ஐந்து மாநிலங்களில் கட்சி பெயரை பதிவு செய்வதற்கான காலஅவகாசம் குறைப்பு – தேர்தல் ஆணையம்

அரசியல் கட்சி தொடங்க வேண்டுமென்றால் அதுகுறித்து விளம்பரம் செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பும்போது 30 நாட்களில் கட்சி பெயர் பதிவு செய்யப்படும். இந்நிலையில் 30 நாட்கள் என்பதை தேர்தல் ஆணையம் 7 நாட்களாக குறைத்துள்ளது. தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்காளம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

Read More

கோடை சீசனுக்காக கோத்தகிரி நேரு பூங்காவை தயார் செய்யும் பணி தொடக்கம்

கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் உள்ள நேரு பூங்கா சுற்றுலா மையங்களில் முக்கியமானதாக உள்ளது. இந்தப் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை விழாவையொட்டி மே மாதத்தில் தோட்டக்கலை துறை சார்பில் காய்கறி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இதை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது உண்டு. இந்நிலையில் கோடை சீசன் தொடங்குவதையொட்டி, நேரு பூங்காவில் புதிய மலர் நாற்றுக்களை நடுவதற்காக, கடந்த 2 வாரங்களுக்கு முன் நிலத்தை பதப்படுத்தி, பேரூராட்சிக்கு சொந்தமான வளம் மீட்பு பூங்காவில் இருந்து இயற்கை உரம் கொண்டுவரப்பட்டு போடப்பட்டது. மேலும் பூங்காவில் 40 …

Read More

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் இந்த அம்சங்களை கொண்டிருக்கும் என தகவல்

ஆப்பிள் நிறுவனத்தின் 2021 ஐபோன் மாடல்கள் போர்ட்லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கும் என பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. தற்போது ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்டுள்ள தகவல்களில் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்களில் லைட்னிங் போர்ட் வழங்கப்படும் என தெரிவித்து இருக்கிறார். மேலும் இவை 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் பெரிய பேட்டரிகளை கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். புது தகவல்களின் படி அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஐபோன் சீரிஸ் மாடல்களில் லைட்னிங் போர்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. …

Read More

பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் நவீன கால மாற்றங்கள்

திருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் நவீன கால மாற்றங்கள் குறித்து தனியார் பாலியல் நல அமைப்பு ஒன்று எடுத்திருக்கும் சர்வேயில் இருக்கும் முக்கிய விஷயங்கள்: பெரும்பாலான ஏழை தம்பதியினருக்கு பொழுதுபோக்கு வாய்ப்புகள் மிக குறைவாக இருப்பதால், 30-35 வயதுகளில் அவர்கள் சராசரியாக வாரத்தில் மூன்று முறை தாம்பத்திய உறவு கொள்கிறார்கள் என்கிறது சர்வே. அதே நேரத்தில் டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் உள்ள அதே வயதுகொண்ட தம்பதிகளிடையே பாலுறவு இணக்கம் குறைவாக இருக்கிறது. அவர்கள் இதர வெளி பொழுதுபோக்குகளிலும் ஆர்வம் காட்டுவதால் அவர்கள் …

Read More

வேதாரண்யம் பகுதியில் உப்பளங்களில் உப்பு உற்பத்தி முழுவீச்சு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. கடந்த ஒரு வார காலமாக வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வேதாரண்யம் பகுதி உப்பளங்களில் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. உப்பு வாரும் பணியில் தொழிலாளர்கள் காலை 5 மணி முதல் காலை10 மணி வரை ஈடுபடுகின்றனர். இந்த ஆண்டு காலதாமதமாக உற்பத்தி துவங்கினாலும் தற்போது வெயிலின் தாக்கத்தால் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுவதால் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் …

Read More

கிணத்துக்கடவு அருகே கோழிக்கடை உரிமையாளர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு

கோவை செட்டியக்கா பாளையத்தை சேர்ந்த விஜயகுமார் மனைவி காளீஸ்வரி. விஜயகுமார் 3 கறிக்கோழிக்கடை நடத்தி வருகிறார். இதுதவிர தண்ணீர் கேன் சப்ளையும் செய்து வருகிறார். இவர் தாமரைக்குளத்தை சேர்ந்த ஒருவரிடம் ரூ.20 ஆயிரம் கடன் வட்டிக்கு வாங்கியுள்ளார். ரூ.10 ஆயிரத்தை திருப்பி செலுத்திவிட்டார். மீதி பணத்தை செலுத்த காலம் கடத்தி வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆட்டோவில் தண்ணீர் கேன் சப்ளை செய்ய புறப்பட்டபோது கடன் கொடுத்தவர் ஆட்டோவை வழிமறித்து பணத்தை திருப்பி கேட்டார். அப்போது நாளை தருகிறேன் என்று விஜயகுமார் கூறினார். கடன் கொடுத்தவர் …

Read More

ஒப்போ நிறுவனத்தின் புதிய எப்19 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்கள்

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி மற்றும் எப்19 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் மார்ச் 8 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புது ஸ்மார்ட்போன்களை விளம்பரப்படுத்த ஒப்போ நிறுவனம் பாலிவுட் நடிகர் வருன் தவானை நியமித்துள்ளது. புதிய ஒப்போ எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலில் ஏஐ ஹைலைட் போர்டிரெயிட் வீடியோ அம்சம் கொண்டுள்ளது. இது குறைந்த வெளிச்சம் கொண்ட வீடியோ எடுக்கப்படும் போதும் சீரான காட்சிகளை வெளிப்படுத்தும் என ஒப்போ தெரிவித்து இருக்கிறது. இதில் எட்டு ஆன்டெனாக்கள் 360 …

Read More

கடையம் அருகே வியாபாரி தற்கொலை

கடையம் அருகே உள்ள கருத்தலிங்கபுரத்தை சேர்ந்த மாடக்கண்ணு, மாடு வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 22 ஆயிரத்திற்கு ஒரு மாட்டை வாங்கினார். பின்னர் அந்த மாடு உடல் நலக்குறைவால் இறந்தது. இதனால் மாடக்கண்ணு மனவருத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் வி‌ஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

நாகையில் தனியாக இருந்த பெண்ணை குக்கரால் தாக்கியவர் கைது

நாகை செம்மரக்கடை வடக்குத் தெருவை சேர்ந்த தாதா‌ஷரிப், வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரிஹானாசமின். ரிஹானாசமின் வீட்டின் மேல் யாசர் அரபத் என்பவர் கடந்த 2 ஆண்டு காலமாக வாடகைக்கு இருந்து வருகிறார். சம்பவத்தன்று ரிஹானாசமின் வீட்டில் தனியாக இருந்தபோது யாசர்அரபத் ரிஹானாசமினிடம் தவறாக நடக்க முற்பட்டாராம். அவர் கூச்சலிடவே குக்கரை எடுத்து ரிஹானாசமினை தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து யாசர்அரபத்தை கைது செய்தனர்.

Read More

நாகை அருகே குடிபோதையில் தூக்குமாட்டி முதியவர் தற்கொலை

நாகை அருகே திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்த ஆசைதம்பி, குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்வாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் குடிபோதையில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் கைலியால் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More