அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,677 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 4,605 பேர் வீடு திரும்பியுள்ளனர். 49 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நேற்று மொத்தம் 172 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Read More

செங்கல்பட்டு அருகே அரசு ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

செங்கல்பட்டு அருகே சாந்திநகர் விரிவு பகுதிக்கு உட்பட்ட அனந்தகமல நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் மோகன் எனும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர், தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் அச்சரப்பாக்கத்தில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மோகன் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை, ரூ.40 ஆயிரம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு …

Read More

28 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த சீமான்

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் கோவை சின்னியம்பாளையம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 28 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். இந்த கூட்டத்தில் 50 சதவீத பெண் வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

Read More

டிராக்டர் பேரணி வன்முறை குறித்து நீதித்துறை விசாரணை நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்

டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் குடியரசு தினத்தில் நேற்று நடத்திய டிராக்டர் பேரணியில் மோதல் வெடித்தது. போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தியும் போலீசார் விரட்டியடித்தனர். தடுத்த போலீசார் மீது விவசாயிகள் சிலர் வாளால் வெட்டியதாகவும், கொடி கட்டிய கம்பால் தாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பதற்றமான சூழல் உருவானது. நேற்று நடந்த வன்முறை சம்பவங்களில் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 200 …

Read More

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் வங்காளதேச பந்து வீச்சாளர் 5-வது இடத்திற்கு முன்னேற்றம்

வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசம் சென்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. மூன்று போட்டிகளிலும் வங்காளதேச அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்தத் தொடரில் வங்காளதேச சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் சிறப்பாக பந்து வீசினார். அவர் 7 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 4-வது இடத்திற்கு முன்னேறினார். இதற்கு முன் 13-வது இடத்தில் இருந்தார். தற்போது 9 இடங்கள் முன்னேறியுள்ளார்.

Read More

வேர்ல்டு டூர் பைனல்ஸ் பேட்மிண்டனில் பிவி சிந்து முதல் ஆட்டத்தில் தோல்வி

வேர்ல்டு டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் தொடரின் முதல் ஆட்டத்தில் பிவி சிந்து ஜு யிங்கை எதிர்கொண்டார். முதல் சுற்றை 21-19 எனக் கைப்பற்றிய பிவி சிந்து, 2-வது சுற்றை 12-21 எனவும், 3-வது மற்றும் கடைசி சுற்றை 17-21 என இழந்து தோல்வியடைந்தார். முதல் சுற்றின் இடைவேளையின்போது பிவி சிந்து 8-11 என பின்தங்கியிருந்தார். அதன்பின் 10-14 என பின்தங்கினார். ஆனால் 16-16 என சமன் செய்த பிறகு முதல் செட்டை 21-19 எனக் கைப்பற்றினார். 2-வது செட்டில் பிவி சிந்துவால் தைவானின் ஜு …

Read More

சென்னையில் பிப்ரவரி 18-ந்தேதி ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2020-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதத்திற்குப் பதிலாக செப்டம்பர் மாதம் தொடங்கியது. 2021-ம் ஆண்டுக்கான சீசன் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்கள் குறைவாக இருக்கும் நிலையில் வீரர்கள் ஏலம் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் வீரர்கள் ஏலம் நடைபெற்றே தீரும் என பிசிசிஐ உறுதியாக தெரிவித்தது. ஜனவரி 20-ந்தேதிக்குள் வீரர்களை தக்கவைப்பது, வெளியேற்றுவது குறித்த விவரங்களை வௌயிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. 8 அணிகளும் விவரங்களை வெளியிட்டது. …

Read More

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக உள்ளார். இந்நிலையில் 48 வயதான கங்குலிக்கு இன்று மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More

கேரளாவில் மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்றதாக ரப்பர் எஸ்டேட் அதிபர் கைது

கேரள மாநிலம் திருவனந்த புரம் அருகே வனப்பகுதியில் கல்லாறு உள்ளது. இந்த பகுதியில் வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. காட்டு யானைகளின் நடமாட்டமும் உள்ளது. இந்நிலையில் கல்லாறு ஆற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் யானை ஒன்று இறந்துகிடந்தது. அப்போது யானையின் 1½ வயதான குட்டி யானை தாய் யானையை கண்ணீர் மல்க சுற்றி சுற்றி வந்தது. இந்த காட்சி பார்ப்பவர்கள் மனதை உருக்கும் வகையில் இருந்தது. இது வன ஆர்வலர்களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வனத்துறை அதிகாரிகள் அந்த யானை நோய் காரணமாக …

Read More

சசிகலா விடுதலையை சென்னையிலும் கொண்டாடுகின்றனர் – டிடிவி தினகரன்

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் டிடிவி தினகரன் பேட்டி அளித்தபோது, மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று சசிகலாவை அழைத்துச் செல்வோம். நிர்வாகிகள், தொண்டர்கள் சசிகலா வருகைக்காக காத்திருக்கின்றனர். அவரது வரவேற்பு தமிழகத்தில் சிறப்பானதாக இருக்கும். ஜெயலலிதா நினைவிடத் திறப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியல் பற்றி பேச விரும்பவில்லை. ஜெ.நினைவிடம் திறந்ததைப் பார்க்கும்போது சசிகலா விடுதலையைக் கொண்டாடுவது போல் தான் தோன்றுகிறது. அ.தி.மு.க.வை மீட்டு ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை கொடுக்க முயற்சி நடக்கிறது என்று கூறினார்.

Read More