Raja Viscom – Page 1631 – Dinaseithigal

சென்னையில் இருந்து கோவை சென்ற சிறுமி உட்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு

கோவை, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த 10 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனையடுத்து, அந்த சிறுமி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதேபோன்று சென்னையில் இருந்து கோவை வந்த பயணிகள் மூலமாக மூன்று பெண்களுக்கும், விழுப்புரத்தில் இருந்து கோவை வந்தவர் மூலமாக ஒரு பெண்ணுக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.  இதனால் கோவையில் ஒரே நாளில் சிறுமி உள்பட 5 பேருக்கு கொரோனா …

Read More

டிக்டாக் செய்வதற்காக மீனை விழுங்கிய வாலிபர் பலி

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காளேகுண்டா அருகில் உள்ள பார்வதி நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் வெற்றிவேல் (22). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்த இவருக்கு, திருமணமாகி 2 வயதில் சரண் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வெற்றிவேல், தனது நண்பர்கள் 2 பேருடன் ஓசூர் தேர்பேட்டை பகுதியில் உள்ள ஏரிக்கு மீன் பிடிக்க சென்றார். அப்போது மது அருந்தியிருந்த அவர், மீன் பிடித்துக்கொண்டிருக்கும் போது, செல்போனில் ‘டிக்-டாக்’ வீடியோ வெளியிடுவதற்காக மீனை உயிருடன் விழுங்கியுள்ளார். அப்போது …

Read More

கொரோனா வைரஸ் அதிக பாதிப்பு : 4-வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா

புதுடெல்லி கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி 2,93,754 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மே 24  அன்று பட்டியலில் 10  இடத்தில் இருந்த இந்தியாவில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது. நான்காவது இடத்தை அடைய 18 நாட்கள் மட்டுமே ஆகி உள்ளது. ஜூன் 1 முதல் ஊரடங்கு …

Read More

ஜூன் 12 : இன்றைய தினத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

1381 – உழவர் கிளர்ச்சி: இங்கிலாந்தில் கிளர்ச்சியாளர்கள் இலண்டன் வந்து சேர்ந்தனர். 1429 – நூறாண்டுப் போர்: ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில்  பிரெஞ்சு இராணுவம்  ஆங்கிலேயர்களிடம் இருந்து ஜார்கூ என்ற இடத்தைக் கைப்பற்றினர். 1550 – பின்லாந்தில் எல்சிங்கி நகரம் (அப்போது சுவீடனில் இருந்தது) அமைக்கப்பட்டது. 1772 – நியூசிலாந்தில் பிரெஞ்சு நாடுகாண் பயணி மார்க்-யோசப் மரியன்டு பிரெசுனியும் அவரது 26 மாலுமிகளும் மாவோரிகளினால் கொல்லப்பட்டனர்.

Read More

அமெரிக்கப் புரட்சியில் ஆயுத சட்டம் கொண்டுவரப்பட்ட நாள்

1775 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானிய இராணுவத் தளபதி தாமசு கேஜ் மசாசுசெட்சில்  இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார். தமது ஆயுதங்களைக் கீழே வைக்கும் அனைத்துக் குடியேற்றக்காரர்களுக்கும் மன்னிப்பு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் சாமுவேல் ஆடம்ஸ், யோன் ஆன்கொக் ஆகியோருக்கு மன்னிப்பளிக்கப்படவில்லை. 1817 – ஆரம்பகால மிதிவண்டி, டான்டி குதிரை, கார்ல் வொன் டிராயிசு என்பவரால் இயக்கப்பட்டது

Read More

பிலிப்பைன்ஸ் விடுதலை பெற்ற நாள்

1830 – 34,000 பிரெஞ்சுப் படைகள் அல்ஜீரியாவை அடைந்ததில் இருந்து பிரெஞ்சுக் குடியேற்றம் அந்நாட்டில் ஆரம்பமாகியது. 1898 – பிலிப்பீன்சு எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை பெற்றதாக எமிலியோ அகுயினால்டோ அறிவித்தார். 1899 – ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் சுழல் காற்று தாக்கியதில் 117 பேர் உயிரிழந்தனர். 1902 – ஆத்திரேலியாவின் நான்கு மாநிலங்களில் பெண்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்திரேலியப் பழங்குடிகள் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.

Read More

பல்கேரியாவில் அரசியற் கட்சிகள் தடை செய்யப்பட்ட நாள்

1914 – உதுமானியப் பேரரசில் துருக்கியர்கள் 50 முதல் 100 கிரேக்கர்களைப் படுகொலை செய்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோரை இனக்கருவறுப்பு என்ற பெயரில் வெளியேற்றினர். 1934 – பல்கேரியாவில் அரசியற் கட்சிகள் தடை செய்யப்பட்டன. 1935 – பொலிவியாவுக்கும் பராகுவேயிற்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டு மூன்றாண்டுகள் போர் முடிவுக்கு வந்தது. 1940 – இரண்டாம் உலகப் போர்: 13,000 பிரித்தானிய, பிரெஞ்சுப் படைகள் பிரான்சில் நாட்சி செருமனியின் இராணுவத் தளபதி இர்வின் ரோமெல்லிடம் சரணடைந்தனர்.

Read More

நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட நாள்

1942 – ஆன் பிராங்க் தனது 13-வது அகவையில் ஒரு நாட்குறிப்பைப் பெற்றார். 1943 – பெரும் இன அழிப்பு: செருமனியர் மேற்கு உக்ரைனில் 1,180 யூதர்களைப் படுகொலை செய்தனர். 1944 – இரண்டாம் உலகப் போர்: ஓவர்லார்ட் நடவடிக்கை: அமெரிக்க வான்குடைப் பதாதிகள் பிரான்சின் கேரன்டான் நகரைக் கைப்பற்றினர். 1954 – தனது 14-வது அகவையில் இறந்த தோமினிக் சாவியோவை திருத்தந்தை பன்னிரண்டாம் பயசு புனிதராக அறிவித்தார். 1964 – இனவெறிக்கு எதிராகக் குரல் கொடுத்தவரும், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவருமான நெல்சன் மண்டேலாவுக்கு தென்னாபிரிக்க நீதிமன்றம் ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்தது.

Read More

வெனேரா 4 விண்கலம் வெள்ளி கோளை நோக்கி புறப்பட்ட நாள்

1967 – கலப்பினத் திருமணங்களைத் தடை செய்யும் அனைத்து அமெரிக்க மாநிலங்களும் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானவை என ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1967 – சோவியத் ஒன்றியம் வெனேரா 4 விண்கலத்தை வெள்ளி கோளை நோக்கி ஏவியது. வேறொரு கோளின் வளிமண்டலத்துள் சென்று தகவல்களைப் பூமிக்கு அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

Read More

இலங்கை மட்டகளப்பில் 65 தமிழர்கள் கொல்லப்பட்ட நாள்

1987 – மத்திய ஆபிரிக்கக் குடியரசின் முன்னாள் பேரரசர் ஜீன்-பெடெல் பொக்காசாவுக்கு அவரது 13 ஆண்டுகால ஆட்சியில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டது.. 1990 – உருசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றம் சோவியத் ஒன்றியத்தில் இருந்து உருசியாவின் விடுதலையை முறைப்படி அறிவித்தது. 1991 – உருசியாவில் முதற்தடவையாக மக்கள் தேர்ந்தெடுத்த அரசுத்தலைவர் பதவியேற்றார். 1991 – கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1991: மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 65 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். 1993 – நைஜீரியாவில் தேர்தல் இடம்பெற்றது. ஆனால் இது பின்னர் இராணுவ அரசால் செல்லாமல் ஆக்கப்பட்டது.

Read More