• August 17, 2019

மழைநீர் சேகரிப்பில் சாதனை செய்யும் நிறுவனம்

தற்போது கிரண்ஃபோஸ் என்ற குழாய்கள் தயாரிக்கும் நிறுவனம் 2018-ம் ஆண்டு சேமித்த மழைநீரின் அளவு 8,00,000 லிட்டர்கள் என தெரியவந்துள்ளது . சேமிப்புக் கிணறுகள், கால்வாய்கள், மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் போன்றவற்றை அமைத்து, அவற்றை சேகரித்து வைத்ததோடு, மீதி மழைநீரை நிலத்தடி நீர் …

தன்னுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக புகாரளித்த பெண்

இலங்கையில் தலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தலைமன்னார் காவல் நிலையத்தில் பணி யாற்றும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக நேற்று மாலை மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். தன்னுடன் தவறாக நடந்து கொள்ள …

இலங்கையில் மருத்துவமனை கழிவகற்றல் குறித்து வெளியான உத்தரவு

மருத்துவமனை கழிவுகளை புதைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி கருப்பையா ஜீவராணி நேற்று உத்தரவிட்டார். அதனையடுத்து மருத்துவமனை பணிப்புறக்கனிப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இலங்கையில் மட்டு போதனா மருத்துவமனையின் கழிவுகளை புதைப்பதற்காக பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட நிலமான செங்கலடி வேப்பைவெட்டுவான் பகுதியில் ஒதுக்கப்பட்டு அங்கு …

பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள தாழிறக்கம் காரணமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் ஹட்டனிலிருந்து போடைஸ் வழியாக டயகம செல்லும் பிரதான சாலையில் அக்கரபத்தனை எல்பியன் பகுதியில் பிரதான சாலையில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக போக்குவரத்து ஒருவழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமீப காலமாக மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் …

இலங்கையில் முக்கிய பகுதியில் கைக்குண்டு மீட்பு

இலங்கையில் அம்பாறை , சம்மாந்துறை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . நேற்று மாலை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு சம்மாந்துறை பழைய திரையரங்கிற்கு அருகிலுள்ள நிலம் ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாதவர்களால் கைவிடப்பட்டிருந்த …

ஸ்ரீவில்லிபுத்தூரில் அடுத்தடுத்து 3 கார்கள் மோதி 2 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அடுத்தடுத்து 3 கார்கள் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். காரில் பயணித்த முகமது பிலால், யாசிப் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 6 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து தகவலறிந்த …

ராணுவத்தின் செயல்பாடுகள் மிகவும் திருப்திகரமாக உள்ளது – வடகொரிய அதிபர் பாராட்டு

கடும் எதிர்ப்பையும் மீறி, அமெரிக்காவும், தென் கொரியாவும் கொரிய தீபகற்பத்தில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதால், கூட்டுப் பயிற்சியை எச்சரிக்கும் விதமாக, 5 முறை ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது வடகொரியா. நேற்று புதிய ரக ஆயுதம் ஒன்றை, அதிபர் கிம் ஜாங் …

கல்லணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது!

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒருபோக சம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீர் கடைமடை வரை சென்று சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, …

காஷ்மீர் விவகாரம்: இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி தணிக்க வேண்டும் – அமெரிக்க அதிபர்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது, ‘காஷ்மீரில் இந்தியா மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தானின் கவலையை கூறினார். இந்த …

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கைவிட்டால் மட்டுமே அமைதி பேச்சுவார்த்தை நடத்த முடியும் – இந்தியா தூதர்

ஐநா பாதுகாப்பு கவுன்சில் மூடிய அறைக்குள் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு சீனா மட்டுமே ஆதரவு தெரிவித்தது. இதனால், காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச கவனம் பெற முயன்ற பாகிஸ்தானின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த …

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சிறுவன் பலி!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தொடர்ந்து பல நாட்களாக மழை பெய்து வருகின்றது. இதில், நேற்று இரவு பெய்த கனமழையில் கோயில்புறையூர் கிராமத்தில் தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சிவப்பிரகாசம் (12) உயிரிழந்தது …

பனைமரத்தின் மீது கார் மோதியதில் 3 பேர் பலி!

மன்னார்குடி அடுத்த சின்ன குடிகாடு அருகே பனைமரத்தின் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த 4 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல் துறை வழக்கு …

பணிநிரந்தரம் செய்வதாக கூறி பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன்

தற்காலிக ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதாக கூறி பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் எழுத்துபூர்வமாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் …

கன்னியாகுமரி கடலில் படகு போக்குவரத்து ரத்து – பூம்புகார் கப்பல் நிறுவனம் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களுள் ஒன்றான கன்னியாகுமரி கடலில் திருவள்ளுர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்வதற்கு சுற்றுலா படகு போக்குவரத்து நடைபெறுவது வழக்கம். ஆனால், தற்போது கன்னியாகுமரி கடலில் கடல் நீர்மட்டம் தாழ்வாக காணப்படுவதால், தற்காலிகமாக படகு போக்குவரத்தை …

வடலூரில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து!

கடலூர் மாவட்டம் வடலூரில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் பலியானார். மேலும், 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். பேராவூரணியிலிருந்து சென்னை சென்ற ஆம்னி பேருந்து கவிழ்ந்து ஹரிணி (24) என்ற பெண் உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்தவர்கள் குறிஞ்சிப்பாடி அரசு …