17 ஆண்டுகளுக்கு பின் மரண தண்டனை பெற்ற கொலை குற்றவாளி : அமெரிக்காவில் விச்சித்திரம்

நியூயார்க்: அமெரிக்காவின் ஒக்லஹோமாவை மாகாணத்தை சேர்ந்தவர் டேனியல் லீ (47). இவர் கடந்த 1999ம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 3 பேரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டார். அமெரிக்காவில், 17 ஆண்டுகளுக்குப் பின், ஒரு குற்றவாளிக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும் இந்நிலையில், லீக்கு, விஷ ஊசி செலுத்தி, தண்டனையை நிறைவேற்ற, நேற்று நாள் குறிக்கப்ட்ட நிலையில், ‘கொரோனா’ வைரஸ் அச்சத்தால், லீயால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தண்டனையை நிறைவேற்றுவதை நேரில் பார்க்க வர முடியாது …

Read More

கொரோனா தடுப்பூசியின் 2-ம் கட்ட பரிசோதனை அறிவிப்பை வெளியிட்ட ரஷியா

மாஸ்கோ: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி உலகின் பல நாடுகளில் நடந்து வருகிறது. இதற்கிடையே, ரஷியாவில் உள்ள கேமலயா தொற்றுநோய் மற்றும் நுண்உயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாகவும், கடந்த மாதம் 18-ந் தேதி, மனிதர்களிடம் முதல்கட்ட பரிசோதனை நடத்தியது. அச்சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக தெரிவித்தது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசியின் 2-ம் கட்ட பரிசோதனை குறித்து அந்நிறுவனத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் கூறுகையில், தடுப்பூசியின் திறனை உறுதி செய்வதற்காக, …

Read More

கொரோனா வைரஸ் பாதிப்பு : உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 5.75 லட்சத்தை கடந்தது

லண்டன் சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் 13,235,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,696,381 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 58,928 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.75 லட்சத்தை தாண்டியது. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 34,79,483ஆக உயர்ந்து உள்ளது.  உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,38,247ஆக உயர்ந்து உள்ளது.

Read More

கொரோனா பாதிப்பு குறித்து விசாரிக்க சீனா சென்ற உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள்

பீஜிங், சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் குவா சுன்யிங் கூறுகையில், உலக சுகாதார நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, கொரோனா தோற்றம் குறித்த ஆராய்ச்சியில் அறிவியல் அடிப்படையிலான ஒத்துழைப்புக்காக அந்த நிறுவனம் நிபுணர்களை அனுப்பி வைக்க சீனா ஒப்புக்கொண்டது. கொரோனா தோற்றத்தை கண்டுபிடிப்பது, அறிவியல் பிரச்சினை. அதை விஞ்ஞானிகள்தான் சர்வதேச ஒத்துழைப்புடன் ஆய்வு செய்ய வேண்டு்ம் என்று இருதரப்புக்கிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. இதுபோல், மற்ற நாடுகளுக்கும் உலக சுகாதார நிறுவனம் நிபுணர்களை அனுப்பி வைக்கும் என தெரிவித்துள்ளார்.  

Read More

இந்திய வரலாற்றில் முதல் முறை : சுதந்திர தின நிகழ்ச்சிக்கு 100 பேர் மட்டுமே அனுமதி

புதுடெல்லி, நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில் இந்த வருடம் நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்ச்சியில், பிரதமர் உரையாற்றுவதும், பல முக்கிய பிரமுகர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பங்கேற்பதும் கடந்த வருடம் வரை நடந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்த ஆண்டு குழந்தைகள் பங்கேற்க அனுமதி …

Read More

இந்தியாவில் 10 மாநிலங்களில் 80 சதவீதம் கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியாவில் 10 மாநிலங்களில் இருந்துதான் 80% கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்புகளில் 50 %க்கும் மேல் மராட்டியம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில்தான் உள்ளது. எஞ்சிய 36 சதவிகிதம் 8 மாநிலங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறையின் சிறப்பு அதிகாரி ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், சராசரியாக 10 லட்சம் பேரில் 140 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய பரிசோதனை என …

Read More

அலக்கழித்த மருத்துவமனைககள் : பரிதாபமாக பலியான வாலிபர்

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் இச்சாபூர் பகுதியில் 18 வயது வாலிபர் ஒருவருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது.  இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள், அந்நகரின் பல்வேறு மருத்துவமனைகளுக்கும் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால், 4 மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என கூறி அலைக்கழிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஒரு மருத்துவமனையில், வாலிபருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என 5 நிமிடங்களில் கையால் எழுதிய சீட்டு ஒன்றை கொடுத்துள்ளனர். மேலும் இதற்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதி இல்லை …

Read More

திருச்சி வழியே செல்லும் 2 சிறப்பு ரெயில்கள் வரும் தற்காலிக ரத்து

புதுடெல்லி, தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில், அனைத்து வகையான ரெயில் சேவையும் முற்றிலும் நிறுத்தப்பட்டன. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சரக்கு ரயில்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், மதுரை-விழுப்புரம்-மதுரை சூப்பர்பாஸ்ட் இன்டர்சிட்டி சிறப்பு ரெயில் (தினமும்) மற்றும் திருச்சி-நாகர்கோவில்-திருச்சி சூப்பர்பாஸ்ட் இன்டர்சிட்டி சிறப்பு ரெயில் (தினமும்) ஆகிய இரு சிறப்பு ரெயில்களும், கடந்த ஜூன் 1ந்தேதியில் இருந்து திருச்சி வழியே இயக்கப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்புகளை தவிர்ப்பதற்காக மதுரை-விழுப்புரம்-மதுரை சூப்பர்பாஸ்ட் இன்டர்சிட்டி சிறப்பு ரெயில் (தினமும்) மற்றும் திருச்சி-நாகர்கோவில்-திருச்சி சூப்பர்பாஸ்ட் இன்டர்சிட்டி …

Read More

ஆன்லைன் வகுப்புக்களுக்கான நெறிமுறைகளை அறிவித்த மத்திய அரசு

புதுடெல்லி, இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு வரும் நிலையில் இந்த வைரஸ் பாதிப்பை தடுக்க கடந்த மார்ச் 25 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக  பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில்,  ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை  மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, * எல்கேஜி, யூகேஜி குழந்தைகளுக்கு 30 நிமிடங்களுக்கு மேல் வகுப்பு நடத்தக் கூடாது * 1 – 8 ம் வகுப்பு …

Read More

தமிழகத்தில் பாரசிட்டமால் மாத்திரைகளை வழங்க தடையில்லை : தமிழக அரசு விளக்கம்

மதுரை, தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மருந்தகங்களில், மருத்துவர் பரிந்துரையின்றி பாரசிட்டமால் மாத்திரைகளை வழங்கக் கூடாது என்று தமிழக அரசு வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், எவ்வித தட்டுப்பாடும் இன்றி பாரசிட்டமால் மருந்துகள் கிடைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜோயல் சுகுமார் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரானையின் போது, பாராசிட்டமால் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் அளிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று தமிழக அரசு …

Read More