இயக்குனர் பாரதிராஜாவுக்கு எதிராக கிளம்பிய தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமா இயக்குனர் பாரதிராஜா தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிராக புதிய சங்கத்தைத் தொடங்கி உள்ளார். இந்த செயலுக்கு பலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்துக்கு அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தனி அதிகாரி என்.சேகருக்கு சில தயாரிப்பாளர்கள் புகார் ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில், நமது சங்கத்தின் பைலா விதி எண் 14ன் படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Read More

கரூரில் முதியோர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உதவிகள்

இப்போது கரூர் மாவட்டத்தில் உள்ள தெரசா மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தாந்தோணி, சணப்பிரட்டி, ஆச்சி மங்கலம், தோரணங்கல் பட்டி, திருமாநிலையூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 102 பயனாளிகளுக்கு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவிகளை வழங்கியுள்ளார். இந்த நிகழ்வு அனைவரையும் மனம் நெகிழ செய்துள்ளது .

Read More

சிறார் வதை வழக்கு எதிரொலி காரணமாக அ.தி.மு.க பிரமுகர் நீக்கம்

குமரி மாவட்டம் நாகர்கோவில் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் சிறார் வதை வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டிருந்தார் . இந்த நிலையில் அவரது நண்பரான கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சிறுபான்மை அணி செயலாளர் ஞாலம் ஜெகதீஸ் அந்த கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதனால் நாஞ்சில் முருகேசன் வழக்கு விசாரணை தீவிரமடைந்து கொண்டுள்ளது .

Read More

கனமழையால் வெள்ளக்காடாக மாறிய கூடலூர் பகுதி

தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் 201 மி.மீ மழை பதிவாகியுள்ள நிலையில், காலம்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, புறமனவயல் பழங்குடியின கிராமம் வெள்ளநீரில் தத்தளித்து கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்த கிராமத்தைச் சேர்ந்த 50 பழங்குடியினர்களை வருவாய்த்துறையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில் புறமனவயல் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி தருகிறது .

Read More

திடீரென மஞ்சள் நிறத்தில் மாறிய இளம்பெண் -பிரிட்டனில் நடைபெற்ற துயர சம்பவம்

பிரிட்டன் நாட்டு நகரமொன்றில் வாழும் ஒர் இளம்பெண், ஊரடங்கின்போது குடும்பத்துடன் இணைந்துகொள்வதற்காக பணியிலிருந்து வீடு திரும்பிய நிலையில், திடீரென ஒரு நாள் அவரது உடல் மஞ்சள் நிறமாக மாறியிருக்கிறது . கடைசியில் அவர் உயிரிழந்த சோகம் குடும்பத்தவரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டனின் Doncasterஐச் சேர்ந்த டானி ஹௌசலே (26), நர்சாக பணி செய்பவர். மருத்துவமனையில் பணிபுரியும் தான் வீட்டுக்கு வந்து வந்து சென்றால், உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தங்கையான ஜேமி லீக்கு ஒருவேளை ஏதேனும் பிரச்சினை ஏற்படலாம் என்பதற்காக தனியாக வீடு ஒன்றில் …

Read More

தேர்தல் தொடர்பாக முக்கிய அறிவிப்பு விடுத்துள்ள முக்கியஸ்தர்

இலங்கையின் அனைத்து மக்களும் தவறாது தேர்தலில் வாக்களிக்குமாறு கொழும்பு பேராயர் கர்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார் . இந்த ஆண்டு தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதால் தேர்தலில் வாக்களிக்கவேண்டியது எல்லா பிரஜைகளுடைய கடமை. ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெறப்போகின்ற இந்த தேர்தல் எங்கள் தேசத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

Read More

இலங்கையில் வாக்காளர் அட்டைகளை விலைக்கு வாங்கிய இரண்டு பேர் மீது நடவடிக்கை

இலங்கையில் பணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய இரண்டு பேர் பேருவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு வாக்காளர் அட்டைக்குத் தலா 5 ஆயிரம் ரூபா வீதம் வழங்கி பெற்றுக் கொண்டுள்ளதாக தொடக்க நிலை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இதில் கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அதிலும் அவர்கள் பயன்படுத்திய காரையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Read More

தேர்தல் பணிக்கு சென்ற அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சிரமம்

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக மாவட்ட செயலகத்திற்கு வருகை தரும் உத்தியோகத்தர்களை வவுனியா மாவட்ட செயலகம் அசெளகரியத்திற்குட்படுத்தியதாக கூறப்படுகின்றது. வவுனியா மாவட்ட செயலகத்திற்குள் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதிகள் இருந்த போதிலும் மாவட்ட செயலகத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள காமினி மாகாவித்தியாலய மைதானத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களை நிறுத்திவிட்டு வருமாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

Read More

வாக்களிப்பு வீதம் தொடர்பாக வெளியிடப்பட்ட சிறப்பு தகவல்

இலங்கையில் இனி வரும் பொதுத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார் . இந்த தேர்தலில் சுமார் 80 வீத வாக்குப்பதிவு இடம்பெறும் என்று தாம் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் தெரிவித்துள்ளது. அரசு தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விஷயத்தை கூறியுள்ளார்

Read More

இலங்கையில் புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் தேதி அறிவிப்பு

இலங்கையில் 9 ஆவது பாராளுமன்ற தேர்தல் நாளை நடைபெறவிருக்கின்றது .இதையடுத்து 9ஆவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் ஆகஸ்ட் மாதம் 20 ம் தேதி நடைபெறும். இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது . இது தொடர்பாக சிறப்பு அறிவிப்பு தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.

Read More