ஆலாந்துறை அருகே சுடுகாட்டில் கிடந்த துப்பாக்கி தோட்டா – போலீசார் விசாரணை

பேரூர்: கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே செம்மேடு கிராமத்தில் சுடுகாடு உள்ளது. இங்கு புதைக்கப்பட்டவரின் நினைவு நாளையொட்டி அங்கு சென்ற உறவினர்கள் புதர்களை அகற்றினார்கள். அப்போது அங்கு ஒரு துப்பாக்கி தோட்டா கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அதை எடுத்து ஆலாந்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசார் இது குறித்து விசாரணை நடத்தியதுடன், அதை வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Read More

விருதுநகரில் மேலும் 141 பேருக்கு கொரோனா பாதிப்பு

விருதுநகர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் இன்று 141 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,472 ஆக உயர்ந்துள்ளது.

Read More

தொப்பூர் அருகே லாரி டிரைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

நல்லம்பள்ளி: தொப்பூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 45). லாரி டிரைவரான இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியே சென்றார். பின்னர் வீட்டிற்கு திருப்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் போரில் தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read More

திருவள்ளூரில் 7 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

திருவள்ளூர்: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 334 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,264 ஆக உயர்ந்துள்ளது.

Read More

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

ராமநாதபுரம்: கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,024 ஆக உயர்ந்துள்ளது.

Read More

வேதாரண்யம் அருகே காரில் கடத்திய 300 கிலோ கஞ்சா பறிமுதல் – போலீசார் விசாரணை

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடி தெற்கு சாலையில் காரில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். சுமார் ரூ.45 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றது தொடர்பாக வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

கீழக்காவட்டாங்குறிச்சியில் பழுதடைந்த கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தை சீர்செய்த பொதுமக்கள்

கீழப்பழுவூர்: அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தின் கிராம நிர்வாக அதிகாரி கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதனை கண்ட கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை அந்த கட்டிடத்தை சீர் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கொரோனா காலம் என்பதனாலோ, என்னவோ கிராம நிர்வாக அதிகாரி கட்டிட புனரமைப்புக்கு மாவட்ட நிர்வாகம் முக்கியத்துவம் அளிக்கவில்லை. பின்னர் கிராம மக்கள் பலரும் தங்களால் ஆன பங்களிப்பாக நிதி உதவி அளித்து அந்த கட்டிடத்தை சரி செய்து …

Read More

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 143 பேருக்கு கொரோனா தொற்று

செங்கல்பட்டு: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 8,426 ஆக உயர்ந்துள்ளது.

Read More

ஆம்பூர் அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் நகை-பணம் கொள்ளை

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா (வயது 65). இவருடைய உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் குடும்பத்தினர் அனைவரும் ஆம்பூர் தனியார் கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில் முகாமில் இருந்து அவர்கள் நேற்று காலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 70 பவுன் நகை, ரூ.2 லட்சம் …

Read More

கதிர்காமம் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு ஏற்பாடு- சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-புதுவை மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 400 பேர் கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு 600 படுக்கை வசதிகள் இருந்தாலும் கூட தூய்மைப் பணியில் பிரச்சினை வருகிறது. அதனால் 100 கொரோனா நோயாளிகளை ஜிப்மருக்கு மாற்றுவதற்கு கடிதம் அனுப்பி உள்ளேன். அதேபோல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அறிகுறி தெரியாத கொரோனா தொற்று உள்ள 25 நோயாளிகளை மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More