தர்மபுரி மாவட்டத்தில் விடுமுறை வழங்கப்பட்ட 215 போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போலீசாருக்கு சுழற்சி முறையில் 3 பிரிவுகளாக பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஊரடங்கை அமல்படுத்துவதற்கான பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதன்படி மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாரில் 215 பேருக்கு கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை 7 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர். விடுமுறை வழங்கப்பட்ட 215 போலீசாருக்கு நேற்று தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் கொரோனா வைரஸ் …

Read More

திருச்சி அருகே இடப்பிரச்சனையில் வெடிகுண்டு வீச்சு – தி.மு.க. கவுன்சிலர் உள்பட 9 பேர் கைது

திருச்சி: மணிகண்டம் கும்பக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அடைக்கண் மகன் பழனிச்சாமி (வயது 40), விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டி என்பவரது மகன் பழனிச்சாமிக்கும் அங்கு உள்ள கோவில் அருகே உள்ள இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் அடைக்கன் மகன் பழனிச்சாமியை மிரட்ட, ஆண்டி மகன் பழனிச்சாமி காரில் கும்பலை அழைத்து வந்துள்ளார். அவருக்கு ஆதரவாக தி.மு.க. கவுன்சிலர் அருணாச்சலம் இருந்துள்ளார். அப்போது அடைக்கண் மகன் பழனிச்சாமியை மிரட்டும் வகையில் எதிர் தரப்பினர் காரில் செல்லும் போது நடுவூரில் …

Read More

கோவையில் நிவாரண பொருட்கள் வழங்குவதில் முறைகேடு – பெண் விற்பனையாளர் உள்பட 3 பேர் சஸ்பெண்டு

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 1418 ரேஷன் கடைகள் மூலம் 9 லட்சத்து 76 ஆயிரத்து 116 குடும்ப அட்டை தாரர்களுக்கு கடந்த 2-ந் தேதி முதல் ரூ.1000 நிவாரணத் தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நிவாரண பொருட்கள் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கலெக்டருக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் கோவை மாநகராட்சி பாரி நகர் கடையில் வேலை பார்த்து வந்த ராஜசேகர், வேலாண்டிபாளையத்தில் பணியாற்றிய ராஜன், கோவைப் புதூரில் பணிபுரிந்த லதாபாய் உள்ளிட்ட 3 விற்பனையாளர்களை கலெக்டர் ராஜாமணி தற்காலிக பணியிடை …

Read More

மணப்பாறை பகுதியில் குரங்குகளுக்கு உணவாகம் வெள்ளரிக்காய்கள்

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை மருங்காபுரி பகுதியில் வெள்ளரிக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளி மாநிலங்களுக்கு வெள்ளரிக் காய்களை லாரி டிரைவர்கள் ஏற்றிச்செல்ல முன்வராததால் அவை அனைத்தும் குவியல் குவியலாக தேங்கிக் கிடக்கிறது. தமிழகத்தில் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவை அனைத்தும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விவசாயிகள் பொன்னணியாறு அணை பகுதியில் உள்ள சாலையில் சுற்றித்திரியும் குரங்குகளுக்கு உணவாக வெள்ளரிக்காய்களை குவியல் குவியலாக கொட்டி வருகின்றனர். அதனை குரங்குகள் உணவாக உட்கொள்கின்றன. இப்படி …

Read More

புதுக்கடை அருகே பிச்சை எடுத்து வந்த முதியவரின் சாக்குப் பையில் ரூ.75 ஆயிரம்

புதுக்கடை: புதுக்கடை அருகே முன்சிறையை பகுதியைச் சேர்ந்த முதியவர் சுப்பு. அந்த பகுதியில் பிச்சை எடுத்து வந்தார். இவர் ஒரு சாக்குமூடையை மட்டும் பத்திரப்படுத்தி கூடவே எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். முதியவருக்கு உடலில் புண்கள் ஏற்பட்டு முன்சிறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து சிகிச்சை பெற்றார். இதனால் அந்த பகுதி இளைஞர்கள் உதவியுடன் முதியவரை ஆசாரிப்பள்ளம் அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது முதியவர் உடன் வைத்திருந்த சாக்குப்பையை வாங்கி சிலர் சோதித்தனர். அதில் சில்லறை பணமாக மொத்தம் ரூ.74 ஆயிரத்து 630 …

Read More

நெல்லையில் நிவாரண பொருட்கள் வாங்க ரேஷன் கடையில் குவிந்த கிராம மக்கள்

நெல்லை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் வருகிற 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையை சமாளிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.1,000 மற்றும் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டது. நிவாரண நிதி பெற்றவர்களில் பெரும்பாலானோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நெல்லையில் தச்சநல்லூர், பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று நிவாரண பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் …

Read More

பேரூர் அருகே சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த பாரத் சேனா நிர்வாகி கைது

கோவை: கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்(வயது 44). இவர் பாரத் சேனா இளைஞர் அணி மாநில அமைப்பாளராக உள்ளார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் பேரூர் சோதனை சாவடி வழியாக சென்றார். அப்போது ஜெகதீசை சப்-இன்ஸ் பெக்டர் சின்னத்துரை தடுத்தார். ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் வெளியே வரக்கூடாது என்று கூறி வருகிறோம். நீஙகள் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு என்ன என்று கேட்டு தகராறு செய்ததோடு மட்டும் இல்லாமல் சப்- இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இது குறித்து சப்- …

Read More

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் 18 ரெயில் பெட்டிகள் கொரோனா தனிமை வார்டாக மாற்றம்

நெல்லை: நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திலும், ரெயில் பெட்டிகள் கொரோனா தனிமை வார்டுகளாக மாற்றம் செய்யும் பணி கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இந்த பணி அங்குள்ள பிட்லைன் எனப்படும் பராமரிப்பு மையத்தில் நடந்து வருகிறது. இரவும், பகலுமாக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக 18 ரெயில் பெட்டிகள் தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் சுகாதார வளாக வசதி, டாக்டர்கள் தங்குவதற்கான அறை, ரெயில் பெட்டியில் உள்ள இருக்கைகள் அகற்றப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளன. திரை சீலைகள் மூலம் கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட …

Read More

பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கைவைப்பதா? – சீமான் கடும் கண்டனம்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- கொரோனா அழிவு காலக்கட்டத்தில் நமது ஆட்சியாளர்களின் செயல்பாடுகள், அவர்களின் உண்மையான திறனைக் காட்டிவருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டாண்டுகளுக்கு நிறுத்தி வைக்க முடிவு செய்திருக்கும் மத்திய அரசின் முடிவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தவறானப் பொருளாதாரக் கொள்கைகளாலும், பிழையான பொருளாதார முடிவுகளாலும் நாட்டின் பொருளாதாரத்தை மொத்தமாய் சூறையாடிவிட்டு தற்போது பாராளுமன்றத் தொகுதிகளின் மேம்பாட்டுக்காக உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் நிதியுரிமையைப் பறிப்பது மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் எதேச்சதிகாரப் போக்காகும். கடந்த ஆண்டு …

Read More

திருச்சி அருகே டாஸ்மாக் கடையை திறந்து மதுவிற்ற ஊழியர்கள் உள்பட 3 பேர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம், மணிகண்டம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றும் செந்தில்குமார்(வயது 45) மற்றும் விற்பனையாளரான காமராஜ் (42) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சம்பந்தப்பட்ட கடையை திறந்து மது பாட்டில்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஸ்டீபன் (27) என்பவருக்கு டாஸ்மாக் பணியாளர் 2 பேரும் சேர்ந்து 2 பெட்டி மதுபாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்துள்ளனர். பின்னர், அதை தூக்கிக்கொண்டு, ஆலம்பட்டி சாலையில் சென்ற ஸ்டீபனை மணிகண்டம் போலீசார் மறித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், …

Read More