
ரிமா கல்லிங்கல் ஒரு இந்திய நடிகை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார், அவர் முக்கியமாக மலையாள சினிமாவில் பணியாற்றுகிறார். 2009ல் ரிது படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் மலையாள திரைப்பட இயக்குனர் ஆஷிக் அபுவை 2013ல் திருமணம் செய்து கொண்டார். இவர் தமிழில் யுவன் யுவதி, சித்திரை செவ்வானம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.