• August 17, 2019

மழைநீர் சேகரிப்பில் சாதனை செய்யும் நிறுவனம்

தற்போது கிரண்ஃபோஸ் என்ற குழாய்கள் தயாரிக்கும் நிறுவனம் 2018-ம் ஆண்டு சேமித்த மழைநீரின் அளவு 8,00,000 லிட்டர்கள் என தெரியவந்துள்ளது . சேமிப்புக் கிணறுகள், கால்வாய்கள், மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் போன்றவற்றை அமைத்து, அவற்றை சேகரித்து வைத்ததோடு, மீதி மழைநீரை நிலத்தடி நீர் …

தன்னுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக புகாரளித்த பெண்

இலங்கையில் தலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தலைமன்னார் காவல் நிலையத்தில் பணி யாற்றும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக நேற்று மாலை மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். தன்னுடன் தவறாக நடந்து கொள்ள …

இலங்கையில் மருத்துவமனை கழிவகற்றல் குறித்து வெளியான உத்தரவு

மருத்துவமனை கழிவுகளை புதைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி கருப்பையா ஜீவராணி நேற்று உத்தரவிட்டார். அதனையடுத்து மருத்துவமனை பணிப்புறக்கனிப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இலங்கையில் மட்டு போதனா மருத்துவமனையின் கழிவுகளை புதைப்பதற்காக பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட நிலமான செங்கலடி வேப்பைவெட்டுவான் பகுதியில் ஒதுக்கப்பட்டு அங்கு …

பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள தாழிறக்கம் காரணமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் ஹட்டனிலிருந்து போடைஸ் வழியாக டயகம செல்லும் பிரதான சாலையில் அக்கரபத்தனை எல்பியன் பகுதியில் பிரதான சாலையில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக போக்குவரத்து ஒருவழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமீப காலமாக மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் …

இலங்கையில் முக்கிய பகுதியில் கைக்குண்டு மீட்பு

இலங்கையில் அம்பாறை , சம்மாந்துறை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . நேற்று மாலை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு சம்மாந்துறை பழைய திரையரங்கிற்கு அருகிலுள்ள நிலம் ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாதவர்களால் கைவிடப்பட்டிருந்த …

இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும் – ரஷ்யா வலியுறுத்தல்

காஷ்மீரில் நடந்த மாற்றங்கள் குறித்து விவாதிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலை கூட்டுமாறு அதன் தலைவரை சீனா கேட்டுக்கொண்டது. இந்நிலையில், சீனாவின் கோரிக்கையை ஏற்று, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. மூடிய அறைக்குள் ரகசியமாக நடைபெற்ற இந்த ஆலோசனையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் …

தென்கொரியாவுடன் பேச எங்களுக்கு இனி வார்த்தைகள் இல்லை – வடகொரியா

தென்கொரியா தனது கூட்டு ராணுவ பயிற்சியைத் தொடர்ந்து வரும் நிலையில், வடகொரியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- தென்கொரியா தனது கூட்டு ராணுவ பயிற்சியைத் தொடர்கிறது. அதே சமயம் அமைதியான பொருளாதாரம் அல்லது அமைதியான ஆட்சியை பற்றி பேசுகிறது. இது முரணானது. …

போலீஸ்காரர்கள் மீது 2 பேர் கத்திக்குத்து தாக்குதல்; சக போலீசார் சுட்டதில் ஒருவர் பலி

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் போலீஸ்காரர்கள் மீது பாலஸ்தீன வாலிபர்கள் 2 பேர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தினர். அதனை தொடர்ந்து, சக போலீசார் அவர்களை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.

சிறைபிடிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய் கப்பலை விடுவித்தது இங்கிலாந்து!

ஈரான் நாட்டின் எண்ணெய் கப்பல் ‘கிரேஸ்-1’, கடந்த மாதம் 4-ந் தேதி இங்கிலாந்தின் ஜிப்ரால்டர் கடல் பகுதியில் சென்றபோது சிறைபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஈரானுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே மோதல் வெடித்தது. தங்களது கப்பலை விடுவிக்காவிட்டால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் …

அமெரிக்காவில் 12 நாட்களுக்குள் 10 ஆயிரம் குறுஞ்செய்திகள் அனுப்பியவர் கைது!

அமெரிக்காவின், புளோரிடாவை சேர்ந்த நிகோலஸ் சி நெல்சன் (வயது 48)என்பவருக்கு அவரது தோழி மூலம் ஒரு இளம்பெண் அறிமுகமானார். இருவரும் நேரில் சந்தித்துக்கொண்டதையடுத்து, அந்த இளம்பெண் நெல்சனுக்கு தனது செல்போன் எண்ணை கொடுத்தார். செல்போன் எண் கிடைத்தது முதல் நெல்சன் அந்த பெண்ணுக்கு …

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி

அமெரிக்காவின் பல இடங்களில் தொடந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்று வரும் நிலையில், நேற்று அலபாமா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிர் இழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை …

சீனாவின் தலையீடு தேவையில்லை – ஹாங்காங் போலீஸ் துறை

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவாளர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஹாங்காங் போலீஸ் துறை தெரிவித்துள்ளதாவது:- ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவாளர்களின் போராட்டம் தற்போது இருப்பதை விட மோசமானாலும் கூட தாங்களே அதனை சமாளித்து விடுவோம் என்றும், சீனாவின் தலையீடு தேவையில்லை என்றும் ஹாங்காங் …

ஆஷஸ் 2-வது டெஸ்ட்: மழையால் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது

லண்டன் லார்ட்சில் நடந்து வரும் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 258 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 2-வது நாள் முடிவில் ஒரு …

இலங்கை – நியூசிலாந்து முதலாவது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 267 ரன்னில் ஆல்-அவுட் ஆனது இலங்கை அணி

காலேயில் நடந்து வரும் இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 93.2 ஓவர்களில் 267 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. சுரங்கா லக்மல் 40 ரன்களும், …

உலக மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டியில் தமிழக வீரர் சாதனை!

தென்கொரியாவில் நடந்து வரும் உலக மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். உலக மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டியில் தமிழக வீரர் அரவிந்த் நைனார் ஆண்களுக்கான 100 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தில் (25-29 வயது பிரிவில்) வெண்கலப்பதக்கம் வென்றார்.