
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் இவாஞ்சலின் சிந்தியா (24). இவருக்கு சென்னை சிவில் கோர்ட்டில் இளநிலை உதவியாளர் வேலை கிடைத்துள்ளது. இதனையடுத்து இவாஞ்சலின் வேப்பேரியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் அறை எடுத்து தங்கினார். நேற்று காலை வழக்கம் போல் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இரவு அவரது அறையில் தங்கியிருந்த தோழிகள் இருவர் பணி முடிந்து அறைக்கு வந்து பார்த்த போது இவாஞ்சலின் அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.