• January 18, 2020

பெண்ணின் தலையில் 3 தோட்டாக்கள்

பஞ்சாப் மாநிலத்தில் தலையில் பாய்ந்த 3 துப்பாக்கித் தோட்டாக்களுடன் சுமார் 7 கிலோமீட்டர் தூரம் காரை ஓட்டி வந்த பெண் ஒருவர் ரத்தம் சொட்ட சொட்ட காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அப்பெண்ணுக்6கும் அவர் சகோதரருக்கும் இடையே நிலம் தொடர்பான தகராறு இருந்து வந்தது. …

ஜனவரி 18 : இன்றைய தினத்தில் இறந்த முக்கிய பிரமுகர்கள்

1862 – ஜான் டைலர், அமெரிக்காவின் 10வது அரசுத்தலைவர் (பி. 1790) 1917 – அன்ட்ரூ மறீ, தென்னாப்பிரிக எழுத்தாளர், மற்றும் கிறித்துவப் பாதிரியார் (பி. 1828) 1936 – இரட்யார்ட் கிப்ளிங், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1865) 1936 – ஜான் வுட்ரோஃப், பிரித்தானிய கீழ்த்திசைவாதி (பி. 1865) 1955 – சாதத் ஹசன் மண்ட்டோ, பாக்கித்தானிய எழுத்தாளர் (பி. 1912) 1963 – ப. ஜீவானந்தம், …

ஜனவரி 18 : இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்

1752 – ஜான் நாசு, பிரித்தானியக் கட்டிடக் கலைஞர் (இ. 1835) 1854 – குமாரசாமிப் புலவர், ஈழத்துப் புலவர் (இ. 1922) 1892 – ஒலிவர் ஹார்டி, அமெரிக்க நகைச்சுவை நடிகர் (இ. 1957) 1921 – நாம்பு ஓச்சிரோ, நோபல் பரிசு பெற்ற சப்பானிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2015) 1927 – எஸ். பாலச்சந்தர், தமிழக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், வீணை …

தாய்லாந்தின் அரசு தாய்படைத்துறைகள் நாள் இன்று

1591 – சியாம் மன்னர் நரேசுவான் பர்மா இளவரசர் மின்சிட் சிராவுடன் தனியாக மோதி அவனைக் கொன்றார். இந்நாள் இன்றும் தாய்லாந்தில் அரச தாய் படைத்துறைகள் நாள் எனக் கொண்டாடப்படுகிறது.

முதன் முதலாக கப்பலில் விமானம் தரையிறக்கப்பட்ட நாள்

1911 – யூஜின் எலி என்பவர் தனது விமானத்தை சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பென்சில்வானியா என்ற கப்பலின் மீது இறக்கினார். கப்பலொன்றில் தரையிறக்கப்பட்ட முதலாவது விமானம் இதுவாகும்.

சென்னை விமானத்தில் 3½ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

ஆலந்தூர்: சென்னை விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், நேற்று கொழும்பில் இருந்து சென்னை வந்த ஸ்ரீலங்கா ஏர்வேஸ் விமானத்தில் இருந்த பயணிகளிடம் சோதனை நடந்தது. அப்போது அதில் இருந்த 6 பயணிகள் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்த …

அதிமுக பெண் கவுன்சிலர் உள்பட 3 பேர் திருப்பதியில் மீட்பு – போலீசார் தீவிர விசாரணை

பள்ளிப்பட்டு: திருத்தணி அருகே உள்ள மத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோட்டி. திருப்பூரில் ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பூங்கொடி. உள்ளாட்சி தேர்தலில் திருத்தணி ஒன்றியம் 2-வது வார்டில் பூங்கொடி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் …

நெல்லையில் வீட்டு சுவர் தகராறில் தந்தை-மகள் அடித்துக்கொலை : 3 பேர் கைது

நெல்லை: நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து(வயது 55), கூலித் தொழிலாளி. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஜெயராஜ் என்பவருக்கும் சுற்றுச்சுவர் சம்பந்தமாக கடந்த 5 ஆண்டுகளாக தகராறு இருந்து வந்தது. நேற்று பொங்கலுக்காக தங்கமுத்துவின் மகள் சுமதி மற்றும் அவரது கணவர் …

நீட் தேர்வு விண்ணப்பம் – பிழைத் திருத்த முடியாததால் தேர்வர்கள் அதிர்ச்சி

நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு எழுத 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 17 ஆயிரத்து 502 பேர் விண்ணப்பித்து, தேர்வு எழுத உள்ளனர். தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் …

திருச்சி அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பெண் பலி

திருச்சி: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் உற்சாகத்துடனும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றன.  சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பார்வையாளர் ஜோதிலட்சுமி என்பவர் உயிரிழந்துள்ளார். இங்கு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 …

தக்கலை காவல்நிலையத்திலேயே தீவிரவாதிகள் 2 பேருக்கும் மருத்துவப் பரிசோதனை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல்நிலையத்தில் இருக்கும் தீவிரவாதிகள் 2 பேருக்கும் மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. காவல்நிலையத்துக்கு அரசு மருத்துவர் வரவழைக்கப்பட்டு தீவிரவாதி அப்துல் சமீம், தவ்பீக் இருவருக்கும் அனைத்து தரப்பு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பஜாஜ் நிறுவனத்தின் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியீட்டு விவரம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டது. இந்த ஸ்கூட்டர்: அர்பேன் மற்றும் பிரீமியம் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. என்ட்ரி லெவல் செட்டாக் ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சம் என்றும் பிரீமியம் வேரியண்ட் விலை ரூ. 1.15 …

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வு

புதுச்சேரி மத்திய அமைச்சர் பிரகலாத் தலைமையில் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வானார். 2015-ம் ஆண்டு புதுச்சேரி பாஜக தலைவராக தேர்வான சாமிநாதன் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

விருதுநகர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் முற்றுகை போராட்டம்

விருதுநகர்: விருதுநகர் அருகே அழகாபுரி பகுதியில உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. மருத்துவர் இன்றி செவிலியர் பிரசவம் பார்த்ததால் இளம்பெண் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டூர் அருகே சாவிலும் இணை பிரியாத தம்பதி

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 97). நூற்பாலையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி குள்ளம்மாள் (87). இவர்களுக்கு 4 மகள், 3 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு குள்ளம்மாள் உடல் நலக்குறைவால் இறந்தார். …