாக பல்வேறு வேண்டுகோள்களை விடுத்தனர். கூட்டம், கூட்டமாக கடைகளில் நிற்காதீர்கள். மார்க்கெட்டிற்கு தினமும் வருவதை தவிர்க்கும் வகையில் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்லுங்கள். கொரோனாவை கட்டுப்படுத்த அரசுக்கு நாம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

Read More

வீடுகளிலேயே தொழுகை நடத்த வேண்டும் – அமைச்சர் நிலோபர் கபீல்

வேலூர்: அமைச்சர் நிலோபர் கபீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-‌ ஷபே பராத் முஸ்லிம்களுக்கு மிக முக்கிய நாளாகும். இந்த நாள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு (ஏப். 9, 10) நடுவில் வருகிறது. ஆண்கள் வழக்கமாக மசூதிகளில் கூடி தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். இது முக்கியமான தவிர்க்க முடியாத ஒரு பண்டிகையாகும். கொரோனா பாதிப்பு காரணமாக நாட்டின் அனைத்து மத வழிப்பட்டுத்தலங்களான கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாகும். இதன் காரணமாக முஸ்லிம்கள் தங்களது …

Read More

வேலை நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் – வசந்தகுமார் எம்.பி.

நாகர்கோவில்: வசந்தகுமார் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில்:- கொரோனா தாக்குதல் உலகம் முழுவதும் பரவலாக இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை அனைவரும் கட்டுக்கோப்பாக இருந்து ஒத்துழைப்பதினால் தாக்கம் சற்று குறைவாக இருக்கிறது. குமரி மாவட்ட மக்களும் கட்டுக்கோப்பாக இருப்பதினால் கொரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கிறது. அது மட்டுமல்ல, இரவு பகலாக சேவை செய்கின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்களுக்கு பணி நேரத்தில் ஏதாவது தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு ரூ.2 லட்சம் தமிழக அரசு அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ரூ.5 லட்சமாவது அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.

Read More

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் தங்க ரூ.1 கோடியில் புதிய கட்டிடம்

கோவை: கோவை அரசு மருத்துவமணியில் நோயாளிகளின் உறவினர்கள் தங்க வசதியாக ரூ.1 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:- கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். நாள்தோறும் புறநோயாளிகள் பிரிவுக்கு தினசரி 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வருகின்றனர். மேலும் 1,300 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே உள்நோயாளிகளாக …

Read More

கண்ணனூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு இலவச முக கவசம் வழங்கிய காங்கிரஸ் கவுன்சிலர்

திருவட்டார்: திருவட்டார் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணனூர் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சுகள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின்மேரி, முக கவசம் மற்றும் சானிட்டரி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலவச வழங்கினார்.

Read More

புதுவை அருகே நடுரோட்டில் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட போலீசாருக்கு மிரட்டல் – 2 பேர் கைது

சேதராப்பட்டு: புதுவை அருகே ஆரோவில்லை பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் அப்பகுதியில் மரவாடி நடத்தி வருகிறார். இவருக்கு மேகநாதன், செங்கேணி ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் எச்சரித்தபோது அவர்கள் போலீசாரை திட்டி மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேகநாதன், …

Read More

கொரோனா பாதிப்புக்குள்ளான 26 மாவட்டத்தில் நேற்று கொரோனா பரவவில்லை

சென்னை: சென்னைக்கு அடுத்த படியாக கோவையில் 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய கொரோனா பாதிப்பை கணக்கெடுத்தால் சென்னைக்கு அடுத்தபடியாக திருப்பூரில் நேற்று மட்டும் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஏற்கனவே 3 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இது போன்று 7 மாவட்டங்களில் நேற்றும் கொரோனா பரவி இருந்தது. இதன் படி பார்த்தால் கொரோனா பாதிப்புக்குள்ளான 33 மாவட்டங்களில் 26 மாவட்டத்தில் நேற்று கொரோனா பரவல் இல்லை என்பது கொஞ்சம் ஆறுதலாகவே உள்ளது. இதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நெல்லை, …

Read More