சப்போட்டா தரும் சப்போட்டான நன்மைகள்

கூர்மையான கண் பார்வைக்கு சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வயது முதிர்ந்த காலத்திலும் நல்ல கண் பார்வையை பெறலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ சத்தானது நம் கண்களை ஆரோக்கியமாக வைப்பதோடு கண்பார்வையை குறையாமல் பார்த்துக் கொள்கிறது. ஆரோக்கியமான எலும்புகள் பெற கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் இந்த சப்போட்டாவில் அதிக அளவு உள்ளது. சத்துக்களின் குறைபாட்டின் காரணமாக நம் எலும்புகளானது ஆற்றலை இழக்கின்றது.

Read More

கொசுக்கடிக்கு தீர்வு என்ன தெரியுமா?

இயற்கையான முறையில் கொசுக் கடியை எதிர்கொள்ள சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பயன்பெறுங்கள். ஐஸ் கட்டி எதிர்பாராத விதமாக, அரிப்பினை போக்க, மற்றும் வீக்கத்தை தடுக்க, குளிர்நிலை சிகிச்சை கை கொடுக்கின்றது. ஒரு துண்டு ஐஸ்கட்டியை எடுத்து ஒரு காகிதத்தில் மடித்து, கொசு கடித்த இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் வீக்கமும் வற்றி, எரிச்சலும் குறையும். லாவெண்டர் எண்ணெய் லாவெண்டர் எண்ணெயும் இதற்கு பயன்படுத்தலாம். மற்ற ஆவியாகும் எண்ணெய்களை விட லாவெண்டர் எண்ணெய்க்கு தகுதிகள் அதிகமாக இருக்கிறது. அதை எப்படியும் …

Read More

கற்றாழையின் பயன்கள்

உலர் சருமத்திற்கு: உலர் மற்றும் மங்கலான சருமத்தை மென்மையான சருமமாக மாற்ற, கற்றாழை, தேன் மற்றும் வெள்ளரி கொண்ட பேஸ் மாஸ்கை தயார் செய்யவும். இந்த மூன்று பொருட்களுமே நீர்த்தன்மை அளிக்க கூடியவை. இவற்றை பயன்படுத்தும் போது, சருமம் மென்மையாகி பொலிவு பெறுகிறது. ஒரு வெள்ளரி, ஒரு ஸ்பூன் தேன் மற்றும் கொஞ்சம் கற்றாழையை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை பூசிக்கொண்டு 20 நிமிடம் விட்டு பின்னர் கழுவிக்கொள்ளவும்.

Read More

மொறு மொறு கட்லட்ஸ்

தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 3 மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி கரம் மசாலா – 1 தேக்கரண்டி முட்டை – 2 பிரட் துண்டுகள் – 2 அல்லது 3 உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு தாளிக்க – எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி பெரிய வெங்காயம் – 1 செய்முறை: குக்கரில் உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும். நன்கு ஆறிய பின் தோலுரித்து மசித்து வைக்கவும். …

Read More

லாக்டவுனில் நடிகர் சாந்தனுவுக்கு வாய்ப்பு கொடுத்த கவுதம் மேனன்

காதல் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் கவுதம் மேனன். மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க, வாரணம் ஆயிரம் என பல்வேறு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ எனும் குறும்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இந்நிலையில், கவுதம் மேனன் இயக்கத்தில் ‘ஒரு சான்ஸ் குடு’ எனும் வீடியோ பாடல் உருவாகி உள்ளது. இதில் சாந்தனு, மேகா ஆகாஷ், கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர். மதன் கார்க்கியின் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு கார்த்திக் இசையமைத்துள்ளார். இப்பாடலை கவுதம் மேனன் தனது சொந்த …

Read More

மீண்டும் பிரபல இயக்குநருடன் இணையும் நடிகர் தனுஷ்

தமிழ் திரையுலகில் பிஸியான நடிகராக வலம்வருகிறார் தனுஷ்.  இவர் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் லாக்டவுனுக்கு பின் ரிலீசாக உள்ளது. இதனைத்தொடர்ந்து பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ், இயக்கும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பின்னர் கார்த்திக் நரேன் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தனுஷ் நடிக்கும் 43-வது படமாகும். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க …

Read More

கொரோனா வைரஸ் பாதிப்பு : மராட்டியத்தில் பாதிப்பு எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது

மும்பை, இநதியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. இங்கு நோய் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. தலைநகர் மும்பையிலும் நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் உயிரிழப்புகளும் கூடி கொண்டே வருகிறது. இந்நிலையில் மராட்டியத்தில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 139 பேர் உயிரிழந்தனர். மராட்டியத்தில் ஒரே நாளில் 2,436 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு 80,229 ஆக உயர்ந்தது. இதுவரை 2,849 பேர் …

Read More

ட்ரம்ப் வெளியிட்ட வீடியோவை நீக்கிய ட்விட்டர் நிர்வாகம்

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட ஜார்ஜ் புளாயிட் குறித்த வீடியோவை ட்விட்டர் வலைதளம் காப்புரிமை சட்டப்படி நீக்கி உள்ளது. இந்த வீடியோவில் ஜார்ஜ் புளாயிட் படுகொலையை அடுத்து நடந்த போராட்டங்கள், நிகழ்வுகள் உள்ளிட்டவை தொகுக்கப்பட்டன. மூன்றரை நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவுக்கு டிரம்ப் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். இந்த வீடியோ ஏற்கனவே மற்றொருவரால் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது ஆகும். எனவே அவர் காப்புரிமைச் சட்டப்படி கோரியதால் இந்த வீடியோ டிரம்பின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து அந்த பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.

Read More

திருப்பதி கோவிலில் ஜூன் 10 முதல் பக்தர்களுக்கு அனுமதி

மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்படி வரும் ஜூன் 8ம் தேதி முதல் ஏழுமலையான் தரிசனம் திருமலையில் தொடங்கப்பட உள்ளது. ஜூன் 8 மற்றும் 9 தேதிகளில் தேவஸ்தான ஊழியர்களும், ஜூன் 10ம் தேதி திருமலையில் வசிக்கும் உள்ளூர் வாசிகளுக்கும் தரிசன அனுமதி வழங்கப்பட உள்ளது. அதன்பின் ஜூன் 11ம் தேதி முதல் இதர மாநிலங்களிலிருந்து வரும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் தொடங்கப்பட உள்ளது. திருமலையில் தினசரி 6 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. காலை 6.30 மணிமுதல் மாலை 7 …

Read More

மராட்டியத்தில் புயல் பாதித்த இடங்களை பார்வையிட்ட முதல்வர் உத்தவ் தாக்ரே

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இன்று ராய்காட் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார். மேலும் ராய்காட் பகுதியில் புயல் சேதங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அவர், இந்த புயலுக்கு அவசர நிவாரண நிதியாக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். புயல் சேதங்களை பார்வையிட்ட முதல்-மந்திரியுடன், மந்திரிகள் ஆதித்யா தாக்கரே, அஸ்லம் ஷேக் மற்றும் பலர் உடன் இருந்தனர். முன்னதாக, விவசாயிகளுக்கும், கிராம மக்களுக்கும் விரைவான உதவி வழங்கப்படுவதை உறுதி செய்ய, இரண்டு நாட்களுக்குள் புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அறிக்கை …

Read More
error: Content is protected !!