மாநில எல்லைகளில் தொடர்ந்து தீவிர கண்கானிப்பு : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை, இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வெகுவாக அதிகரித்து வரும் நிலையில். வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை 151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், டெல்லியில் இருந்து சென்னை வந்த வடமாநிலத்தை சேர்ந்த 20 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த இளைஞர் யாருடன் தொடர்பில் இருந்தார் என கண்டறிய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை ராஜீவ் …

Read More

சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் : மெரினா கடற்கரையை மேம்படுத்த சிறப்பு திட்டம்

சென்னை மாநகராட்சிக்கு 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், மெரினா கடற்கரையை மேம்படுத்த சிறப்பு திட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில் வருவாய் வரவு ரூ.3 ஆயிரத்து 81 கோடியே 21 லட்சம் ஆகவும், வருவாய் செலவு ரூ.3 ஆயிரத்து 815 கோடியே 7 லட்சம் ஆகவும் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. பற்றாக்குறை ரூ.733.86 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்ஜெட்டில், புதிய பாலங்கள் கட்டுமான பணிகள் மற்றும் பாலங்கள் விரிவுபடுத்தும் பணிக்கு ரூ.512 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் புதிய தெரு …

Read More

கொரோனா வைரஸ் பாதிப்பில் 100 %-க்கு 97% பேர் குணமடைந்து விடுவார்கள் : ஆய்வு முடிவில் தெரிவித்த விஞ்ஞானி

சென்னை, சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துளளது. இந்நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 100 சதவீதம் நோயாளிகளில் 97 சதவீதம் மக்கள் குணமடைந்து விடுவார்கள் என கொரோனா வைரஸ் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர் பவித்ரா வெங்கடகோபாலன் தெரிவித்துள்ளார். இது குறித்து முனைவர். பவித்ரா வெங்கடகோபாலன் கூறுகையில், இயற்கையால் படைக்கப்பட்ட ஒரு பயங்கரமான வைரஸை விட செயற்கையான பயங்கரமான வைரஸை இதுவரை யாரும் உருவாக்கியது இல்லை, அதனால் இது …

Read More

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : முன்பதிவு இல்லாததால் ரயில்கள் ரத்து

சென்னை, சீனாவின் உகான் மாகாணத்தில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து ரயில் நிலையங்கள், பூங்காக்கள், கோவில்கள் போன்றவற்றில் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா அச்சம் காரணமாக மக்கள் தங்களது பயணங்களை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் போதிய முன்பதிவு இல்லாததால் …

Read More

விஜய் ஒரு மகா நடிகன் – ரமேஷ் திலக்

கைதி பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர். பிரபல நடிகரான ரமேஷ் திலக் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு, மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு குறித்து பேசியுள்ளார். அந்த பேட்டியில் “விஜய் ஒரு நடிகராக உங்களை இப்படி கவர்ந்தார்” என கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு “ஒரு நாள் படப்பிடிப்பின்போது விஜய் ஒரு காட்சியில் நடித்தார், அந்த காட்சி எடுத்து முடித்தவுடன் ஒட்டுமொத்த படகுழுவினரும் வியந்து சுமார் 10 நிமிடம் …

Read More

நான் ஒருவரை காதலித்தேன் ஆனால் யார் என்று சொல்லமாட்டேன் – அனுஷ்கா

நடிகை அனுஷ்கா தன் வாழ்வில் காதல் செய்ததை பற்றி அண்மையில் ஒரு ஆங்கில ஊடக்த்தின் பேட்டியில் பேசியுள்ளார். இதில் அவர் 2008 ம் ஆண்டில் நான் ஒருவரை காதலித்தேன். அந்த உறவு அருமையானது. எனக்கு அது மிகவும் ஸ்பெஷலானது என்பதால் அவர் யார் என கூறமாட்டேன். நாங்கள் காதலர்களாக இருந்திருந்தால் அந்த அடையாளத்தை வெளிப்படுத்தியிருப்பேன். ஆனால் பிரிந்துவிட்டோம். அது அந்த எனக்கு மரியாதையான உறவு என கூறியுள்ளார். காதல் உறவை யாராலும் மறைக்க முடியாது.

Read More

தாக்குதலை தொடரும் கொரோனா : இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 147-ஆக உயர்வு

புதுடெல்லி, சீனாவின் உகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பெரும் பாதப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி இந்தியாவில், 25 வெளிநாட்டவர்கள் உள்பட 147 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Read More

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : சென்னை தியாகராயநகரில் கடைகள் அடைப்பு

சென்னை, இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் சென்னை தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு  மாநகராட்சி சார்பில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் கடைகள் மற்றும் மால்களை முன்னெச்சரிக்கையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது

Read More

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

சென்னை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.72.28 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.65.71ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Read More

மாநிலங்களவை எம்பி தேர்தல் : அதிமுக திமுக வேட்பாளர்கள போட்டியின்றி தேர்வு

சென்னை, தமிழகத்தின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி இடங்கள் அடுத்த மாதம் (ஏப்ரல்) காலியாகின்றன. அந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான வேட்புமனு கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.  அதிமுக சார்பில் அதிமுக வேட்பாளர்களாக கே.பி.முனுசாமி, தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சியான தமாகா சார்பில் அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கடந்த 12ம் தேதி மனு தாக்கல் செய்தனர். …

Read More