ரத்த கிருமிகளை கொல்லும் கொய்யாக்காய்

சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் …சி† உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.

Read More

கொரோனா வைரஸ் பாதிப்பு : உலகநாடுகள் வரிசையில் பாகிஸ்தானுக்கு 12-வது இடம்

இஸ்லாமாபாத்: சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்டு தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது.  பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.50 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,51,695 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் நேற்று மேலும் 2 ஆயிரத்து 753 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்துள்ளதால், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,266 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 1.61 லட்சத்துக்கும் …

Read More

விசாகப்பட்டினம் மருந்து கம்பெனியில் திடீர் தீ விபத்து

அமராவதி, ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் மருந்து கம்பெனியில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் ஏற்பட்ட வெடிச்சப்தங்கள் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில்,  தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த  9 வீரர்கள் வெகு நேரம் போராடி தீயை அணைத்து வருகின்றன. மேலும் தீயணைப்பு வாகனங்களில், அப்பகுதியில் சுற்றி இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். அவை வெகு நேரம் இந்த தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் காயம் அடைந்தார். அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தீ விபத்துக்கான …

Read More

ராணுவ வீரர்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்த அனுமதி கோரி மனுதாக்கல்

புதுடெல்லி, ராணுவ வீரர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்த அனுமதி கோரி, காஷ்மீரில் பணிபுரியும் ராணுவ அதிகாரி பி.கே.சவுத்ரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ராணுவ வீரர்கள் குடும்பத்தைப் பிரிந்து தொலைதூரத்தில் கஷ்டமான வானிலை, கடினமான நிலப்பரப்பில் பணியாற்றுகிறார்கள். இந்த சூழலில் தங்கள் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த சமூக வலைத்தளங்கள் குடும்ப இடைவெளியை ஈடுசெய்கிறது. எனவே ராணுவ வீரர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை …

Read More

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது

ஜெனீவா, சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுது்தலை ஏற்படுத்தி வருகிறது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5.75 லட்சத்தை நெருங்குகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.32 கோடியை தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோரின் …

Read More

கொரோனா பாதிப்பிற்கு சென்னையில் எஸ்.ஐ பலி

சென்னை: காவல்துறையின் நவீன கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் எஸ்.ஐ. குருமூர்த்தி (55) மதுராந்தகத்தை சேர்ந்த இவர் சென்னை மேற்கு தாம்பரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். அயல்பணியாக மீனம்பாக்கம் காவல்நிலைய ரோந்து பணி பொறுப்பாளராக இருந்த இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த எஸ்.ஐ. குருமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மரணத்தை தொடர்ந்து சென்னை காவல்துறையில் போலீசார் உயிரிழப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.

Read More

தன்னை ஆதரிக்கும் எம்எல்ஏக்களுடன் வீடியோ வெளியிட்ட சச்சின் பைலட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசின் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட்டுக்கு இடையே நீண்ட காலமாக அதிகார மோதல் இருந்து வருகிறது. இந்த மோதல் தற்போது பகிரங்கமாக வெடித்ததுள்ளது. இதன் தொடர்ச்சியாக தனக்கு 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் நேற்று முன்தினம் சச்சின் பைலட் அறிவித்தார். இந்த பரபரப்பான சூழலில் கட்சியின் சட்டசபைக்குழு கூட்டம் நேற்று முதல்வர் அசோக் கெலாட் வீட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் சச்சின் பைலட்டும், …

Read More

அமெரிக்க போர் கப்பலில் திடீர் தீ : 17 மாலுமிகள் உட்பட 21 பேர் படுகாயம்

வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாண்டியாகோ நகரில் அந்த நாட்டின் மிகப்பெரிய 2-வது கடற்படைத் தளம் உள்ளது. இங்கு அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஏராளமான போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 1,000 மாலுமிகள் வரை தாங்கும் திறன் கொண்ட அந்தக் கப்பலில் 160 மாலுமிகள் வழக்கமான பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக கப்பலின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கப்பல் முழுவதிலும் பரவியது. இதனால் கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்குமாக …

Read More

ஹாலிவுட் நடிகை கெல்லி பிரஸ்டன் மரணம்

நியூயார்க், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை கெல்லி பிரஸ்டன். டுவின்ஸ், ஜெர்ரி மாகுவேர் மற்றும் தி கேட் இன் தி ஹேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர் கடந்த சில ஆண்டுகளாக மார்பக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று கெல்லி பிரஸ்டன் உயிரிழந்தார். அவருக்கு வயது 57. இவரது கணவர் ஜான் டிராவோல்டாவும் பிரபல ஹாலிவுட் நடிகர் ஆவார்.

Read More

மாலி அதிபருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை : 11 பேர் பலியானதாக தகவல்

பமாகோ, மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் வடக்கு பகுதிகளை கடந்த  2012-ம் ஆண்டு துவாரெக் பயங்கரவாதிகள் ஆக்கிரமித்தனர். இதனால் மாலியில் தற்போதுவரை அமைதியற்ற சூழல் நிலவி வரும் நிலையில், பொருளாதார சரிவும் ஏற்பட்டது. பயங்கரவாதிகள் தாக்குதல், மற்றும் பொருளாதார வீழ்ச்சியை காரணம் காட்டி அந்த நாட்டின் அதிபர் இப்ராஹிம் பவ்பக்கர் கெய்தாவுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் அமைதியாக நடந்த இந்த போராட்டத்தில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தலைநகர் பமாகோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே …

Read More