
பாடப்புத்தகங்களில் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை சேர்க்க என்சிஇஆர்டி அமைத்த உயர்மட்டக் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக அறிவியல் பாடத் திட்டத்தில் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை சேர்க்க கடந்த ஆண்டு ஏழு பேர் கொண்ட குழு பரிந்துரை செய்தது. வகுப்பறைச் சுவர்களில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை எழுதவும் பரிந்துரைக்கப்பட்டதாக குழுத் தலைவர் சி.ஐ.ஐசக்கை மேற்கோள் காட்டி தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 7 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ராமாயணம் மற்றும் மகாபாரதம் கற்பிப்பது முக்கியம் என்கிறார் ஐசக். சமூக அறிவியல் பாடத் திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை கற்பிக்க வேண்டும் என்று குழு பரிந்துரை செய்துள்ளது. டீன் ஏஜ் மாணவர்கள் தங்களின் சுயமரியாதையையும் தேசப்பற்றையும் வளர்த்துக்கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் நாட்டில் தேசபக்தி இல்லாததால் மற்ற நாடுகளில் குடியுரிமை பெற நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். எனவே, சொந்த வேர்களை புரிந்து கொண்டு, நாட்டின் மீதும், கலாசாரத்தின் மீதும் அன்பை வளர்த்துக் கொள்வது அவசியம்’: என்றார் ஐசக்.