குமரி மாவட்டத்தில் மழை குறைந்தது!
குமரி மாவட்டத்தில் பெருஞ்சாணி, சிற்றாறு, குருந்தன்கோடு, திற்பரப்பு பகுதிகளில் நேற்று மழை பெய்தது. பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 15.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழை சற்று குறைந்ததையடுத்து பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. அணையிலிருந்து 386 கனஅடி உபரிநீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 44.92 அடியாக உள்ளது. அணைக்கு 678 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 54.20 அடியாக உள்ளது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 12.10 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் …
Read More