Jameel – Page 265 – Dinaseithigal

மட்டக்களப்பில் நடைபெற்ற மோசமான விபத்தில் இளைஞர் சாவு

இலங்கையில் மட்டக்களப்பில் நடைபெற்ற மோசமான விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். நேற்று முன் தினம் இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. முகத்துவாரத்தில் இருந்து மட்டக்களப்பு செல்லும் வழியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் கருவேப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் . காயமுற்ற இரண்டு இளைஞர்கள் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Read More

அரசு வேலையை விட்டவருக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்

இலங்கையில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் துஷான் குணவர்தன அடையாளம் தெரியாத கும்பல் வெள்ளை வானில் வந்ததாகவும், தனது வீட்டின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியது குறித்தும் கிருலப்பனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார் . இதில் போன வியாழக்கிழமை காலை சந்தேகத்திற்கிடமான வெள்ளை வான் தனது வீட்டின் பின்புறம் வீதியில் வந்ததாகவும் அவர் தெரிவித்தார் .

Read More

பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு எதுவுமின்றி காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி விடுவிப்பு

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 12 ஆண்டுகளாக சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்றைய தினம் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தால் நிரபராதி என தீர்ப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதில் அம்பாறை அக்கரைப்பற்று, சின்னப்பனங்காட்டைச் சேர்ந்த கதிரவேலு கபிலன்,வயது 29 என்பவரே விடுதலை செய்யப்பட்டுள்ளார் .

Read More

இத்தாலியில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்

கடந்த 2019ம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி நேற்று மதியம் 3.00 மணியளவில் இத்தாலியில் மிலன் மத்திய ரயில் நிலையம் முன்பு போராட்டம் நடைபெற்றுள்ளது .அப்போது இந்த ஆர்ப்பாட்டத்தை இத்தாலியில் வாழும் இலங்கையர்கள் ஏற்பாடு பண்ணியிருக்கின்றனர் .

Read More

அரசாங்கத்தால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலை

இலங்கை அரசாங்கத்தின் திட்டமிடப்படாத முடிவுகளுக்கு மத்தியில் நாட்டின் விவசாயம் நாளுக்கு நாள் சரிந்து வருவதாக அகில இலங்கை விவசாய கூட்டமைப்பு கூறியுள்ளது . இதையடுத்து தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன இது தொடர்பாக கூறுகையில், உர நெருக்கடியால் விவசாயிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் . மேலும் தேசம் முழுவதும் நெல் வயல்கள் வெறிச்சோடி காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

Read More

மைதானத்தை திறந்து வைத்து விளையாடிய ஜனாதிபதி

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை கிரிக்கெட் அணி வீரர் திசர பெரேராவுடன் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். ராணுவத்தின் 72 வது ஆண்டு விழாவை முன்னிட்டு அநுராதபுரம், சாலியபுர கஜபா ரெஜிமெண்ட் தலைமையத்தில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச பங்கேற்று கொண்டார்.

Read More

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராக கோரி விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

இலங்கையில் முன்னாள் பிரதி அமைச்சரும் ராஜபக்ஸவினரின் நெருங்கிய உறவினருமான நிரூபமா ராஜபக்ஸவின் கணவரான திருக்குமார் நடேசனுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மீண்டும் அழைப்பு விடுத்து கொண்டுள்ளது. இதில் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாக சொத்துக்களை ரகசியமாக வாங்க செய்தது குறித்து மேலதிக வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read More

மறுபடியும் வெளியான பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல்

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21, 2019 அன்று உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பைப் போன்ற பயங்கரவாத தாக்குதலை இலங்கை சந்திக்க நேரிடும் என்ற ஊடக அறிக்கைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தகவல் தெரிவித்துள்ளது. நாட்டு மக்களை அனைத்து பேரிடர்களிலிருந்தும் பாதுகாக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.

Read More

அங்கோலாவில் நடைபெற்ற சுரங்க விபத்தில் 11 பேர் உயிரிழப்பு

அங்கோலா நாட்டின் அமைந்துள்ள ஹம்போ மாகாணத்தில் உள்ள தங்கச் சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் 11 பேர் பலியாகியுள்ளனர். அங்கோலா நாட்டின் ஹம்போ மாகாணத்தில் சட்டவிரோதமாக தங்க சுரங்கங்களில் வேலை செய்வதால் ஏற்படும் விபத்துகளில் கடந்த மூன்று மாதங்களில் 11 பேர் வரை பலியாகியுள்ளனர்.

Read More

இலங்கையில் கொரோனா தொற்றி 35 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 35 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளனர்.இந்த தகவலை சுகாதார அமைச்சகத்தின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்பிரகாரம் , நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,331 ஆக உயர்ந்துள்ளது  . அதேசமயம் , நாட்டில் நாட்டில் இதுவரை 525,663 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

Read More