
ஆஸ்திரேலியா கோப்பையை வென்ற நிலையில், இந்திய அணிக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். உலக கோப்பை கிரிட்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘இந்திய அணி வீரர்களே… நீங்கள் போட்டியில் சிறப்பாக விளையாடினீர்கள். வெற்றியோ அல்லது தோல்வியோ, நாங்கள் உங்களை நேசிக்கிறோம். அடுத்த முறை வெல்வோம். உலகக் கோப்பை வெற்றிக்கு தகுதியான ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.