ஊரடங்கு விதிகளை மீறிய 5 கடைகளுக்கு சீல்
நீடாமங்கலம்: நீடாமங்கலம் கடைவீதிகளில் மன்னார்குடி ஆர்.டி.ஓ,புண்ணியகோட்டி தலைமையில் நீடாமங்கலம் தாசில்தார் மதியழகன், போலீசார், பேரூராட்சி அலுவலர்கள் ஊரடங்கு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.இதில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 5 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். தொடர்ந்து ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
Read More