முக்கிய மாகாணத்தில் பள்ளிகள் குறித்து வெளியான தகவல்
இலங்கையில் மேல் மாகாணத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பதற்காக சுகாதார ஆலோசனையின் படி கடுமையான திட்டம் வகுக்கப்படும் என்று கல்வியமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறியுள்ளார் .இந்நிலையில், மேல் மாகாண பள்ளிகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்திற்குள் ஆரம்பிப்பது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் நேற்று கல்வியமைச்சகத்தில் நடைபெற்றுள்ளது .இதில் சுகாதார பிரிவு கொரோனா தொற்று பரவலை தடுக்கும் ஜனாதிபதி செயலணி உள்ளிட்ட பல பிரிவின் பங்களிப்புடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கல்வியமைச்சகத்தின் தகவல்கள் கூறுகின்றன.
Read More