ராமர் கோவில் அடிக்கல்நாட்டு விழா : அயோத்தி முழுவதும் அகல் விளக்கேற்றி கொண்டாட்டம்

அயோத்தி, அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்த விழாவில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார். ராமர் கோவில் பூமி பூஜை நாளை நடைபெற இருப்பதால் அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில், இன்று அயோத்தி நகர் உட்பட மாநிலம் முழுதும் உள்ள மக்கள் லட்சக்கணக்கான அகல் விளக்குகளை ஏற்றினர். விளக்குகளில் இருந்து வெளிப்பட்ட தீப ஒளியில் அயோத்தி நகரம் முழுவதும் ஜொலித்தது.

Read More

அயோத்தி ராமர் கோவில் எப்படி இருக்கும்? மாதிரி புகைப்படங்கள் வெளியீடு

அயோத்தி, ராமபிரான் பிறந்த இடமான உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இந்நிலையில்  ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் எப்படியிருக்கும் என்கிற மாதிரி புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த மாதிரி புகைப்படத்தில், கோவிலின் உச்சியில் காவிக்கொடி பறக்க, அழகான கட்டமைப்புகளுடன் ராமர் கோயில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Read More

டெல்லியில் இன்று மேலும் 674 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, இந்தியாவில் அதிக கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் உள்ள டெல்லியில்  இன்று மேலும் 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,39,156 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,033 ஆக உயர்ந்துள்ளது. இன்று 972 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Read More

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

புதுடெல்லி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்  ஐஏஎஸ் ஐபிஎஸ் உள்பட 829 இடங்களுக்கு  சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் நேர்காணல்  நடைபெற்றது. இதன் முடிவுகளை யுபிஎஸ்சி இன்று வெளியிட்டது. இந்நிலையில் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில், சிவில் சர்வீசஸ் தேர்வை வெற்றிகரமாக முடித்த இளைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், பொது சேவையின் உற்சாகமான மற்றும் திருப்திகரமான …

Read More

மத்திய பெட்ரோலிய துறை அமைக்கருக்கு கொரோனா தொற்று

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அரசியல் பிரபலங்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான், கர்நாடக முதல்-மந்திரி எடியுரப்பா மற்றும் முன்னாள் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித்துக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, தற்போது மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் …

Read More

மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் 7760 பேருக்கு கொரோனா தொற்று

பெங்களூரு, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதிக்கபட்ட மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மராட்டிய மாநிலத்தில், இன்று மேலும் 7,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,57,956 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 300 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,142 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 12,326 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு …

Read More

குஜராத்தில் இன்று ஒரே நாளில் 1020 பேருக்கு கொரோனா பாதிப்பு

குஜராத், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், குஜராத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வகையில் குஜராத்தில் இன்று மேலும் 1,020 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 65,704 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளிரல் கொரோனா பாதிப்பால் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,534 ஆக அதிகரித்துள்ளது. குஜராத் முழுவதும் இன்று ஒரேநாளில் 898 …

Read More

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் : 12 அரசுப்படையினர் படுகொலை

டமாஸ்கஸ்: சிரியாவில் ரஷியா ஆதரவு பெற்ற அரசுப்படைக்கும், துருக்கி ஆதரவு பெற்ற  கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு பொர் நடைபெற்று வருகிறது. இதனால் அரசு ஆதரவு படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் லடஹியா மாகாணத்தில் நேற்று அரசு ஆதரவு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், அரசு ஆதரவு படையினர் 12 பேர், மற்றும் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் என மொத்தம் 18 பேர் உயிரிழந்தனர். மேலும், இரு தரப்பிலும் 20-க்கும் அதிகமானோர் …

Read More

உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.84 கோடியாக அதிகரிப்பு

ஜெனீவா, சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், உலக அளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  1.84 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  6.96 லட்சமாக  உள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் …

Read More

இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறை : சுகாதார அமைச்சரை மாற்றிய பாகிஸ்தான்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் விவகாரத்தில் பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகம் சரியாக செயல்படவில்லை என கடும் விமர்சனம் எழுந்ததை தொர்ந்து, சுகாதாரத்துறை மந்திரியாக இருந்து வந்த ஜாபர் மிர்சா கடந்த புதன்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து டாக்டர் பைசல் சுல்தான் என்பவரை பிரதமர் இம்ரான்கான் பாகிஸ்தானின் புதிய சுகாதாரத்துறை மந்திரியாக நியமித்துள்ளார். பாகிஸ்தானில் 2 ஆண்டுகளில் 3-வது …

Read More