jayaprakash – Dinaseithigal

திருச்சியில் திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை…

தா.பேட்டையை அடுத்த பொன்னுசங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் சசிகுமார் (வயது 30). இவர் வெளிநாட்டில் சமையல் கேட்டரிங் வேலை பார்த்து வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த நிலையில் சசிகுமாருக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர் பல இடங்களிலும் பெண் பார்த்துள்ளனர். ஆனால் திருமணம் ஆகவில்லை. இதனால் மனமுடைந்த சசிகுமார் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, ​​எலி பேஸ்ட் தின்று மயங்கி கிடந்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் …

Read More

11 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்…

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 3 ஆயிரத்து 254 வாக்குச்சாவடிகளில் நேற்று 2-ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது. 1.1.2023 அன்று 18 வயது பூர்த்தியாகும் நபர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்குப் படிவம்-6, பெயர் நீக்கம் செய்வதற்குப் படிவம்-7, குடியிருப்பை மாற்றியமைப்பதற்கு, நடப்பு வாக்காளர் பட்டியலுக்குரிய பதிவுகளைத் திருத்துவதற்கு, மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான பதிவுப் படிவம்-8ஐ உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்ய வேண்டும். செய்து வழங்க வேண்டும் என்று …

Read More

ஆத்தூர் அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்து : 10 பேர் படுகாயம்…

பெரம்பலூர் மாவட்டம் விஜயரங்க புரத்தைச் சேர்ந்த 16 பேர் வேனில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ஒரு தர்காவுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று அதிகாலையில் வேன் மூலம் ஊருக்கு புறப்பட்டனர். வேன் ஆத்தூர் வழியாக வந்து கொண்டிருந்தது. ஆத்தூர் அருகே கொத்தம்பாடி அழகாபுரம் பிரிவு ரோடு பகுதியில் வந்த போது வேனின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் நிலைதடுமாறிய வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் வேன் டிரைவர் முஸ்தபா (வயது 32), சரோஜா (53), சாந்தி (48), சேக் உசேன் (17), …

Read More

பாபநாசத்தில் வீட்டில் நகை திருடியவர் கைது…

பாபநாசம் பொதிகையடி வடக்கு தெருவை சேர்ந்தவர் வெலிங்டன் (வயது 38). இவர் தனது மனைவி நகைகளை வீட்டில் இருந்த பீரோவில் வைத்திருந்தார். கடந்த மாதம் 16-ந் தேதி வெளியூரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பீரோவை திறந்து நகைகளை எடுத்தார். அப்போது, ​​அதில் இருந்த தங்க சங்கிலி, கம்மல்கள், வளையல்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து வெலிங்டன் விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தேடிவந்தனர். இந்த …

Read More

ஓய்வூதிய திட்டம் : ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்…

அ.தி.மு.க. ஆட்சியில் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை. தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியதை மீறி ஏற்கனவே ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட அகவிலைப்படி உள்ளிட்ட பணபலன்களையும் நிறுத்திவிட்டது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் அகவிலைப்படி, சரண்டர் வழங்கப்பட்டது. ஆனால் அதையும் நிறுத்திவிட்டார்கள். ஏற்கனவே வழங்கப்பட்ட அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும். 2004-ம் ஆண்டு தொகுப்பூதியத்தில் பணி அமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு 2006-ம் ஆண்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது. அதுவரை அவர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தையும் பணிக்காலமாக கணக்கெடுக்க வேண்டும். கோர்ட்டுகளில் நடக்கும் வழக்குகளை கவனிக்க …

Read More

நெல்லை அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சிற்பங்கள் குறித்த பயிற்சி அளிப்பு..!

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மேலப்பாளையம் காயிதே மில்லத் மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ‘சிற்பங்களை அறிவோம்’ என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி கலந்து கொண்டு, சிற்பங்கள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் சோழர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள் கால சிற்பங்களின் சிறப்புகள் பற்றியும், நடுகற்கள், சாதிக்கற்கள் பற்றியும் எடுத்துரைத்தனர். இந்த பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Read More

கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்…

சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும் பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. சனிக்கிழமையான நேற்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் அதிகாலையில் முக்கலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் திரண்டு நின்று சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர். தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி …

Read More

செல்போனில் பேசிய போது மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி…

நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியை அடுத்த குஞ்சன்விளையை சேர்ந்தவர் மகேஷ் (வயது 32), வெல்டிங் தொழிலாளி. நேற்று முன்தினம் வழக்கம் போல் இவர் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தார். பின்னர் இரவு 9 மணிக்கு வீட்டின் 2-வது மாடிக்கு சென்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் மகேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் 2 கால்களும் ஒடிந்த நிலையில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினரும், குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்து …

Read More

தக்கலை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்…

தக்கலை வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவு அழகியமண்டபம் பகுதியில் வாகன சோதனையில் நிறுத்தப்பட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக கேரள பதிவெண் கொண்ட ஒரு மினி டெம்போ வேகமாக வந்தது. அதை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டினர். ஆனால் டிரைவர் டெம்போவை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் தங்களது வாகனத்தில் டெம்போவை துரத்தி சென்றனர். அதிகாரிகள் பின்னால் துரத்தி வருவதை பார்த்த டிரைவர் சுவாமியார்மடம், இரவிபுதூர்கடை, சிராயன்குழி வழியாக பயணம் வேகமாக …

Read More

சிவசண்முகராஜா தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்…

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளரும், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவருமான எஸ்.சிவசண்முகராஜா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 1.1.2023 அன்று தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஏதுவாக சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை …

Read More