Bhama – Page 224 – Dinaseithigal

திட்டமிட்டு காதலனை தீர்த்துக் கட்டிய காதலி

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 3-வது தெருவில் தனது காதலி லோகேஸ்வரி வீட்டிக்கு சென்றிருந்த போது அவரது எதிரிகள் வீடு புகுந்து நாகூர் மீரானை சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்றனர். இந்த கொலை தொடர்பாக ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நாகூர் மீரானுக்கு அவரது காதலி லோகேஸ்வரியே எமனாக மாறி இருப்பதும், அவரே தகவல் கொடுத்து நாகூர் மீரானின் எதிரிகளுடன் கை கோர்த்து திட்டமிட்டு தீர்த்துக் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Read More

கடலில் மூழ்கி 2 பேர் பலி

கத்தார் நாட்டில் கடலில் மூழ்கி கும்பகோணத்தைச் சேர்ந்த மின் பொறியாளர் பாலாஜி (38), மகன் ரக்ஷன்(10) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். புகாரின்பேரில் கத்தார் நாட்டின் கடற்கரை பாதுகாப்புத் துறையினர் இருவரது உடல்களை மீட்டனர்.

Read More

நிலச்சரிவால் மாற்று வழியாக இயக்கப்படும் கொல்லம்-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்

செங்கோட்டை புனலூர் ரயில்வே பிரிவில் நிலச்சரிவு காரணமாக கொல்லம்-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொல்லம் சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் திருவனந்தபுரம், நாகர்கோவில், திருநெல்வேலி தென்காசி, ராஜபாளையம், வழியாக இன்று இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Read More

பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையான நேற்று, திருப்புத்தூர் அருகே உள்ள கொங்கரத்தியில் உள்ள வண்புகழ் நாராயணப்பெருமாள் கோயிலில் மூலவரையும், உற்சவரையும் பக்தர்கள் துளசி மாலை அணிவித்தும், அர்ச்சனை செய்தும், நெய் தீபம் ஏற்றியும் வழிபட்டனர். திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று துளசிமாலை அணிவித்து பெருமாளை வழிபட்டனர்.

Read More

ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவியும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகையான மலர் செடிகள், தாவரங்கள், மரங்கள், பெரணிகள், கள்ளிச் செடிகள் மற்றும் பல்வேறு அழகு தாவரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனை காண நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் வருகின்றனர். தற்போது, 2ம் சீசன் என்பதால் பூங்காவில் பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர கண்ணாடி மாளிகையிலும் 5 ஆயிரம் தொட்டிகளை கொண்டு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிலையில் தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை ஒரு பகுதியில் …

Read More

சாலையோரங்களில் வலம் வரும் வன விலங்குகளை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டு மாடுகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வாழ்கின்றன. ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் மட்டுமே இப்பகுதிகளில் மழை காணப்படும். அப்போது, வனங்கள் பசுமையாக காட்சியளிக்கும். இச்சமயங்களில் உணவிற்காக சாலையோரங்களிலேயே யானை, மான், காட்டு மாடுகள் போன்றவைகள் வலம் வரும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வாடிக்கை. அதன்பின், மழை குறைந்துவிடும், வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படும். இதனால், வனங்களில் எதிர் பார்த்த …

Read More

கோவிலில் கண்டெடுக்கப்பட்ட பிறந்த பச்சிளங்குழந்தை

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மொண்ணவேடு கிராமத்தில் கங்கைஅம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வாசலில் பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருப்பதாக வெங்கல் போலீசாருக்கு நேற்று முந்தினம் இரவு தகவல் கிடைத்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கோவில் வாசலில் அழுது கொண்டிருந்த அந்த பச்சிளம் குழந்தையை போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். பின்னர் …

Read More

ராமேசுவரத்தில் கடல் நீர் உள்வாங்கியதால் மக்கள் அச்சம்

மன்னார் வளைகுடா, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில், இன்று ராமேஸ்வரத்தில் 50 மீட்டர் தொலைவிற்கு கடல் நீர் உள்வாங்கியுள்ளது, இதனால் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கபட்ட படகுகள் தரைதட்டி நிற்கிறது. படகுகளை மீட்கும் பணியில் மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 50 மீட்டர் தொலைவிற்கு கடல் நீர் உள்வாங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி, பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து …

Read More

காஷ்மீரில் புதிய அரசு உருவாகும் : ஆர்எஸ்எஸ் தலைவர்

நாக்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியதாவது;- ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்படும் முன்பு காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி 80 சதவீதம் அரசியல்வாதிகளின் பைகளுக்கே சென்றது. மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்காமல் உள்ளூர் தலைவர்களை அனைத்தையும் அனுபவித்தார்கள். ஆனால், தற்போது ஜம்மு காஷ்மீரின் நிலைமை மாறியுள்ளது, மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டபின், பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சிக்கான வழி பிறந்துள்ளது. …

Read More

கனமழையால் 11 கேரள மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு

கேரளாவின் தென்கிழக்கு அரபி கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More