நகராட்சி ஊழியர்கள் மூலமாக ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும் தமிழக அரசு

இப்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு தமிழக அரசு உணவுகளை வழங்கி வருகிறது. அம்மா உணவகங்களில் உணவுகளை சமைத்து நகராட்சி ஊழியர்கள் மூலமாக தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை அரசு வழங்கி கொண்டு வருகின்றது .

Read More

அச்சுறுத்தல் சமயத்திலும் ரசிகர்களுக்கு உதவி செய்யும் அமெரிக்க பாடகி

தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த பாப் பாடகி ஆர்யானா கிராண்டே என்பவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தனது ரசிகர்களுடன் சமூக வலைதளங்கள் வழியாக உரையாடி வருகிறார். இப்போது வேலை இல்லாததால் பணமின்றி கஷ்டப்படும் தனது ரசிகர்களுக்கு நேரடியாக நிதியுதவி வழங்கி கொண்டு வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் நெகிழ்ந்து பாராட்டி கொண்டு வருகிறார்கள்.

Read More

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் ஒத்திவைப்பு?

மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடிய நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் பணிகள் துவங்கி உள்ளன. அந்த வகையில் இரு அணிகள், தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது . இதனை ஏற்று, தேர்தல் ஒத்திவைக்கப்படும் என, தகவல் வெளியாகி இருக்கிறது .

Read More

விரைவில் சசிகுமார் இயக்கவிருக்கும் படம் குறித்த தகவல் வெளியீடு ?

தமிழில் சசிகுமார் நாயகனாக நடித்த படங்கள் பல, வெளிவர தயாராக இருக்கின்றன . இதனால், அடுத்து ஒரு படத்தை இயக்க, அவரே முடிவு செய்துள்ளார் . இதற்காக, நடிகர் விஜய்க்கு, சசிகுமார் கதை சொல்ல , விஜய்க்கு பிடித்துவிட்டது. ஆகவே, விரைவில் சசிகுமார் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்டுகிறது.

Read More

தமிழகத்தில் உணவகங்கள், மளிகைக் கடைகளின் நேரம் குறைக்கப்படவில்லை என அறிவிப்பு

இப்போது உணவகங்கள், மளிகைக் கடைகளுக்கான விற்பனை நேரம் குறைக்கப்படவில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி விற்பனை செய்யலாம். மேலும் பெரிய மைதானங்கள், சந்தைகளில் காய்கறிகளை வியாபாரிகள் விற்பனை செய்ய தடையில்லை. அத்தியாவசிய பொருள்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க 9 பேர் கொண்டு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Read More

நர்ஸுகளிடமும் கெடுபிடி காட்டும் காவல்துறை -களத்தில் இறங்கிய தி.மு.க எம்.பி

தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ள நிலையில், வேலூரில் மருத்துவமனைகளுக்கு செல்லும் நர்ஸுகளிடமும் காவல்துறை கெடுபிடி காட்டுவதாக புகார் கிளம்பியுள்ளது . இதனையடுத்து இது சம்பந்தமாக, துரைமுருகனின் மகனும் தி.மு.க எம்.பி-யுமான கதிர் ஆனந்த், வேலூர் எஸ்.பி பிரவேஷ்குமாரை போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது ‘அடையாள அட்டையை காண்பித்தால், நர்ஸுகள் அனுமதிக்கப்படுவார்கள்’ என்று எஸ்.பி சொல்லியிருக்கிறார்.

Read More

நெல்லையில் அதிரடியாக மூடப்பட்ட காய்கறி சந்தை

நெல்லை நயினார்குளம் பகுதியில் காய்கறி சந்தை பரபரப்பாக செயல்பட்டு வந்தது. காய்கறிகளை மொத்தமாக விற்பனை செய்யப்படும் இந்த மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் வருகை மிகுதியாக இருந்தது. அதனையடுத்து கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதத்தில் இந்த சந்தையை நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் மூட உத்தரவிட்டனர்.

Read More

ராமநாதபுரத்தில் சாலையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி

தமிழகத்தில் ராமநாதபுரம் ஓம் சக்தி நகரைச் சேர்ந்த பி.கே.சண்முகம் மகன் முருகானந்தம் (33) என்பவருக்கும், ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த கண்மணி எனும் பெண்ணுக்கும், ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள வழிவிடு முருகன் கோயில் முன்பு சாலையில் இன்று காலை 9 மணிக்குத் திருமணம் நடைபெற்றது. அப்போது மணமகன், மணமகள் வீட்டைச் சேர்ந்த பத்துக்கும் குறைவானவர்களும், புகைப்படக்காரர் உள்ளிட்டோர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

Read More

சண்டைக்காட்சிக்காக தற்காப்பு கலையை கற்கும் காஜல் அகர்வால்

தென்னிந்திய சினிமா நடிகை காஜல் அகர்வால், தற்போது, இந்தியன் -2 மற்றும் வேறு சில படங்களில் நடித்து வருகிறார். இது குறித்து அவர் கூறும்போது, ”கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கியதும், மீண்டும் படப்பிடிப்பு துவங்கும். அப்போது, என் சண்டைக் காட்சி எடுக்கப்பட உள்ளது. அதற்காக, தற்காப்பு கலையான களறி விளையாட்டை கற்று வருகிறேன்,” என்று கூறியுள்ளார்.

Read More

தன்னுடைய வீட்டை தூய்மைப்படுத்தும் நடிகை அடா ஷர்மா

பிரபல தெலுங்கு நடிகை அடா ஷர்மா தனது இன்ஸ்டா பக்கத்தில், “அதிகமான நபர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் இல்லை என கூறுகின்றார்கள். வீட்டை சுத்தப்படுத்திக்கொண்டே எப்படி உடற்பயிற்சி செய்வது என்பதை நான் கற்றுத்தருகிறேன். அதிக நேரம் போனில் மூழ்கிவிடாமல் இது போன்று வீட்டை சுத்தம் செய்து பாதுகாப்புடன் இருங்கள்” என கூறியுள்ளார். View this post on Instagram Tag all your friends who should do this today ! . Creative katka adah_ki_adah style ! . Many …

Read More