• August 19, 2019

உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள்

1 காளான் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று காளான். இந்த காளானை உணவில் அதிகம் சேர்ந்து வந்தால், இதில் உள்ள குறைவான கலோரி மற்றும் கொழுப்புக்களால், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். 2 முட்டையின் வெள்ளைக்கரு முட்டையின் …

நவ்தீப் சைனி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு

இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசியதால் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. 2019 சீசனில் சிறப்பாக பந்து வீசினார். குறிப்பாக சராசரியாக 140 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் …

ஆஷஸ் தொடர் நடைபெறுவதாலேயே டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் அழியாமல் உள்ளது – கங்குலி

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்ற பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். இந்த தொடரானது 5 டெஸ்ட் போட்டிகளை கொண்டது. இதுவரை நடைபெற்றுள்ள 70 தொடர்களில் 33 முறை ஆஸ்திரேலியா அணியும், 32 …

ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் – விராட் கோலி

சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை கோலிக்கு கிடைத்துள்ளது. ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் அவருக்கு தலா 3 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அடுத்த இடம் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்துள்ளது (3.1 கோடி, 2.8 …

ஆளில்லா விமானத்தின் மூலம் பொருட்களை டெலிவரி செய்யப்போகிறோம் – அமேசான்

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் ‘‘விரைவில் ஆளில்லா விமானத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை டெலிவரி செய்யப்போகிறோம்’’ என்று கெத்தாக அறிவித்திருக்கிறது. இந்த ஆளில்லா விமானங்கள் மிகச் சிறிய அளவுடையவை. சுமார் 15 கிலோ மீட்டர் எல்லைக்குள் 2.3 கிலோ கிராம் எடையுள்ள …

கர்நாடகாவில் புதிய சபாநாயகராக விஷ்வேஸ்வர் ஹெக்டே ஒருமனதாக தேர்வு..!!

கர்நாடகாவில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக நம்பிக்கை வாக்கெப்பு மூலம் எடியூரப்பா வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். காங்கிரஸ் – ம.ஜ.த கூட்டணி ஆட்சியில் சபாநாயகராக இருந்த ரமேஷ் குமார் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து புதிய சபாநாயகருக்கான பதவிக்கு …

உன்னாவ் பாலியல் விவகாரம் : பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் உட்பட 30 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு

உன்னாவ் பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண், தனது உறவினர்கள் இரண்டு பேர் மற்றும் வழக்கறிஞருடன் சென்ற கார் கடந்த திங்கள்கிழமையன்று விபத்துக்குள்ளானது. இதில், அந்த பெண்ணின் உறவினர்கள் இருவருமே உயிரிழந்தனர். உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் உள்ள பாஜக எம்.எல்.ஏ குல்தீப் …

ரூ.3.15 கோடி மதிப்புள்ள கஞ்சாவை தீயிட்டு கொளுத்திய போலீசார்..!!

திரிபுரா மாநிலம் ஆர்.கே. நகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாநில போதை தடுப்புப் பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த வாகனம் ஒன்றை வழிமறித்து சோதனை செய்ய முற்பட்டபோது வாகனத்திலிருந்த நபர்கள் வாகனத்தை …

தண்ணீர் பிரச்சனையை எதிர்கொள்ளும் நாடுகளில் இந்தியா 46-வது இடம்

விரிஸ்க் மாப்லெகிராஃப்ட் (Verisk Maplecroft) எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில், உலகளவில் தண்ணீர் பிரச்சனையை எதிர்கொள்ளும் ஆபத்துள்ள நாடுகளில் இந்தியா 46-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் 20 மிகப்பெரிய நகரங்களில் டெல்லி, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், நாசிக், ஜெய்ப்பூர், அகமதாபாத், இந்தூர் உள்ளிட்ட …

சிக்னேச்சர் பாலத்தின் பெயரை மறுபெயரிட வேண்டும் : கெஜ்ரிவாலிடம் காங்கிரஸ் கட்சியினர் வேண்டுகோள்

காங்கிரஸின் டெல்லி பிரிவு திங்களன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியது. அதில் ஷீலா தீட்சித்தின் மறைவிற்கு பிறகு சிக்னேச்சர் பாலத்தின் பெயரை மறுபெயரிட வேண்டும் என்ற வேண்டுகோலை முன்வைத்துள்ளது. அதன் கட்டுமானம் தீட்சித்தின் ஆட்சிக் காலத்தில் தொடங்கியதாகவும், அதனை அவர் …

ஐஸ்கிரீம் தள்ளுவண்டிக்குள் ஒளிந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

உத்தரப்பிரதேசம் பிலிபிட்டில் தனது நண்பர்களுடன் ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஐஸ்கிரீம் தள்ளுவண்டிக்குள் ஒளிந்தான். அவன் மறைந்து கொண்ட பிறகு ஐஸ்கிரீம் தள்ளுவண்டியின் கதவு வெளியில் இருந்து பூட்டப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதன் பிறகு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். நீண்ட நேரமாக வீடு …

மழைநீர் சேகரிப்பை கட்டாயமாக்கிய சண்டிகர் அரசு

சமுதாய வளாகங்கள் மற்றும் பிற கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு முறையை கட்டாயமாக நிறுவுவது குறித்து சண்டிகர் அரசு ஒரு செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளது. மேலும் சிறிய வீடுகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று ஆலோசகர் மனோஜ் பரிடா கூறினார். வீடுகளில் இரண்டு நீர் நுழைவு …

நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்..!!

இந்திய மருத்துவ கவுன்சிலை தேசிய மருத்துவ ஆணையமாக மாற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அந்த வகையில், மருத்துவ கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வரும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது. மருத்துவர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, …

கர்நாடகாவின் புதிய சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ விஷ்வேஷ்வர் ஹெட்கே போட்டியின்றி தேர்வு..!!!

கர்நாடக முதலமைச்சராக பதவியேற்ற பாஜக மாநில தலைவர் எடியூரப்பா கடந்த திங்கட்கிழமை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார். இதையடுத்து கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய சபாநாயகருக்கான தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் பாஜக எம்.எல்.ஏ விஷ்வேஷ்வர் …

கோவில் பாலை அருந்திய குழந்தைகள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி

உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஹபூர் நகரத்தில் உள்ள இந்தெர்ஹரி என்ற பகுதியில் அமைந்துள்ள கோவிலில் நேற்று சாவன் சிவராத்திரியை முன்னிட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. பூஜைகள் முடிந்த பிறகு கோவிலில் இருந்த குழந்தைகளுக்கு அபிசேஷகம் செய்யப்பட்ட பால் பிரசாதமாக வழங்கப்பட்டது. அந்த பாலை அருந்திய …