செப்பு பாத்திரத்தை பயனபடுத்தினால் என்ன நன்மை?

செப்பு உலோகத்திற்கு கொழுப்பை கட்டுப்படுத்தும் தன்மையும் உண்டு. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் அதனை பயன்படுத்தலாம். அதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் சருமத்திற்கும் நலம் சேர்க்கும். முதிய தோற்றம் ஏற்படுவதை தடுக்கவும் உதவும். ஸ்டீல் பாத்திரங்களைவிட செப்பு பாத்திரங்கள் 20 மடங்கு நமக்கு வெப்பத்தை கடத்தும் தன்மை கொண்டது. சீரான வெப்பநிலையை கடத்தி உணவை சமைக்க வைக்கவும் உதவும். தீங்குவிளைவிக்கும் நுண்ணுயிரிகள், பாக்டீரியாக்களால் செப்பு பாத்திரங்களில் உயிர்வாழ முடியாது என்பதால் உணவில் இருந்து கிருமிகள் பரவுவதையும் தடுக்கிறது. செப்பு பாத்திரங்களை சமைப்பதற்கும், சாப்பிடுவதற்கும் …

Read More

கொசுக்கடியில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

கொசுக்கடிக்கு வெள்ளரிக்காயையும் உபயோகப்படுத்தலாம். அதற்கும் சரும அரிப்பை போக்கும் தன்மை உண்டு. வாழைப்பழ தோல் மசியலுடன் சிறிதளவு வெள்ளரிக்காயையும் மசித்து அதனை கொசு கடித்த இடத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். பின்பு அதனை துடைக்கக்கூடாது. வாழைப்பழத்தோலுடன் கிளிசரினையும் பயன்படுத்தலாம். வாழைப்பழ தோல் மசியலுடன் சில துளி கிளிசரின் சேர்த்து கொசு கடித்த இடத்தில் பூசி அரை மணி நேரம் வரை உலர வைத்துவிட்டு குளிர்ந்த நீரில் கழுவவும்.  

Read More

வாய் நாற்றத்தை போக்க இயற்கை வழி

பெரும்பாலும் ‘ஸ்கேலிங்’ முறையில் பற்களை சுத்தம் செய்து கொண்டாலே வாய் நாற்றம் சரியாகிவிடும். இது தவிர, பற்களில் வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அவற்றுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அடுத்து, பொது மருத்துவர் மற்றும் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர் உதவியுடன் சைனஸ் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன், மார்பு எக்ஸ்ரே, எண்டாஸ்கோபி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இவற்றால் மற்ற காரணங்களைக் கண்டறிந்து, அவற்றையும் களைந்துவிட்டால் வாய் நாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். வாய் நாற்றத்தை தடுக்க விரும்புவோர், வாயை சுத்தமாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் …

Read More

சூர்யாவுடன் இணையும் ரம்யா பாண்டியன்

ராஜூ முருகன் இயக்கத்தில் தேசியவிருது வாங்கிய ‘ஜோக்கர்’, சமுத்திரக்கனி நடித்த ‘ஆண் தேவதை’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர், ரம்யா பாண்டியன். இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் வந்தும், தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில்  கவனம் செலுத்தி வந்தார். அதன்முலம் அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ரம்யா பாண்டியன், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்திலும், சி.வி.குமார் …

Read More

விஷ்னு விஷாலுடன் காதலை உறுதி செய்த பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் விஷ்ணு விஷால் அதன்பிறகு, ஜீவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ரஜினி நட்ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷ்ணுவிஷால் கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்து விட்டார். இதனை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவும் விஷ்ணு விஷாலும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இருவரும் அதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்த நிலையில், ஜுவாலா கட்டா சமீபத்திய பேட்டியில் தனது …

Read More

தெலுங்கு படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி : வைரலாகும் சிறப்பு தோற்றம்

தமிழ் சினிமாவில் தனது கடினமான உழைப்பின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தவர்  நடிகர் விஜய் சேதுபதி. இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும், சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. அதனைத் தொடர்ந்து சீதக்காதியில் வயதானவராக வந்த விஜய் சேதுபதி, விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட படங்களில் வில்லன் வேடம் ஏற்றார். இந்த படங்களுக்கு பிறகு அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவிகின்றன.  இந்நிலையில், தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக வரும் விஜய் சேதுபதி, அடுத்து பிச்சிபாபு சனா …

Read More

சூர்யாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் நடிகை பூஜா ஹெக்டே

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள படம் சூரரை போற்று. இந்த படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில், சூர்யா அடுத்தபடியாக   ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் துவங்கும் என அறிவிக்கப்பட்டது.  ஆனால் அது தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தடைபட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஹரி தற்போது இந்த படத்திற்கான நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் பணிகளில் பிசியாக இருக்கிறார். இதனிடையே அருவா படத்தில்  சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே …

Read More

போதை பழக்கத்திற்கு அடிமையான கங்கனா ரணாவத் : அதிலிருந்து மீண்டது குறித்து சுவாரஸ்ய தகவல்

தாம்தூம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரபல இந்தி நடிகையான கங்கனா ரணாவத், தற்போது ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார். வீடியோ ஒன்றில் இளமை கால வாழ்க்கையை நினைவு கூர்ந்து பேசிய அவர் கூறுகையில், “எனக்கு 15 அல்லது 16 வயது இருக்கும்போது சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். அதன்பிறகு எனக்கு போதை பழக்கம் ஏற்பட்டது. ஒன்றரை ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை போதைக்கு அடிமையாக இருந்தேன். சில வகையான மனிதர்கள் வந்தனர். அவர்களிடம் இருந்து மரணத்தால் மட்டுமே என்னை …

Read More

ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய் நடிகர் சாய்தீனா

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், உலகம் முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நோயை கட்டுப்படுத்த மனிதர்கள் அனைவரும் வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறார்கள். கொரோனாவிற்காக தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும் இந்த கால கட்டம், ஒரு வகையில் வெகு மோசமான பொருளாதார வீழ்ச்சியையும் ஏழைகளை பாதிப்பதாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில், எளியவர்கள் பலருக்கு வெளியில் நடமாட முடியாத சூழல் இருப்பதால்,  பெருமளவு ஏழைகள் உணவிற்கே திண்டாடும் நிலையும் உருவாகியுள்ளது. இதற்கு  பிரபலங்கள் சிலர் தங்களால்  முடிந்த அளவிற்கு பொது மக்களுக்கு உதவி …

Read More

5-வது பரிசோதனையிலும் கொரோனா உறுதி : பாடகி கனிகாவின் உடல்நிலையில் முன்னேற்றம்

லண்டனுக்கு சென்றுவிட்டு இந்தியா திரும்பிய பிரபல இந்தி திரைப்பட பாடகி கனிகா கபூர்,  வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனையடுத்து அவருக்கு உடல் நிலை குன்றியதால் மருத்துவமனையில் பரிசோதித்தபோது கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறார்கள். மேலும் கனிகாவை கைது செய்ய வேண்டும் என்றும் சிலர் வற்புறுத்தினர். கொரோனா நோயாளிகளுக்கு 48 மணி …

Read More