
கார்த்திகை மாதத்தில் 30 நாட்களும் பெரும்பாலான வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். திருக்கார்த்திகை நாளில் அனைத்து கோவில்களிலும் லட்சதீபம் ஏற்றப்பட்டு வழிபாடு செய்வார்கள். இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீப திருவிழா வருகிற 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்று முதல் 3 நாட்கள் வீடுகள் மற்றும் கோவில்களில் விளக்குகளால் அலங்காரம் செய்து வழிபாடு செய்யப்படும். இதையடுத்து திண்டுக்கல் அருகே நொச்சிஓடைப்பட்டியில் விதவிதமான விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.