• August 17, 2019

மழைநீர் சேகரிப்பில் சாதனை செய்யும் நிறுவனம்

தற்போது கிரண்ஃபோஸ் என்ற குழாய்கள் தயாரிக்கும் நிறுவனம் 2018-ம் ஆண்டு சேமித்த மழைநீரின் அளவு 8,00,000 லிட்டர்கள் என தெரியவந்துள்ளது . சேமிப்புக் கிணறுகள், கால்வாய்கள், மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் போன்றவற்றை அமைத்து, அவற்றை சேகரித்து வைத்ததோடு, மீதி மழைநீரை நிலத்தடி நீர் …

தன்னுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக புகாரளித்த பெண்

இலங்கையில் தலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தலைமன்னார் காவல் நிலையத்தில் பணி யாற்றும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக நேற்று மாலை மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். தன்னுடன் தவறாக நடந்து கொள்ள …

இலங்கையில் மருத்துவமனை கழிவகற்றல் குறித்து வெளியான உத்தரவு

மருத்துவமனை கழிவுகளை புதைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி கருப்பையா ஜீவராணி நேற்று உத்தரவிட்டார். அதனையடுத்து மருத்துவமனை பணிப்புறக்கனிப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இலங்கையில் மட்டு போதனா மருத்துவமனையின் கழிவுகளை புதைப்பதற்காக பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட நிலமான செங்கலடி வேப்பைவெட்டுவான் பகுதியில் ஒதுக்கப்பட்டு அங்கு …

பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள தாழிறக்கம் காரணமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் ஹட்டனிலிருந்து போடைஸ் வழியாக டயகம செல்லும் பிரதான சாலையில் அக்கரபத்தனை எல்பியன் பகுதியில் பிரதான சாலையில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக போக்குவரத்து ஒருவழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமீப காலமாக மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் …

இலங்கையில் முக்கிய பகுதியில் கைக்குண்டு மீட்பு

இலங்கையில் அம்பாறை , சம்மாந்துறை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . நேற்று மாலை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு சம்மாந்துறை பழைய திரையரங்கிற்கு அருகிலுள்ள நிலம் ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாதவர்களால் கைவிடப்பட்டிருந்த …

விபத்துகளை தடுக்க வாகன சட்டங்களை கடுமையாக்க தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ஏற்படும் விபத்துகளை தடுக்க அரசு தற்போது வாகன சட்டங்களை கடுமையாக்கி உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 1988-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தின் 183-ம் பிரிவின்படி அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்கள் முதல் முறை செய்யும் …

மெட்ரோ ரயிலில் பயணிகள் இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தது நிறுத்தப்பட்டது

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் டிக்கெட் இயந்திர கோளாறால் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயணிகள் டிக்கெட் இல்லாமல் இலவசமாக அனுமதிக்கபட்டனர். தற்போது தானியங்கி பயணச்சீட்டு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டது. பயணச்சீட்டு இயந்திர கோளாறால் பயணிகள் இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தது …

தமிழகம் மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி, சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. …

மதுபோதையில் கார் ஓட்டி சென்று சாலையோர பனைமரத்தில் மோதியதில் 3 பேர் பலி

தஞ்சை மாவட்டம் ஆர்.சுத்திப்பட்டு கிராமத்தில் அங்களாம்மன் கோயில் திருவிழா கிடாவெட்டு திருவிழா நேற்று நடந்தது. இதற்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சீனிவாசன் மகன் கபிலன் உட்பட 7 பேர் திருவிழாவுக்கு காரில் சென்றனர். கிடாவெட்டில் சாப்பிட்டு விட்டு மீண்டும் …

அமெரிக்க பெண் எம்.பி.க்களின் இஸ்ரேல் பயணத்திற்கு தடைவிதித்தது இஸ்ரேல் அரசு!

அமெரிக்காவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.க்களான பாலஸ்தீன வம்சாவளி ரஷிடா ட்லைப் மற்றும் சோமாலியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய இல்ஹான் ஓமர் ஆகிய இருவரும் இஸ்ரேலுக்கு எதிரான இயக்கத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த சூழலில் இவர்கள் இருவரும் அடுத்தவாரம் இஸ்ரேலுக்கு …

பாலின வேறுபாட்டை காரணம் காட்டி வாய்ப்பு மறுப்பு – சிறுமி கோர்ட்டில் வழக்கு

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் புகழ்பெற்ற கதீட்ரல் இசைக்குழு இயங்கி வருகிறது. இந்த இசைக்குழுவில் சிறுமிகள் இடம்பெற்றதில்லை. சிறுவர்கள் மட்டுமே இந்த இசைக்குழுவில் பாடி வருகிறார்கள். இந்நிலையில் பெர்லினை சேர்ந்த 9 வயது சிறுமி, இந்த இசைக்குழுவில் சேருவதற்காக விண்ணப்பித்திருந்தாள். இதற்காக கடந்த மார்ச் …

கோவை மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கம் சார்பில் காஞ்சிபுரம் கலெக்டரை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

கோவை தாலுகா அலுவலகம் முன் கோவை மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கம் சார்பில் நேற்று காஞ்சிபுரம் கலெக்டரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கடந்த 9ம் தேதி காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த திருவள்ளூர் மாவட்ட இன்ஸ்பெக்டர் ரமேஷ், …

80% மேல் வருகை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு 2 அகமதிப்பீடு மதிப்பெண்கள் – தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை

தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 80 சதவீதத்திற்கு மேல் வருகை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு 2 மதிப்பெண்களும், 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வருகை தந்த மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண்ணும் …

பாதாள சாக்கடையில் அடைப்பு: சுத்தம் செய்ய வந்த நகராட்சி ஊழியர்கள் விஷ வாயு தாக்கி பலி

நாகை மாவட்டம், நாகை புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக நகராட்சிக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் நேற்று பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய 4 பேர் வந்தனர். இதில் நாகூரை சேர்ந்த மாதவன்(38), சக்திவேல்(27), வெளிப்பாளையத்தை …

நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார்!

அண்டை நாடுகளுடன் நெருங்கிய நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றுள்ளார். பிரதமர் மோடிக்கு பூடானில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பூடான் நாட்டின் பிரதமர் லோடே டெஸ்ரிங் நேரில் சென்று மோடியை வரவேற்றார். “தனது பூடான் சுற்றுப்பயணம், …