• September 18, 2019

வு பிராண்டு புதிய அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் !!

வு தனது ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களை இந்தியாவில் அல்ட்ராஆண்ட்ராய்டு டி.வி. பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விற்பனை அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 28 ஆம் தேதியும், பிரைம் அல்லாத வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் வு அல்ட்ராஆண்ட்ராய்டு டி.வி.க்களை …

புரோ கபடி லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பையுடன் உ.பி.யோதா அணி மோதல் !!

7-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியில் 9-வது கட்ட ஆட்டங்கள் புனேயில் நடைபெறுகிறது. 12 அணிகள் உள்ள இந்த போட்டியில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இன்று இரவு நிகேஷ்குமார் தலைமையிலான உ.பி.யோதா- பசல் தலைமையிலான …

தென் ஆப்பிரிக்கா அணியுடன் இன்று இந்திய அணி மோதல் !!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி மொகாலியில் இன்று நடக்க உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மூன்று தொடர்களையும் கைப்பற்றி உள்ளதால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும். தென் ஆப்பிரிக்கா அணியும் கடைசியாக ஆடிய …

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் நடப்பு பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வி !!

சீன ஓபன் பேட்மிண்டன் அங்குள்ள சாங்சூ நகரில் நடைபெறுகிறது. இன்று நடப்பு பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 10-21, 17-21 என்ற நேர்செட் கணக்கில் 19-ம் நிலை வீராங்கனை பூசனிடம் தோல்வியடைந்தார். தாய்லாந்து வீரர்களிடம் …

மும்பையில் ஆசிரியையை குத்திக் கொலை 4-ம் வகுப்பு மாணவன் !!

மும்பையில் உள்ள கோவான்டி பகுதி சிவாஜி நகரை சேர்ந்த ஆயிஷா அஸ்லாம் ஹுசூய் என்பவர் தனது வீட்டில் டியூசன் நடத்தி வந்தார். இவரிடம் டியூசன் படித்து வந்த 4-ம் வகுப்பு படிக்கும் மாணவனின் தாய் ஆசிரியை ஆயிஷா வீட்டுக்கு வந்து அவரிடம் கடனாக …

சிக்கலான டாஸ்க் காரணமாக பிக்பாஸ் வீட்டில் திணறிய லாஸ்லியா

சீசன் 3யின் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவை தொட்டு வருகிறது, இதனால் போட்டிகளும் சிரமமாக்கப்பட்டு வருகிறது. இத்தனை நாள் காதல், சண்டை என பார்த்து வந்த ரசிகர்கள் இப்போது தான் பிக்பாஸ் டாஸ்க் கொடுக்கிறார். இப்போது போட்டியாளர்களுக்கு ஒரே காலில் நின்றபடி டாஸ்க் கொடுக்கிறார். …

இலங்கையில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து

இலங்கையில் கொழும்பு, தெமட்டகொடை, ஆராமய சாலையில் அமைந்துள்ள குடியிருப்புத் பகுதி யொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது . இந்த தீ விபத்துக்கான காரணங்கள் இதுவரை வெளிவராத நிலையில் தீயிணை கட்டுப்படுத்த தீயணைப்பு பிரிவினர் அதிகபட்ச நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனர்.

போலியான பாஸ்போர்ட்டில் ஜப்பான் செல்ல முயன்ற இரண்டு பேர் கைது

இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் ,ஈரானை சேர்ந்த தந்தையும் மகனும் நேற்று இரவு குடியகல்வு பிரிவிடம் தங்களின் பாஸ்போர்ட்டை காண்பித்தபோது குடிவரவு – குடியகல்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு ஈரானை சேர்ந்த 51 வயதான தந்தை ஒரு வியாபாரியாக செயல் பட்டு …

பஸ்சுடன் மோட்டார் சைக்கிள் மோதி உண்டான விபத்தில் சிக்கி ஒருவர் சாவு

இலங்கை கண்டியில் தனியார் பஸ்சுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி காவல்துறை பிரிவிற்குட்பட்ட சங்கராஜா மாவத்தையில் நேற்று கண்டி நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு …

பிரதானமான இடத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 6 குடும்பங்கள் பாதிப்பு

இலங்கையில் மஸ்கெலியா சாமிமலை பெயலோன் தோட்டத்தின் சின்ன சூரியகந்தை பகுதியில் தோட்ட குடியிருப்பில் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதால் அந்த குடியிருப்பிலிருந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் மோசமான நிலைக்கு உள்ளாகி இருப்பதாகவும் அதில் 16 பள்ளி மாணவர்கள் அடங்குவதாகவும் அந்த பகுதிக்குப் …

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் படுகாயமடைந்த இருவர்

இலங்கையில் ஹொரணை பகுதியில் நடைபெற்ற பயணிகள் பஸ் விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பண்டாரகமவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்றும் கொழும்பில் இருந்து கெஸ்பாவை நோக்கிப் பயணித்த தானியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து …

மகளின் திருமண நாளன்று மரணமடைந்த தந்தை ; இலங்கையில் நடைபெற்ற சோகம்

இலங்கையில் மகளின் திருமணம் நடைபெறவிருந்த நாளன்றே, தந்தை மரணித்த சோக சம்பவமொன்று மாகடுவாவ பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. நேற்று தனது இளைய மகளின் திருமணம் தமது இல்லத்தில் வைத்து நடைபெறவிருந்த நிலையில், வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களுடன் சேர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டை அலங்கரிக்கும் பணிகளில் …

இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலின்போது தடுக்கச் சென்ற முக்கியஸ்தர் மீது தாக்குதல்

இலங்கையில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலை தடுத்து சமரசப்படுத்த முயன்ற பிரதேச சபை உறுப்பினர் கடுமையாகத் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. நேற்று அப்புதளை ஹல்துமுள்ளையில் இரு தரப்பினருக்கிடையில் தனிப்பட்ட காரணத்தால் தகராறு ஏற்பட்டு …

இலங்கையில் பாழுங்கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு

இலங்கையில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலொன்றினையடுத்து விரைந்து சென்ற மொனராகலைப் போலீசார் பாழுங்கிணறு ஒன்றிலிருந்து சக்தி வாய்ந்த வெளிநாட்டுத் தயாரிப்பு கைக்குண்டொன்றை இன்று கைப்பற்றியுள்ளனர் . கைப்பற்றப்பட்ட கைக்குண்டு குறித்து மொனராகலைப் போலீசார் தீவிர புலன் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள் .

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களாக மூன்று பேருக்கு பதவி பிரமாணம்

இலங்கையில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் இன்று பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் ஆனந்தகுமாரசிறி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொண்டனர். அதன்படி மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக மனோஜ் சிறிசேனவும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக பி. ஹேரத்தும் தேசிய பட்டியல் பாராளுமன்ற …